Latest Updates
-
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க!
வீடு செல்வ செழிப்போடு இருக்கணுமா? அப்ப வாஸ்துப்படி இந்த பொருட்களால் உங்க வீட்டை அலங்கரியுங்க...
Vastu Tips In Tamil: நாம் ஒவ்வொருவருமே தங்கள் வீட்டை அழகாகவும், ஆடம்பரமாக வெளிக்காட்டும் படியும் அலங்கரிக்க விரும்புவோம். ஏனெனில் நன்கு அலங்கரிக்கப்பட்ட வீடு மனதிற்கு ஒருவித சந்தோஷத்தையும், அமைதியையும் தரும். அதுவும் வீட்டை வாஸ்துப்படி அலங்கரித்தால், வீடானது செல்வ செழிப்போடு மங்களகரமாக காட்சியளிக்கும்.
வாஸ்துப்படி இருக்கும் வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகம் இருக்கும். இதன் விளைவாக அந்த வீட்டில் உள்ளோர் தங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். அதுவும் வீட்டை வாஸ்து அலங்கார பொருட்களால் அலங்கரித்தால், வீடு எப்போதும் நல்ல சக்தி நிறைந்திருக்கும் வீடாக இருக்கும். கீழே சில வாஸ்து அலங்கார பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

வீட்டின் நுழைவாயிலுக்கான அலங்கார பொருட்கள்
ஒரு வீட்டின் பிரதான நுழைவாயிலின் வழியாகத் தான் ஆற்றல்கள் நுழைவதாக கூறப்படுகிறது. அதனால் தான் வீட்டின் நுழைவாயிலை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் வீட்டின் சூழல் இனிமையாகவும், நேர்மறை ஆற்றல்கள் நிறைந்தும் இருக்க வேண்டுமானால், நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் பொருட்களை வாசலில் வைக்க வேண்டும். அதுவும் வீட்டு வாசலில் ஓம், ஸ்வஸ்திகா மற்றும் தெய்வங்களின் போட்டோக்கள் அல்லது ரங்கோலி டிசைன்கள் போன்றவற்றை வைப்பது மிகவும் நல்லது.
தோரணம்
பெரும்பாலும் இந்திய வீடுகளில் ஏதேனும் பண்டிகை அல்லது விழாக்கள் என்றால் தோரணங்கள் அல்லது பூக்களால் வீட்டு வாசலை அலங்கரிப்போம். இப்படி தோரணங்களை வீட்டு வாசலில் பண்டிகை காலங்களில் மட்டும் தான் தொங்க விட வேண்டும் என்பதில்லை. அனைத்து காலங்களிலும் வைக்கலாம். இதனால் வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவது தடுக்கப்படும்.
ஒரு பௌல் நீர்
வீட்டின் நுழைவாயிலை இன்னும் சிறப்பாக அலங்கரிக்க விரும்பினால், ஒரு பௌல் நீரில் பூக்களை வைத்து அலங்கரித்து, அதை வீட்டின் பிரதான நுழைவாயிலின் முன் வைக்கலாம். இது வீட்டின் தோற்றத்தை மேம்படுத்துவதோடு, வீட்டை செல்வ செழிப்போடு வைத்துக் கொள்ள உதவி புரியும்.
வீட்டின் ஹாலுக்கான அலங்கார பொருட்கள்
ஒரு வீட்டில் நிறைய நேரம் குடும்பத்தினருடன் செலவிடும் ஒரு பகுதி என்றால், அது வீட்டின் ஹால் தான். அதேப் போல் வீட்டின் மற்ற அறைகளை விட இந்த பகுதியைத் தான் இன்னும் அழகாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு வீட்டின் ஹாலில் பெயிண்டிங் எதையேனும் வைக்கலாம். அதுவும் 7 குதிதைகள் ஓடும் பெயிண்டிங்கை வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இது தவிர ஆறுகள், மலைகள், நீர்வீழ்ச்சி போன்ற இயற்கையை குறிக்கும் பெயிண்டிங்கை வைப்பது நல்லது.
உள் அலங்கார செடிகள்
ஒருவேளை உங்களுக்கு செடிகள் பிடிக்குமானால், வீட்டினுள் உள்அலங்கார செடிகளை வைத்து வளர்க்கலாம். வீட்டினுள் வைக்க ஏற்ற செடி என்றால், அது மணி பிளாண்ட், மூங்கில் செடி, துளசி, கற்றாழை போன்றவை ஆகும். செடிகளானது வீட்டினுள நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரிக்க உதவும். மேலும் வீட்டை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்ள உதவி புரியும். ஆனால் எக்காரணம் கொண்டும் முட்களைக் கொண்ட செடிகளை வீட்டினுள் வைக்காதீர்கள்.
மீன் தொட்டி
வாஸ்துப்படி மீன்கள் செல்வத்தை ஈர்க்கின்றன. இது தவிர வீட்டில் அமைதியான சூழ்நிலையை உருவாக்கி, வாழ்க்கையில் வெற்றி, மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதில் மீன் தொட்டி முக்கிய பங்கை வகிக்கிறது. மீன் தொட்டியை வீட்டின் ஹாலில் வைக்க சிறந்த இடம் என்றால், அது தென்கிழக்கு திசை தான்.
படுக்கையறைக்கான அலங்காரப் பொருட்கள்
என்ன தான் படுக்கை அறை நாம் ஓய்வெடுக்கும் அறையாக இருந்தாலும், அந்த அறையில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருந்தால் தான் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும். எனவே படுக்கை அறையை அலங்கரிக்கும் போது, வாஸ்து விதிகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.
முக்கியமாக படுக்கை அறையில் டிவி மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அதோடு படுக்கையை பிரதிபலிக்கும்படி கண்ணாடியை வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
படுக்கை அறையை அழகாக அலங்கரிக்க விரும்பினால், யானை சிலைகள் அல்லது யானை ஜோடிகளின் பெயிண்ட்டிங்கை வைக்கலாம். வாஸ்துப்படி, யானை சிலைகளானது அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் மற்றும் தம்பதிகளுக்கு இடையே பிணைப்பை அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications