Latest Updates
-
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம்
வாஸ்துப்படி வீட்டு வாசலில் இதை வெச்சா.. பணம் அதிகமா சேருமாம்.. ட்ரை பண்ணி பாருங்க..
Vastu Tips In Tamil: நமது வாழ்வில் வாஸ்து சாஸ்திரம் மிகவும் முக்கிய பங்கை வகிக்கிறது. வாஸ்து விதிகளை ஒருவர் தவறாமல் பின்பற்றி வந்தால், அவரைச் சுற்றி நேர்மறை ஆற்றல் நிரம்பி, அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவதோடு, வாழ்க்கையில் பலவிதமான வெற்றிகளைக் காண்பார். ஆனால் நம்மைச் சுற்றி வெறும் நேர்மறை ஆற்றல் மட்டும் நிறைந்திருப்பதில்லை, எதிர்மறை ஆற்றலும் தான் உள்ளன.
அதுவும் நாம் குடியிருக்கும் வீட்டில் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகம் இருக்கும். ஒருவரது வீட்டில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருந்தால் தான், சம்பாதிக்கும் பணம் வீட்டில் நிலைத்திருக்கும் மற்றும் வீடு செல்வ செழிப்போடு இருக்கும். வாஸ்து சாஸ்திரத்தில் வீட்டில் செல்வம் அதிகரிக்க ஒருசில நடவடிக்கைகள் குறித்து கூறப்பட்டுள்ளன.

ஒரு வீட்டில் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல்களானது தலைவாசல் வழியாகத் தான் நுழைகின்றன. அப்படிப்பட்ட தலைவாசலில் ஒருசில விஷயங்களை வைப்பதன் மூலம், அந்த வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல் அதிகரித்து, செல்வமும் அதிகம் சேரும். இப்போது வீட்டில் பணம் அதிகம் சேர வீட்டு வாசலில் என்னவெல்லாம் வைக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
கிண்ணத்தில் நீர்
வீட்டிற்குள்ளே நுழையும் இடத்தில், வீட்டு வாசலுக்கு எதிரில் ஒரு கிண்ணத்தில் நீரை நிரப்பி, அதில் வண்ண மலர்களை வைப்பது மிகவும் நல்லது. இப்படியான செயல் வீட்டில் செல்வத்தையும், செழிப்பையும் ஈர்க்கிறது மற்றும் வீட்டு வாசலும் அழகாக காட்சியளிக்கும். நீரானது வெப்பம் மற்றும் மின்சாரத்தின் மோசமான கடத்தி என்பதால், எதிர்மறை ஆற்றலுக்கும் இது ஒரு மோசமான கடத்தியாகும். அதாவது இது வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றலை வீட்டிற்குள் நுழையவிடாமல் தடுக்கும். இதன் விளைவாக வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, வீடும் செல்வ செழிப்போடு இருக்கும்.
தோரணம்
பொதுவாக வீட்டில் ஏதேனும் விசேஷம் மற்றும் பண்டிகை நாட்களில் தான் மாவிலை தோரணங்களை வீட்டு வாசலில் கட்டுவோம். இது வீட்டிற்கு நல்ல தோற்றத்தைக் கொடுப்பதோடு, வீட்டினுள் எதிர்மறை ஆற்றலை நுழைய விடாமல் தடுக்கிறது. இம்மாதிரியான தோரணங்களை விசேஷ நாட்களில் தான் தொங்கவிட வேண்டும் என்பதில்லை, வழக்கமாகவும் இதை வீட்டு வாசலில் கட்டலாம். இலைகள் காயும் போது, அந்த இலைகளை உடனே அப்புறப்படுத்தி, புதிய இலைகளை மாற்ற வேண்டும். இப்படி செய்வது வீட்டை கண் திருஷ்டியில் இருந்து பாதுகாக்கும்.
லட்சுமியின் பாதங்கள்
வீட்டில் செல்வம் அதிகம் சேர வேண்டுமானால், லட்சுமி தேவியின் ஆசி தேவை மற்றும் வீட்டில் லட்சுமி தேவி குடியேற வேண்டும். பலரும் வீட்டிற்குள் லட்சுமி தேவி வர வேண்டும் என்பதற்கான லட்சுமியின் பாதங்களைக் கொண்ட ஸ்டிக்கர்களை வீட்டு வாசலில் ஒட்டுவார்கள். இப்படி வைக்கும் போது, அது அந்த வீட்டில் செல்வத்தின் வளர்ச்சியையும் வீட்டின் செழிப்பையும் உறுதி செய்கிறது.
ஸ்வஸ்திக் சின்னம்
வீட்டின் நுழைவாயிலில் ஸ்வஸ்திக் சின்னத்தை வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த சின்னமானது வீட்டிற்கு அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் கொண்டு வருகிறது. மேலும் ஸ்வஸ்திக் சின்னமானது நோய் தாக்கத்தைக் குறைக்கிறது மற்றும் வீட்டில் மகிழ்ச்சியையும், செல்வத்தையும் அதிகரிக்கிறது.
பெரிய நுழைவாயில் கதவு
ஒருவரது வீட்டின் நுழைவாயில் கதவானது, வீட்டில் உள்ள மற்ற கதவுகளை விட பெரியதாக இருப்பது மிகவும் மங்களகரமானதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அதுவும் இந்த கதவானது கடிகார திசையில் திறந்தால், அது எதிர்மறை ஆற்றலைக் குறைக்கிறது. முக்கியமாக வீட்டின் தலைவாசல் நிலப்படியானது சற்று உயரமாக இருக்க வேண்டும். இப்படி இருந்தால், அந்த வீடு செல்வ செழிப்போடு இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications