Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
பண தட்டுப்பாடு நீங்கணுமா? அப்ப சங்கு பூவை ஒரு கிண்ணத்தில் போட்டு வீட்டின் இந்த திசையில் வையுங்க..
Vastu Tips In Tamil: வாஸ்து சாஸ்திரத்தில் ஒருவரது வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்க பல்வேறு வழிகள் கூறப்பட்டுள்ளன. வாஸ்து விதிகளை ஒருவர் தவறாமல் பின்பற்றினால், அது அந்த சூழலில் நேர்மறை ஆற்றலை நிரம்பியிருக்க செய்து, வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும்.
நீங்கள் உங்கள் வீட்டின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்க விரும்புகிறீர்களா? உங்கள் வீடு செல்வ செழிப்போடு இருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களா? அதற்கான வழிகளைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் அதற்கு சங்குப் பூ உதவி புரியும். வாஸ்து சாஸ்திரத்தில் சங்குப்பூ மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இது அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது.

சங்குப் பூ வீட்டிகு மகிழ்ச்சியை கொண்டு வருகிறது மற்றும் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலில் இருந்து குடும்ப உறுப்பினர்களை பாதுகாப்பதாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட சங்குப் பூவை குறிப்பிட்ட வழிகளில் பயன்படுத்தும் போது, அது வீட்டில் உள்ள பிரச்சனைகளை போக்கி, அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் அதிகரிக்கிறது. இப்போது இதுக்குறித்து காண்போம்.
அதிர்ஷ்டத்தை ஈர்க்க..
உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்க விரும்பினால், தினமும் குளிக்கும் நீரில் 5 சங்குப் பூவை போட்டு, அந்த நீரில் குளியுங்கள். இப்படி குளிக்கும் போது, அது கிரக நிலைகள் சாதகமாக இருக்க உதவி புரியும். அதுவும் அதிகாலையில் இதை செய்ய வேண்டும். சங்குப்பூ சிவபெருமான் மற்றும் விஷ்ணுவுடன் தொடர்புடையவை. அதுவும் நீல நிற சங்குப் பூ, சிவபெருமானின் ஒரு அவதாரமான ஆலகால விஷத்தை குடித்து உலகைக் காப்பாற்றிய நீலகண்டனைக் குறிக்கிறது.
வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க...
வீட்டில் நேர்மறை ஆற்றல் எப்போதும் நிரம்பியிருக்க சங்குப் பூவை ஒரு நீர் நிரப்பிய கிண்ணத்தில் போட்டு, வீட்டின் வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும். இப்படி வைப்பதன் மூலம் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்குவதோடு, வீட்டில் நுழைவதும் தடுக்கப்படும். இப்படி தினமும் சங்குப் பூவை மாற்றி வைத்து வந்தால், வீடு எப்போதும் நேர்மறை ஆற்றல் நிறைந்து, வீடு சண்டைகளின்றி இருக்கும்.
செல்வம் பெருக...
உங்கள் வீட்டில் பணப் பிரச்சனை அல்லது பணத் தட்டுப்பாடு அதிகமாக இருந்தால், தினமும் 5 சங்குப் பூவை லட்சுமி தேவியின் பாதங்களில் படைத்து, சில மணிநேரம் கழித்து, அந்த பூவை பணம் வைக்கும் லாக்கரில் வைத்தால், செல்வம் பெருகும். வேண்டுமானால், இந்த சங்குப் பூ கொடியை வீட்டில் வைத்தே வளர்க்கலாம். அதுவும் நீல நிற சங்குப் பூ செடியை வளர்த்தால் வீட்டில் செல்வம் அதிகரிக்கும்.
அதுவும் வீட்டில் சங்குப் பூ செடியை வளர்க்க நினைத்தால், அதை வியாழன் அல்லது வெள்ளிக் கிழமைகளில் செய்யுங்கள். இவ்விரு தினங்களும் விஷ்ணு மற்றும் லட்சுமி தேவிக்கு உரிய தினங்களாகும். இத்தினங்களில் வளர்க்கும் போது, வீட்டில் உள்ள பணப் பிரச்சனைகள் நீங்குவதோடு, கடன் தொல்லையும் நீங்கும்.
லட்சுமி தேவியை மகிழ்விக்க..
வீடு செல்வ செழிப்போடு இருக்க வேண்டுமானால், ஸ்ரீ யந்திரத்தின் அருகே சங்குப் பூவை வையுங்கள். இப்படி தினமும் செய்யும் போது, அது லட்சுமி தேவியை மகிழ்விப்பதோடு, லட்சுமி தேவியின் அருளால் குடும்ப உறுப்பினர்களின் செல்வமும் பெருகும்.
தோஷம் நீங்க...
அனைத்து தெய்வங்களின் ஆசியையும் பெற வேண்டுமா? அப்படியானால் சங்குப் பூவை ஒவ்வொரு பௌர்ணமியும் சந்திரனுக்கு படைத்து வழிபடுங்கள். மேலும் இந்த பூக்கள் ஒருவரது ஜாதகத்தில் உள்ள சனி தோஷத்தை நீக்கவும் உதவி புரிவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், பண பிரச்சனைகளை அதிகம் சந்திப்பதாக நம்பப்படுகிறது. எனவே இந்த தந்திரத்தை மேற்கொள்ளும் போது சனி தோஷத்தின் தாக்கம் குறையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications