Latest Updates
-
சூரியன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், வெற்றிகளையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
1 கப் மீல் மேக்கர் இருந்தா இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - சாதம், சப்பாத்தி எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி குழந்தைகள் படிப்பில் கெட்டிக்காரர்களாக பெரிய சாதனையாளர்களாக வருவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முட்டை சால்னாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
மின்விசிறிகளில் ஏன் எப்போதும் மூன்று இறக்கைகள் மட்டுமே உள்ளது தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
1 கப் பாஸ்மதி அரிசி இருந்தா இந்த காஷ்மீர் பேமஸ் யக்னி புலாவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
ஜூலை 16-ல் நிகழும் சூரியன்-சந்திரன் அரிய சேர்க்க: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்க போகுதாம் - உங்க ராசி என்ன? -
இந்த அறிகுறிகளில் ஒன்று உங்கள் வீட்டில் இருந்தாலும் நீங்க பணக்கஷ்டத்தில் சிக்க போறீங்களாம் - சாணக்கிய தந்திரம் -
சேமியா உப்புமாவும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஜூலை 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்குமாம்
வாஸ்துப்படி இந்த ஓவியங்களை வீட்டின் ஹாலில் வெச்சா... செல்வம் குவியுமாம்.. நீங்களும் ட்ரை பண்ணுங்க..
Vastu Tips In Tamil: வாஸ்துப்படி, வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருட்கள் மற்றும் அந்த பொருட்கள் இருக்கும் இடம் ஆகியவை அந்த வீட்டில் இருக்கும் நேர்மறை, எதிர்மறை ஆற்றல்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது துடைப்பமாகட்டும், ஒவியங்களாகட்டும், மருந்துகளாகட்டும், செடிகளாகட்டும் அனைத்துமே அந்த வீட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
குடியிருக்கும் வீட்டில் நேர்மறை ஆற்றல் நிரம்பியிருந்தால் தான், அந்த வீட்டில் உள்ளோர் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண்பதோடு, வீடு செல்வ செழிப்போடு இருக்கும். ஒவ்வொருவருமே தங்கள் வீட்டை அழகாக வைத்துக் கொள்ள விரும்புவோம். அதற்காக பலவிதமான பொருட்களை வாங்கி வீட்டை அலங்கரிப்போம்.

அதே சமயம் சிலருக்கு செடிகளால் வீட்டை அலங்கரிக்க பிடிக்கும். இன்னும் சிலருக்கு ஓவியங்கள் மூலம் வீட்டை அழகாக வெளிக்காட்ட பிடிக்கும். உங்களுக்கு அப்படி ஓவியங்கள் பிடிக்குமானால் அல்லது ஓவியங்களை சேகரிப்பவரானால், உங்கள் வீட்டில் செல்வம் பெருகவும், நேர்மறை ஆற்றல் அதிகரிக்கவும் எந்த மாதிரியான ஓவியங்களை வீட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
1. குதிரை ஓவியங்கள்
வாஸ்து சாஸ்திரத்தில் ஓடும் குதிரைகளின் ஓவியங்கள் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இது நல்ல அதிர்ஷ்டம், தொழில், திருமணம், சந்தோஷம் போன்றவற்றைக் குறிக்கிறது. அதுவும் 7 குதிரைகள் ஓடும்படியான ஓவியங்களை வீட்டில் வைத்திருந்தால், அது வாழ்வில் நிதி நிலையை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவும். அதுவும் 8 குதிரைகள் ஓடும் ஓவியத்தை வைத்தால், அது அந்த வீட்டில் உள்ளோருக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். முக்கியமாக இந்த ஓவியங்களை ஹாலில் வடக்கு அல்லது கிழக்கு திசையில் தொங்கவிடலாம்.
2. கோய் மீன் ஓவியம்
கோய் மீன் ஓவியமானது சமநிலை மற்றும் நல்லிணக்கத்தைக் குறிக்கிறது. வாஸ்து மற்றும் ஃபெங்சூயி படி இது அதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது. இந்த ஓவியத்தை ஹாலின் மேற்கு திசையில் தொங்க விட்டால், அது கிரக நிலைகளை சாதகமாக்கி, வாழ்வில் செழிப்பைக் கொண்டு வரும்.
மேலும் இந்த மாதிரியான ஓவியம் செல்வம் மற்றும் புதிய நல்ல வாய்ப்புக்களைக் குறிக்கிறது. நீங்கள் நீண்ட நாட்களாக வேலை கிடைக்காமல் சுற்றிக் கொண்டிருந்தால் அல்லது பண பிரச்சனைகளால் அவதிப்பட்டு கொண்டிருந்தால், இந்த மீன் ஓவியத்தை வீட்டில் தொங்கவிடுங்கள். இதனால் புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
3. ராதா கிருஷ்ணன் ஓவியம்
வாஸ்துப்படி, ராதா கிருஷ்ணன் ஓவியங்களை வீட்டின் எந்த அறையில் வேண்டுமானாலும் தொங்கவிடலாம். ஆனால் அந்த ஓவியங்களை வடக்கு சுவற்றில் தொங்க விட வேண்டும். இதனால் அது வீட்டில் அமைதியும், செழிப்பையும் ஈர்க்கும். இந்த மாதிரியான ஓவியங்களை வீட்டின் படுக்கை அறையில் தொங்கவிட்டால், காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். உறவுகளில் உள்ள பிரச்சனைகள் நீங்கும். அன்பு பெருகும்.
4. ஆந்தை ஓவியம்
வாஸ்து மற்றும் ஜோதிடத்தை எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு விலங்கும் ஒவ்வொன்றைக் குறிக்கிறது. அவற்றில் சில விலங்குகள் புனிதமானதாகவும், இன்னும் சில மோசமானதாகவும் கருதப்படுகிறது. அதில் வெள்ளை நிற ஆந்தை வாழ்வில் உள்ள மாற்றத்தைக் குறிக்கிறது.
இந்த வெள்ளை நிற ஆந்தை ஒவியத்தை வீட்டில் வைத்திருந்தால், அது அதிர்ஷ்டத்தையும், ஞானத்தையும் குறிக்கிறது. எனவே இதை வீட்டின் ஹால், அலுவலகம் அல்லது குழந்தைகளின் படுக்கை அறையில் தெற்கு திசையில் தொங்கவிட வேண்டும். இப்படி வைப்பதன் மூலம், அது வாழ்வில் செழிப்பை கொண்டு வரும்.
5. நீர்வீழ்ச்சி ஓவியம்
நீர்வீழ்ச்சி ஓவியங்கள் நேர்மறை ஆற்றல் அதிகம் ஈர்க்கும். அதுவும் இந்த மாதிரியான ஓவியங்களை வீட்டின் ஹாலில் வைப்பதன் மூலம், வீட்டில் அமைதி நிலவும். அதோடு, இது நல்ல அதிர்ஷ்டம், செல்வம், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் போன்றவற்றையும் கொண்டு வரும். அதுவும் இந்த மாதிரியான ஓவியத்தை ஹாலின் வடக்கு சுவற்றில் தொங்கவிட வேண்டும்.



Click it and Unblock the Notifications