Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
பணம் எண்ணும்போது இந்த தப்பை தெரியாமகூட பண்ணாதீங்க... இல்லனா பணக்கஷ்டத்தால் படாதபாடு படுவீங்க...!
Vastu Tips for Money: வாழ்க்கையில் அனைவருமே தங்கள் நிதி நிலைமையைப் பற்றி கவலைப்படுகிறார்கள். நாம் அனைவரும் வாழ்க்கையில் நிதிப் பாதுகாப்பை விரும்புகிறோம். இருப்பினும், வாஸ்து வழிகாட்டுதலின் உதவியுடSன், ஒருவர் தங்கள் வாழ்க்கையை நிதி ஸ்திரத்தன்மையுடன் வாழ முடியும்.
லட்சுமி தேவியின் அருள் அபரிமிதமான செல்வத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது. எனவே, லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைப் பெறவும், அதை தக்கவைத்துக் கொள்ளவும், சில தவறுகளைத் தவிர்ப்பது முக்கியம்.

வாஸ்து சாஸ்திரத்தின்படி, நிதி விஷயத்தில் மக்கள் செய்யும் பல தவறுகள் தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் பாதிக்கின்றன. எனவே வாஸ்து சாஸ்திரத்தின்படி பணத்தை எண்ணும்போது நீங்கள் தவிர்க்க வேண்டிய சில தவறுகள் உள்ளன. அவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.
பணத்தைக் கணக்கிடும்போது உமிழ்நீரைப் பயன்படுத்தாதீர்கள்
பலர் பணத்தைக் கணக்கிடும்போது உமிழ்நீரைப் பயன்படுத்துகிறார்கள். வாஸ்து படி இவ்வாறு செய்வது லட்சுமி தேவியை அவமதிக்கிறது, மேலும் இதனை செய்பவர்கள் தனது வாழ்நாள் முழுவதையும் வறுமையில் கழிக்கக்கூடும். மேலும், நோட்டுகளில் உள்ள பாக்டீரியாக்கள் ஒருவரின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
பணத்தில் எதையும் எழுதக்கூடாது
பணத்தில் எதையும் எழுதவோ அல்லது பணத்தில் இருப்பதை அழிக்கவோக் கூடாது. இது செல்வத்தையும், லட்சுமி தேவியை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல, இந்திய அரசின் விதிமுறைகளுக்கும் எதிரானது.
இடது கையில் எண்ணக்கூடாது
பணத்தை எண்ணும்போதோ அல்லது கொடுக்கும் போதோ எப்போதும் வலது கையில் மட்டும்தான் கொடுக்க வேண்டும் ஒருபோதும் இடது கையில் கொடுக்கக்கூடாது. அதேசமயம் பணத்தை மற்றவருக்குக் கொடுக்கும் போது வடக்கு திசையில் நின்றபடி கொடுக்க வேண்டும்.
பணத்தை மதித்து அதை கவனமாக கையாளவும்
உணவுப் பொருட்களை பணத்திற்கு அருகில் எப்போதும் வைக்க வேண்டாம். நோட்டு மற்றும் நாணயங்களை அங்கங்கே போட்டு வைக்கக்கூடாது. பணத்தை எப்போதும் மரியாதையுடன் நடத்த வேண்டும் மற்றும் சரியான இடத்தில் வைக்க வேண்டும்.
வீணான காகிதங்களை பணத்துடன் வைக்கக்கூடாது
பழைய பில்கள், வீணான காகிதங்களை பணத்துக்கு அருகில் வைக்கக்கூடாது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, இதைச் செய்வதன் மூலம் உங்கள் வருமானம் பாதிக்கப்படும் மற்றும் நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும்..
உங்கள் பணத்தை எப்போதும் பாதுகாப்பாக வைக்க வேண்டும்
இரவில் தூங்கும் போது, உங்கள் பணப்பையை தலைக்கு அருகில் வைக்காதீர்கள். அலமாரி, பணப்பெட்டி, லாக்கர் போன்றவற்றில் எப்போதும் பணத்தைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். மேலும், பணப்பையில் உள்ள நோட்டுகளை மடக்கி வைக்காதீர்கள், இது உங்கள் வாழ்வில் செழிப்பைப் பாதிக்கும் செல்வத்தை அவமதிக்கும் அறிகுறியாகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
