Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
வீட்டில் பணம் அதிகம் சேரணுமா? அப்ப மண் பானையை வாங்கி வீட்டின் இந்த இடத்துல வையுங்க...
Vastu Tips In Tamil: வாஸ்து சாஸ்திரத்தில் ஒரு வீடு செல்வ செழிப்போடு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ, வீட்டில் வைக்கப்படும் ஒவ்வொரு பொருட்களும் எந்த திசையில், எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பது குறித்த சில விதிகள் கூறப்பட்டுள்ளன. வாஸ்துப்படி, நாம் குடியிருக்கும் வீட்டில் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் சூழ்ந்திருக்கும்.
எந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் நிரம்பியுள்ளதோ, அந்த வீடு செல்வ செழிப்போடு மகிழ்ச்சியாக இருக்கும். அதுவே எதிர்மறை ஆற்றல் நிரம்பியிருந்தால், சண்டை சச்சரவுகள் அதிகமாக இருக்கும். ஆகவே வாழ்க்கை இனிமையாகவும், செழிப்போடும் இருக்க வேண்டுமானால் வாஸ்து விதிகளைப் பின்பற்ற வேண்டும்.

அந்த வகையில் வீட்டில் மண் பானை இருப்பது மிகவும் நல்லது. அதுவும் அந்த மண் பானையை வீட்டில் சரியான திசையில் அல்லது இடத்தில் வைக்கும் போது, அந்த வீட்டில் பணம் பெருகும். இப்போது மண் பானை தொடர்பான சில வாஸ்து விதிகளைக் காண்போம்.
வாஸ்து சாஸ்திரத்தில் ஒரு எளிய வழியில் பணக்காரராவதற்கான வழிகள் கூறப்பட்டுள்ளன. அந்த வழிகளைப் பின்பற்றும் போது, விரைவில் பணக்காரராகலாம். அதில் பணக்காரராக உதவி புரியும் ஒரு பொருள் தான் மண் பானை. அந்த மண் பானையை வீட்டில் சரியான இடத்தில் வைக்கும் போது, அது விரைவில் செல்வந்தராக்கும்.
* வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் மண் பானை இருந்தால், அந்த வீட்டில் லட்சுமி தேவி எப்போதும் குடியிருப்பாள். இதன் விளைவாக வீட்டில் பணம் அதிகம் சேரும். பணப் பிரச்சனைகள் நீங்கும். ஆனால் அதற்கு அந்த பானையில் எப்போதும் நீர் நிரம்பியிருக்க வேண்டும். பானையானது காலியாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
* வாஸ்துப்படி, லட்சுமி தேவி மற்றும் குபேரர் குடியிருக்கும் திசை வடக்கு. எனவே இந்த வடக்கு திசையில் எப்போதும் நீர் நிரம்பிய மண் பானையை வைத்திருங்கள். பானையில் எப்போதும் நீர் நிரம்பியிருந்தால், அது இந்த திசையில் குடியிருக்கும் தெய்வங்களை மகிழ்ச்சியடையச் செய்து, வீடு செல்வ செழிப்போடு மகிழ்ச்சியாக இருக்கும்.
* வடக்கு திசையில் மண் பானையை வைத்து, அந்நீரை சமைக்கவும், குடிக்கவும் பயன்படுத்த வேண்டும். இப்படி பயன்படுத்தும் போது, பானையில் நீர் குறையும் போது, நீரை நிரப்ப வேண்டும். இப்படி செய்யும் போது, பணம் செலவானாலும், பண வரவு இருந்து கொண்டே இருக்கும். ஒருவேளை பானை நீரை பயன்படுத்த விருப்பமில்லை என்றால், அதை செடிகளுக்கு ஊற்றலாம். ஆனால் அடிக்கடி பானை நீரை மாற்ற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
* சமையலறையில் மண் பானை வைத்து, அந்த பானை நீரைப் பயன்படுத்தி வந்தால், மாலை வேளையில் துளசி செடிக்கு அருகில் தீபம் ஏற்றிய பின், அந்த மண் பானைக்கு அருகிலும் ஒரு தீபத்தை ஏற்ற வேண்டும். இப்படி செய்வதன் மூலம், லட்சுமி தேவியின் ஆசி எப்போதும் இருக்கும்.
* சமையலறையில் மண் பானையை வைப்பதாக இருந்தால், அதை அடுப்பிற்கு அருகில் வைக்காதீர்கள். ஏனெனில் எப்போதும் நீரையும் நெருப்பையும் அருகில் வைத்திருக்கக்கூடாது. இல்லாவிட்டால், அதுவே பெரிய வாஸ்து தோஷத்தை உருவாக்கி, வீட்டில் பல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
