Latest Updates
-
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
உப்புடன் 4 கிராம்பை போட்டு வீட்டின் இந்த இடத்துல வெச்சா பணம் அதிகம் சேருமாம்... ட்ரை பண்ணி பாருங்க..
Vastu Tips In Tamil: ஒருவர் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் வீட்டில் நீடித்து நிலைக்காவிட்டால், அது எப்படி இருக்கும்? நிச்சயம் அது மன வேதனையை அளிக்கும். உங்கள் வீட்டிலும் அப்படி பணம் நிலைத்திருப்பதில்லையா? அப்படியானால் உங்கள் வீட்டில் பணம் நிலைத்திருக்கவும், அதிகம் சேரவும் உப்பைக் கொண்டு சில சடங்குகளை செய்யுங்கள்.
உணவில் சுவைக்காக சேர்க்கப்படும் உப்பானது ஆன்மீக நன்மைகளைக் கொண்டுள்ளது என்பது தெரியுமா? அதுவும் இது வீட்டில் உள்ள கெட்ட சக்திகளை வெளியேற்றி, வீட்டில் செல்வம் அதிகரிக்க உதவும் என்பது தெரியுமா? ஆம், நீங்களும் உங்கள் வீட்டில் பணம் அதிகம் சேர வேண்டுமென விரும்பினால், உப்பை ஒருசிலவாறு பயன்படுத்துங்கள். கீழே வீட்டில் பணம் அதிகம் சேர்வதற்கு உப்பை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

வழி #1
உங்கள் வீட்டில் பணம் வந்தவுடனேயே செலவாகிறதா? அப்படியானால் வீட்டின் மூலைகளில் சிறிது கல் உப்பை வையுங்கள். இப்படி வைப்பதன் மூலம், பணம் செலவாக காரணமான கெட்ட சக்திகள் வீட்டில் இருந்து வெளியேற்றப்படும். மேலும் ஒரு சிறிய கண்ணாடி பௌலில் ஒரு கையளவு கல் உப்பை நிரப்பி, அதை வீட்டின் நடுப்பகுதியில் வையுங்கள். இதனால் வீட்டில் செல்வம் பெருகும். முக்கியமாக இந்த உப்பை 10 நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.
வழி #2
உங்கள் பர்ஸில் பணம் நிலைத்திருப்பதில்லையா? வந்த வேகத்திலேயே செலவாகிவிடுகிறதா? அப்படியானால் ஒரு சிறிய பிளாஸ்டிக் பையில் ஒரு டீஸ்பூன் கல் உப்பை போட்டு, அதை உங்கள் பர்ஸில் ரகசியமான இடத்தில் வையுங்கள். இப்படி வைக்கும் உப்பானது மற்றவர்களின் பார்வைக்கு படக்கூடாதவாறு இருக்க வேண்டும். இந்த உப்பை 10 நாட்கள் கழித்து மாற்ற வேண்டும். இப்படி செய்தால், பர்ஸில் பணம் அதிகம் சேரும்.
வழி #3
ஒரு மாதம் முழுவதும் உங்கள் கையில் பணம் அதிகம் புரள வேண்டுமானால், அதற்கு இந்த உப்பு பரிகாரம் பெரிதும் உதவி புரியும். அதுவும் மாதத்தின் முதல் ஞாயிற்றுகிழமையில் இந்த உப்பு பரிகாரத்தை செய்ய வேண்டும். அதற்கு ஒரு கண்ணாடி டம்ளரில் மூன்றில் ஒரு பகுதி உப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதே அளவில் நீரை ஊற்றி, ஒரு மணிநேரம் அப்படியே விட வேண்டும்.
ஒரு மணிநேரம் கழித்து, அந்த உப்பு நீரால் கைகளை தேய்த்து கழுவ வேண்டும். அப்படி கைகளை தேய்த்து கழுவும் போது மனதில் நம்பிக்கையுடன் பணம் எப்போதும் கையில் நிலைத்திருக்க வேண்டும், தேவையில்லாத செலவுகளை செய்யக்கூடாது என்று நினைக்க வேண்டும். அதுவும் இந்த நீரை வீட்டின் தோட்டப்பகுதி அல்லது பூந்தொட்டியுள்ள பகுதியில் கழுவ வேண்டும். பின் கைகளை மூன்று முறை தட்ட வேண்டும். இந்த செயலை அந்நாளின் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம்.
வழி #4
உங்கள் வீட்டில் பணப்பிரச்சனை அதிகமாக உள்ளதா? அப்பிரச்சனை அனைத்திற்கும் தீர்வு காண வேண்டுமா? அப்படியானால் பின்வரும் உப்பு கிராம்பு பரிகாரம் செய்யுங்கள். அதற்கு ஒரு கண்ணாடி பௌல் அல்லது டம்ளரில் கல் உப்பை போட்டு, அதில் 4-5 கிராம்பை சொருகி, வீட்டின் எந்த மூலையில் வேண்டுமானாலும் வைக்கலாம். இதனால் வீட்டில் பணம் அதிகம் சேரும். மேலும் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி, வீடு நேர்மறை ஆற்றல் நிரம்பியிருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications