Latest Updates
-
ராகு சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் முடிவுக்கு வரப்போகுதாம் -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ள பெண் மனைவியாக கிடைத்த ஆண்கள் உலகிலேயே அதிர்ஷ்டசாலியாம் -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. ஒரே மாதத்தில் உடல் எடையில் நல்ல மாற்றத்தை பாப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 03 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்குமாம் -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்... -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும் வேர்க்கடலை குடைமிளகாய் குருமா - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க -
செஃப் தீனா ஸ்டைல் இட்லி பொடியின் ஸ்பெஷலே கடைசியாக சேர்க்கும் இந்த ஒரு பொருள் தாங்க.. அது என்னன்னு பாருங்களேன். -
இந்த 3 மாதத்தில் பிறந்தவர்களுக்கு கெட்டவர்களை பார்த்தவுடனேயே கண்டறியும் அதிசய சக்தி இருக்குமாம் -
முகம் கருப்பா இருக்கா? பலாப்பழம் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. வெள்ளையாவீங்க..
வாஸ்துப்படி, இந்த 2 பொருட்களை மணி பிளாண்ட் செடியின் மண்ணில் வைத்தால், வீட்டில் பணம் பெருகுமாம்..
Vastu Tips In Tamil: வீட்டின் அழகை மேம்படுத்த பலர் பலவிதமான பொருட்களை வாங்கி வீட்டில் வைப்பார்கள். இன்னும் சிலர் செடிகளை வாங்கி வைப்பார்கள். நீங்களும் செடி பிரியர்கள் தானா? உங்கள் வீட்டிலும் பலவிதமான செடிகளை வாங்கி வளர்த்து வருகிறீர்களா? வாஸ்துப்படி, வீட்டில் வைக்கும் எந்த ஒரு பொருட்களுமே அந்த வீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நீங்கள் உங்கள் வீட்டில் செல்வம் பெருக வேண்டுமென்று ஆசைப்பட்டால், பண வரவை அதிகரிக்கும் சில செடிகளை வாங்கி வளர்க்கலாம். அதில் வீட்டில் செல்வத்தை ஈர்க்கும் ஒரு செடி தான் மணி பிளாண்ட். இந்த செடியை வீட்டில் வளர்த்து வருவதன் மூலம், வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகரிக்கும். இதன் விளைவாக வீட்டில் பணம் அதிகம் சேர்ந்து செழிப்பாக இருப்பதோடு, வீட்டில் உள்ளவர்களும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

இந்த மணி பிளாண்ட் செடியை வீட்டில் மட்டும் தான் வைக்க வேண்டும் என்பதில்லை. அலுவலகம் மற்றும் கடைகளிலும் வளர்க்கலாம். முக்கியமாக மணி பிளாண்ட் செடியை வளர்ப்பதாக இருந்தால், அதுவும் வீட்டில் செல்வத்தை அதிகரிக்க நினைத்தால், மணி பிளாண்ட் செடியின் மண்ணுடன் சில பொருட்களை வைக்க வேண்டும். இப்போது வாஸ்துப்படி, மணி பிளாண்ட் செடியுடன் எந்த பொருட்களை கலந்து வைக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
பால்
மணி பிளாண்ட்டை வீட்டில் வளர்க்கும் போது, அந்த செடியின் மண்ணில் பாலை சிறிது ஊற்ற வேண்டும். வாஸ்துப்படி, மணி பிளாண்ட் செடியின் மண்ணில் பாலை ஊற்றுவதன் மூலம், அது நல்ல நிதி நன்மைகளைத் தரும். கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தால், அதிலிருந்து விடுபடும் வாய்ப்பு கிடைக்கும். அதோடு லட்சுமி தேவியின் ஆசியும் கிடைக்கும் மற்றும் வீடும் செழிப்போடு இருக்கும்.
சர்க்கரை
மணி பிளாண்ட் செடியை வீட்டில் நடும் போது, அந்த மண்ணுடன் சிறிது சர்க்கரையை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்படி சர்க்கரையை சேர்ப்பதால், அது வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். வாஸ்துப்படி, மணி பிளாண்ட் செடியில் சர்க்கரையை சேர்ப்பதன் மூலம் வீட்டில் பண இழப்பு எதுவும் ஏற்படாது. மாறாக வீட்டில் செல்வம் பெருகும். இது தவிர ராகு தோஷம் இருந்தாலும் அது நீங்கும்.
மணி பிளாண்ட் செடியை வைக்க சிறந்த திசை எது?
வீட்டில் வைக்கும் எந்த ஒரு பொருளும், செடியும் சரியான திசையில் இருந்தால் தான், நற்பலனைப் பெற முடியும். அந்த வகையில் வாஸ்துப்படி, மணி பிளாண்ட் செடியை சரியான திசையில் வைத்து வளர்த்தால் தான், வீட்டில் பணம் அதிகம் சேரும்.மணி பிளாண்ட் செடியை வைக்க சிறந்த திசை தென்கிழக்கு திசை அல்லது மூலை ஆகும். இந்த திசையின் அதிபதி விநாயகர் மற்றும் சுக்கிரன் இத்திசையின் கிரகமாக கருதப்படுகிறது. இந்த திசையில் மணி பிளாண்ட் செடியை வைத்து வளர்த்தால், அது வீட்டில் செல்வம், மகிழ்ச்சி, செழிப்பு ஆகியவற்றைக் கொண்டு வரும்.
சிவப்பு கயிற்றை கட்டவும்
மணி பிளாண்ட் செடியை வீட்டில் நட்ட பின்னர், அதன் வேர் பகுதியில் ஒரு சிவப்பு நூலைக் கட்ட வேண்டும். வாஸ்துப்படி, மணி பிளாண்ட் செடியில் சிவப்பு கயிற்றை கட்டும் போது, மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். அதற்கு அதிகாலையில் எழுந்து குளித்த பின் தூய்மையான ஆடைகளை அணிய வேண்டும். பின் லட்சுமி தேவியின் முன் ஒரு சிவப்பு கயிற்றினை வைத்து முறைப்படி வணங்கி, கற்பூரம் ஏற்றி ஆரத்தி காண்பித்து, அதன் பின் அந்த கயிற்றை மணி பிளாண்ட் செடியில் கட்ட வேண்டும். இப்படி கட்டிய பின் சில நாட்களிலேயே சுப செய்திகளைப் பெறுவதைக் காணலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications