Latest Updates
-
அடுத்தடுத்து நட்சத்திரத்தை மாற்றும் 3 கிரகங்கள்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
வெயிலால் முகம் டல்லாகிடுச்சா? அப்ப 1 ஸ்பூன் அரிசி மாவு வெச்சு தினமும் நைட் இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நீங்க அட்சய திருதியை நாளில் என்ன வாங்கணும்-ன்னு சொல்றோம். .. -
நாவூறும்.. சேலத்து மாங்காய் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
Mango Benefits: மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளும்.. மாம்பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகளும்.. -
100 ஆண்டுகள் கழித்து அட்சய திருதியை அன்று உருவாகும் 5 ராஜயோகங்கள்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கபோகுது! -
ரவா இட்லியும், மல்லி சட்னியும் - சட்டுன்னு 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 18 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம் -
100 ஆண்டுக்கு பின் மேஷ ராசியில் உருவாகும் திரிகிரக யோகம் இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
வாஸ்து படி இந்த செடிகளில் ஒன்றை உங்கள் வீட்டில் வளர்த்தால் பணமும், அதிர்ஷ்டமும் தேடிவருமாம்
செல்வம் மற்றும் அதிர்ஷ்டத்தை ஈர்க்கணுமா? அப்ப வீட்டு வாசக் கதவில் இத ஒட்டி வையுங்க போதும்...
Vastu Tips In Tamil: நாம் குடியிருக்கும் வீடு நேர்மறை ஆற்றல் நிறைந்து இருந்தால் தான், அந்த வீட்டில் செல்வம் பெருகும் மற்றும் வீட்டில் உள்ளோர் முன்னேற்றத்தைக் காண்பார்கள். முக்கியமாக ஒரு வீட்டில் நேர்மறை ஆற்றல்களானது வீட்டின் பிரதான வாசலின் வழியாகத் தான் நுழைகிறது.
எனவே வீட்டில் நேர்மறை ஆற்றல் நிரம்பியிருக்க வேண்டுமானால், வீட்டு வாசலை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். அதோடு வீட்டின் பிரதான கதவானது சரியான திசையை நோக்கி இருக்க வேண்டும். தவறான திசையில் இருந்தால், அதுவே வாஸ்து தோஷத்தை உண்டாக்கும்.

எதுவாயினும், வீட்டின் பிரதான வாசல் கதவில் குறிப்பிட்ட சில அடையாளங்களை தொங்கவிடுவதன் மூலம், அந்த வீட்டில் செல்வம் பெருகுவதோடு, எப்போதும் அந்த வீடு அதிர்ஷ்டமானதாக இருந்து, அந்த வீட்டில் உள்ளோர் தங்கள் தொழிலில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். இப்போது எந்த அடையாளங்களை வீட்டின் பிரதான வாசலில் வைக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
ஓம்
ஓம் என்னும் அடையாளமானது ஒரு மங்களகரமான அறிகுறி. இந்த அடையாளத்தை வீட்டின் பிரதான வாசலில் வைத்தால், அது வீட்டின் சுற்றுப்புறத்தை மேம்படுத்துவதோடு, வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதை உறுதி செய்கிறது. முக்கியமாக இந்த அடையாளம் வீட்டில் உள்ள வாஸ்து தோஷத்தை நீக்கி, வீட்டில் செல்வம் அதிகரிப்பதற்கான வழியை திறக்கிறது.
ஒருவேளை உங்களால் இந்த அடையாளத்தை வாங்க முடியாவிட்டால், மஞ்சள் மற்றும் குங்குமத்தைப் பயன்படுத்தி, ஓம் அடையாளத்தை வரையலாம். நீங்கள் நிரந்தரமான அடையாளத்தை உருவாக்க விரும்பினால், பெயிண்ட்டைப் பயன்படுத்தலாம்.
சுப-லாப அடையாளம்
இந்தியாவில் உள்ள பெரும்பாலான வீடுகளின் பிரதான வாசலில் சுப-லாப அடையாளங்கள் இருப்பதைக் காணலாம். அதுவும் இந்த அடையாளங்களை வீட்டில் ஏதேனும் விஷேசம் என்றால் தொங்கவிடுவார்கள். மேலும் இந்த அடையாளங்கள் பழையதாகிவிட்டால், அவற்றை தீபாவளி அல்லது நவராத்திரி நாட்களில் மாற்றுவார்கள்.
சுப-லாப அடையாளங்களானது விநாயக பெருமானின் மகன்களாக நம்பப்படுகிறது. இதில் சுப என்பது புனிதமான மற்றும் மங்களகரமானதைக் குறிக்கிறது. அதே சமயம் லாப என்னும் அடையாளம் செல்வம் மற்றும் செழிப்பைக் குறிக்கிறது. வாஸ்துப்படி, இவ்விரண்டையும் வீட்டின் பிரதான வாசலில் வைக்கும் போது, வீட்டில் செல்வமும், அதிர்ஷ்டமும் பெருகும்.
ஸ்வஸ்திக் சின்னம்
இந்து மக்கள் ஸ்வஸ்திக் சின்னத்தை புனிதமானதாக கருதுகின்றனர். இந்த அடையாளத்தை வீட்டு வாசலில் வைத்தால், அது வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரிக்கும். பெரும்பாலான இந்திய வீடுகளின் பிரதான வாசலில் இந்த அடையாளத்தைக் காணலாம். இப்படி வைப்பதன் மூலம் வெற்றி மற்றும் பண வரவிற்கான பாதையில் உள்ள தடைகள் நீங்கும் ஆகவே இந்த ஸ்வஸ்திக் சின்னத்தையும் வீட்டு வாசலில் வைக்கலாம்.
விநாயகரின் அடையாளம்
விநாயக பெருமான் தடைகளை நீக்குபவராக இந்து மக்கள் நம்புகின்றனர். எனவே தான் இவர் விக்னஹர்தா என்று அழைக்கப்படுகிறார். விநாயக பெருமானை ஒருவர் மனதார வணங்கினால், அவர் தனது பக்தர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் ஞானத்தையும் தருவதாக நம்பப்படுகிறது. மேலும் ஒவ்வொரு பூஜையின் தொடக்கத்திலும் முதலில் விநாயகரைத் தான் வணங்குவோம். இப்படியான முதன்மை கடவுளான விநாயகரை வீட்டின் பிரதான வாசலில் வைத்தால், அது வீட்டிற்கு செல்வத்தையும் செழிப்பையும் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











