Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்..
வீட்டின் இந்த திசையில் மாதுளை மரத்தை வெச்சா.. வீட்டில் பணப் பற்றாக்குறையே வராதாம் தெரியுமா?
Vastu Tips For Pomegranate Tree In Tamil: நமது வாழ்க்கையில் வாஸ்து சாஸ்திரம் முக்கிய பங்கை வகிக்கிறது. எப்படி மனிதன் உயிர் வாழ உணவு, உடை, இருப்பிடம் ஆகிய மூன்றும் மிகவும் இன்றியமையாததோ, அதேப் போல் இருப்பிடமானது வாஸ்துப்படி இருக்க வேண்டும். மேலும் அந்த இருப்பிடத்தில் வைக்கப்படும் பொருட்கள் வாஸ்து விதிகளின் படி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான், அவ்வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும்.
முக்கியமாக நீங்கள் உங்கள் வீட்டில் செடிகளை வளர்க்க விரும்புபவராயின், வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள விதிகளின் படி, அவற்றை சரியான திசையில், இடத்தில் வையுங்கள். அப்படி வைப்பதன் மூலம் வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்கள் நீங்குவதோடு, வாழ்க்கையும் பிரச்சனைகளின்றி சந்தோஷமாகவும், செழிப்பாகவும் இருக்கும்.

அதுவும் குறிப்பிட்ட செடிகள் மற்றும் மரங்களை வீட்டில் வைத்து வளர்த்து வந்தால், அந்த வீட்டில் பணப்பிரச்சனையே இருக்காது மற்றும் அந்த வீட்டில் உள்ளோர் நல்ல வளர்ச்சியை காண்பதாக கூறப்படுகிறது. அதில் துளசி, மணி பிளாண்ட், பாம்பு செடி போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆனால் உங்களுக்கு மாதுளை செடியை வீட்டில் வைக்க விருப்பமிருந்தால், அதை தாராளமாக வைக்கலாம்.
ஏனெனில் வாஸ்து சாஸ்திரத்தின் படி, மாதுளை செடியை வீட்டில் வைப்பது, விஷ்ணு மற்றும் லட்சுமி தேவியின் ஆசியைப் பெற வைத்து, வீட்டில் மகிழ்ச்சியையும், அமைதியையும் பராமரிப்பதோடு, வீட்டில் பணப் பற்றாக்குறையே ஏற்படாது. ஆனால் அதற்கு மாதுளை செடி தொடர்பான வாஸ்து விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
செழிப்பின் அடையாளம்
வாஸ்துப்படி, மாதுளை மரமானது அதிர்ஷ்டம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றின் அடையாளமாக கருதப்படுகிறது. இந்த மரத்தில் வளரும் மாதுளை சிவப்பு நிறம் என்பதால் அது வாழ்க்கையில் பிரகாசத்தைக் கொண்டு வருவதோடு, நல்ல செழிப்பையும் கொண்டு வரும்.
எந்த இடத்தில் மாதுளை மரத்தை நட வேண்டும்?
வாஸ்துப்படி, மாதுளை மரத்தை வீட்டிற்கு முன் அல்லது நுழைவாயிலி வலது பக்கத்தில் நடுவது தான் மிகவும் நல்லது. வீட்டின் இந்த இடத்தில் மாதுளை மரத்தை வைத்தால் லட்சுமி தேவி மகிழ்ச்சி அடைவார். மேலும் இந்த இடத்தில் நடும் போது, அது வீட்டில் மகிழ்ச்சியையும், செழிப்பையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் தரும். முக்கியமாக வீட்டில் மாதுளை செடியை வளர்த்தால், வீட்டில் எப்போதும் பணப்பற்றாக்குறையே வராது.
எந்த திசையில் மாதுளை மரத்தை நட வேண்டும்?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, மாதுளை செடியை வீட்டில் வைக்க சிறந்த திசை தென்கிழக்கு திசை தான். இந்த திசையில் மாதுளை செடியை வைத்து வளர்த்து வந்தால், அந்த வீட்டின் நிதி நிலை வலுவடையும் மற்றும் பணப்பிரச்சனை எப்போதும் வராது.
எந்த திசையில் மாதுளை மரத்தை நடக்கூடாது?
வாஸ்துப்படி, மாதுளை மரத்தை எப்போதும் தெற்கு திசையில் நடக்கூடாது. அப்படி இந்த திசையில் வைத்தால், அதன் விளைவாக வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகரிக்கும். எதிர்மறை ஆற்றல் ஒரு வீட்டில் அதிகம் நிரம்பியிருந்தால், அது அந்த வீட்டில் உள்ளோரிடையே பிரச்சனைகளை அதிகரித்து, எப்போதும் வீடு அமைதியிழந்து இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications