Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
பணப் பிரச்சனை வரக்கூடாதா? அப்ப வீட்டுல பீரோவை இந்த திசையை நோக்கி வையுங்க..
Vastu Tips In Tamil: யாருக்கு தான் பணக்காரராக வேண்டுமென்ற ஆசை இருக்காது? நிச்சயம் ஒவ்வொருவருமே அதற்காக தான் நாள் முழுவதும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறோம். நாம் சம்பாதிக்கும் பணத்தை வீட்டில் உள்ள பீரோவில் வைத்து தான் செலவழிப்போம்.
அப்படி பணம் வைக்கும் பீரோவை வீட்டில் வாஸ்துப்படி சரியான திசையை நோக்கி, சரியான இடத்தில் வைக்க வேண்டும். இல்லாவிட்டால், சம்பாதிக்கும் அந்த பணம் வீணாகத் தான் செலவாகும் மற்றும் இறுதியில் பணப் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, நம் வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளுமே அந்த வீட்டில் உள்ளோரின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் பணம் வைக்கும் பீரோ வாஸ்துப்படி இருந்தால் தான், பீரோவில் பணம் அதிகம் சேரும். இப்போது பீரோவுக்கான சில வாஸ்து டிப்ஸ்களையும், பீரோவில் வைக்க வேண்டியவை மற்றும் வைக்கக்கூடாதவை குறித்தும் காண்போம்.
கிழக்கு
வாஸ்து சாஸ்திரத்தில், கிழக்கு திசை முன்னேற்றம் மற்றும் ஆற்றல்களின் திசை என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த திசையின் அதிபதி தேவர்களின் அரசனான இந்திரன் ஆவார். எனவே உங்கள் வீட்டில் செல்வம் பாதுகாப்பாகவும், அதிகரிக்கவும் வேண்டுமானால், பணம் வைக்கும் பீரோவை கிழக்கு திசையை நோக்கியவாறு மேற்கு திசையில் வைக்க வேண்டும். இப்படி வைப்பதனால் இந்திரனின் அருளால் வீட்டில் செல்வம் பெருகும்.
தெற்கு
வீட்டில் உள்ள பீரோவை தெற்கு திசையை நோக்கியவாறு வைக்கக்கூடாது. ஒருவேளை உங்கள் வீட்டில் அப்படி இருந்தால், உடனே திசையை மாற்றுங்கள். ஏனெனில் தெற்கு திசையின் அதிபதி எமன். பீரோவானது தெற்கு திசையை நோக்கியவாறு இருந்தால், வீட்டில் செலவுகள் அதிகரிக்கும். அதுவும் அதிக மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும். அதோடு, தெற்கு திசையை நோக்கியவாறு பீரோ இருந்தால், அது பண இழப்பிற்கு வழிவகுக்கும். அதுமட்டுமின்றி, இந்த திசையில் தங்க நகைகளை வைத்திருந்தால், அது வீட்டில் நகை சேர்வதைத் தடுக்கும்.
வடக்கு
ஒரு வீட்டில் பணம் மற்றும் நகை அதிகரிக்க வேண்டுமானால், பீரோவை வடக்கு திசையை நோக்கியவாறு வீட்டின் தெற்கு திசையில் வைக்க வேண்டும். வடக்கு திசையின் அதிபதி குபேரர் ஆவார். எனவே வீட்டில் செல்வமும் ஆபரணங்களும் பெருக வேண்டுமானால், பீரோவை வடக்கு திசையை நோக்கி வையுங்கள்.
மேற்கு
ஒருவரது செல்வம் பெருக வேண்டுமானால், ஒருவரது கடின உழைப்பு ஏற்பட சம்பளம் கிடைக்க வேண்டும் மற்றும் அந்த சம்பளத்தின் ஒரு பகுதியை சேமித்து வைக்க வேண்டும். ஆனால் உங்களால் பணத்தை சேமிக்க முடியவில்லை என்றால், வீட்டில் உள்ள பீரோ தவறான திசையை நோக்கியுள்ளது என்று அர்த்தம்.
வாஸ்துப்படி மேற்கு திசையின் அதிபதி வருணன். இந்த திசையை நோக்கி பீரோவை வைத்தால், பணத்தை சம்பாதிக்க மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மேலும் பணமானது தண்ணீர் போன்று செலவாகி, பண பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே மேற்கு திசையை நோக்கி வைப்பதையும் தவிர்க்க வேண்டும்.
நினைவில் கொள்ள வேண்டியவை:
* வீட்டில் பீரோவை வைக்கும் போது திசையை மட்டும் பார்க்காமல், வேறுசில விஷயங்களையும் கவனிக்க வேண்டும். அதாவது பீரோவானது அறையின் கதவுக்கு எதிரில் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், அது தேவையில்லாத செலவுகளை அதிகரிக்கும்.
* பீரோவை எப்போதும் தரையில் இருந்து சற்று உயரத்தில் வைக்க வேண்டும். அதற்கு பீரோவிற்கு அடியில் மர ஸ்டான்ட்டை வைக்க வேண்டும்.
* முக்கியமாக பணம் வைக்கும் பீரோவை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் லட்சுமி தேவி சுத்தமாக இடத்தில் தான் குடிபுகுவாள். எனவே பணம் வைக்கும் இடத்தில் எந்த ஒரு குப்பையும் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
* வாஸ்துப்படி, பணம் வைக்கும் பீரோவின் நிறம் மிகவும் முக்கியமானது. அதுவும் பணம் வைக்கும் பீரோ அடர் பச்சை அல்லது அடர் சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
* குறிப்பாக பணம் வைக்கும் பீரோவை எப்போதும் காலியாக வைத்திருக்கக்கூடாது. மேலும் பணம் வைக்கும் இடத்தில் லட்சுமி கணேச அல்லது விஷ்ணு பகவானின் போட்டோவை வைக்க வேண்டும். இதனால் இந்த தெய்வங்களின் ஆசீர்வாதத்தால் பணம் அதிகம் சேரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications