Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டின் எந்த இடத்தில் வைத்தால் செல்வம் பெருகும்-ன்னு தெரியுமா?
Vastu Tips In Tamil: நாம் ஒவ்வொருவருமே நமது வீட்டை அழகாக வைத்துக் கொள்ள விரும்புவோம். அதற்காக வீட்டின் அழகை மேம்படுத்தும் ஒருசில பொருட்களை வாங்கி வைத்து வீட்டை அலங்கரிப்போம். ஆனால் நாம் குடியிருக்கும் வீடு வாஸ்துப்படி இருந்தால், அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டம் சிறப்பாக இருக்கும்.
அதன் விளைவாக வீட்டில் செல்வம், மகிழ்ச்சி போன்றவை அதிகரிப்பதோடு, வீட்டில் உள்ளோரும் வாழ்வில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். அந்த வகையில் சிலர் வீட்டின் அழகை மேம்படுத்த சிலைகளை வாங்கி வைப்பார்கள். அதில் வாஸ்துப்படி நிறைய பேர் வீட்டில் வாங்கி வைக்கும் ஒரு சிலை தான் சிரிக்கும் புத்தர் சிலை.

இந்த சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டில் வைத்தால், வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் வெளியேறி, நேர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகரித்து, வீட்டில் அமைதியையும், மகிழ்ச்சியையும், அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்கும். அதுவும் இந்த சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டின் குறிப்பிட்ட பகுதியில் வைக்கும் போது, அது இரட்டிப்பு நன்மைகளை வீட்டிற்கு வழங்கும். இப்போது சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டில் எந்த இடத்தில் எல்லாம் வைக்கலாம் என்பதைக் காண்போம்.
1. நுழைவாயில்
வாஸ்துப்படி, சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டின் நுழைவாயிலில் வைப்பது மிகவும் நல்லது. இப்படி வைப்பதன் மூலம் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும், அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பைக் கொண்டு வரும். முக்கியமாக இந்த இடத்தில் சிரிக்கும் புத்தர் சிலையை வைக்கும் போது, அது வீட்டில் அமைதியான சூழலை உருவாக்குவதோடு, ஏராளமான சந்தோஷத்தைக் கொண்டு வரும்.
2. வடமேற்கு மூலை
சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டின் வடமேற்கு மூலையில் வைக்கும் போது, அது அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைத் தருவதாக நம்பப்படுகிறது. இந்த இடத்தில் சிலையை வைத்தால், மனம் அமைதியாக இருக்கும் மற்றும் தடைகள், சவால்களை கடக்க உதவி புரியும். முக்கியமாக இந்த இடத்தில் சிரிக்கும் புத்தரை வைக்கும் போது, அது நல்ல அதிர்ஷ்டத்தை வரவழைத்து, பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க உதவும்.
3. பணப்பெட்டிக்கு அருகில்
சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டில் பணம் வைக்கும் பெட்டிக்கு அருகில் வைப்பதன் மூலம், செல்வம் பெருகுவதாக நம்பப்படுகிறது. வீட்டில் பண பிரச்சனை இருந்தாலும், அது விரைவில் முடிவுக்கு வந்து, நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எனவே வீட்டில் பணம் அதிகம் சேர வேண்டுமானால், சிரிக்கும் புத்தர் சிலையை பணப்பெட்டிக்கு அருகில் வையுங்கள்.
4. ஹால்
வீட்டின் ஹாலில் சிரிக்கும் புத்தர் சிலையை வைக்கும் போது, அது மகிழ்ச்சி மற்றும் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். மேலும் இந்த இடத்தில் இப்படியான சிலையை வைத்தால், அது குடும்பம் மற்றும் நண்பர்களிடையேயான பிணைப்பை வலுப்படுத்துகிறது. எனவே உறவுகளில் எவ்விர பிரச்சனையும் வரக்கூடாதெனில், வீட்டின் ஹாலில் சிரிக்கும் புத்தர் சிலையை வையுங்கள்.
5. தென்கிழக்கு மூலை
வீட்டின் தென்கிழக்கு மூலையில் சிரிக்கும் புத்தர் சிலையை வைப்பதன் மூலம், வீட்டில் நிதி நிலை மேம்படுவதோடு, வீடும் செழிப்பாக இருக்கும். வருமானம் மற்றும் சொத்துக்களும் அதிகரிக்கும். வேலையில் புதிய வாய்ப்புகள் மற்றும் வெற்றிகள் கிடைக்கும். முக்கியமாக வசதியான மற்றும் வளமான வாழ்க்கையை வாழ வழிவகை செய்யும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications