Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
வீட்டிற்குள் கொசு வரக்கூடாதா? கொசுக்கடிக்கு குட்-பை சொல்லணுமா? அப்ப வீட்டு ஜன்னல்-ல இத வையுங்க..
Natural Mosquito Repellents In Tamil: தற்போது மழை பெய்து ஆங்காங்கு நீர் தேங்கிக் கொண்டிருக்கிறது. பொதுவாக தேங்கிய நீரில் கொசுக்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். உங்கள் வீட்டைச் சுற்றி அப்படி நீர் தேங்குமானால், நிச்சயம் உங்களால் இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாது.
ஏனெனில் கொசுக்கள் உங்கள் வீட்டை ஆக்கிரமித்து, உங்கள் தூக்கத்தை கெடுக்கும். அதோடு, டெங்கு, மலேரியா போன்றவற்றையும் ஏற்படுத்தும். கொசுக்களை அழிக்க என்ன தான் பல்வேறு கெமிக்கல் கலந்த கொசு விரட்டிகள் கடைகளில் விற்கப்பட்டாலும், அவை எப்போதும் ஆபத்தானவை தான்.

சிலருக்கு கெமிக்கல் கலந்த கொசுவிரட்டிகளின் வாசனை சேராமல் ஒவ்வாமை ஏற்படலாம். அதுவும் ஆஸ்துமா அல்லது சுவாச பிரச்சனையைக் கொண்டவர்களுக்கு கெமிக்கல் கலந்த கொசு விரட்டிகள் நிச்சயம் அப்பிரச்சனையை தீவிரமாக்கும்.
அத்தகையவர்களுக்கு இயற்கை வழிகள் நல்ல தீர்வைத் தரும். கீழே வீட்டிற்குள் கொசுக்கள் நுழையாமல் இருக்கவும், கொசுக்கள் கடிக்காமல் இருக்கவும் சமையலறையில் உள்ள எந்த பொருளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைக் காண்போம்.
1. மௌத் வாஷ்
மௌத் வாஷ் சமையலறை பொருள் இல்லை. ஆனால் வாயை சுத்தம் செய்ய உதவும் இந்த மௌத் வாஷ் ஒரு சக்தி வாய்ந்த கொசு விரட்டியாகவும் செயல்படும். இதற்கு மௌத் வாஷில் உள்ள தைமால், மென்தால், யூகலிப்டால் போன்ற உட்பொருட்கள் தான். இவற்றின் வாசனை கொசுக்களுக்கு பிடிக்காது. எனவே உங்கள் வீட்டினுள் கொசுக்கள் நுழையக்கூடாதெனில், மௌத் வாஷை கொசுக்கள் நுழையும் பகுதியில் ஸ்ப்ரே செய்து விடுங்கள்.
2. லாவெண்டர் எண்ணெய்
லாவெண்டர் எண்ணெய் ஒரு நல்ல மணம் கொண்ட எண்ணெய். இது ஒரு நல்ல கொசு விரட்டியாக செயல்படுவதோடு, மனதை சாந்தப்படுத்தும் சக்தி கொண்டது. எண்ணெயில் யூகலிப்டால், கற்பூரம், லிமோனீன் மற்றும் லினலூல் போன்ற கலவைகள் உள்ளன. இவை ஒரு இயற்கை கொசு விரட்டிகள் போன்று செயல்படும். அதற்கு சில துளிகள் லாவெண்டர் எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவிக் கொள்ளவும். இதனால் கொசுக்கள் உங்களை கடிக்காது.
3. பூண்டு
பூண்டில் அல்லிசின் என்னும் கலவை உள்ளது. இது கொசுக்களை எதிர்த்துப் போராட பெரிதும் உதவி புரியும். மேலும் இதன் நாற்றம் கடுமையாக இருப்பதால் கொசுக்கள் நுழையாது. அதற்கு ஒரு லிட்டர் நீரில் சில பூண்டு பற்களைத் தட்டிப் போட்டு குறைவான தீயில் வைத்து சுண்ட கொதிக்க வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும். பின் அதை வடிகட்டி, ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, கொசுக்கள் நுழையும் இடத்தில் ஸ்ப்ரே செய்ய வேண்டும். இதனால் கொசுக்கள் வீட்டினுள் நுழையாது.
4. கிராம்பு மற்றும் எலுமிச்சை
கிராம்பில் யூஜெனால் என்ற கொசு விரட்டும் கலவை உள்ளது மற்றும் இது கடுமையான வாசனையைக் கொண்டது. அதேப் போல் எலுமிச்சை புளிப்புச் சுவையைக் கொண்டது. எனவே ஒரு எலுமிச்சையை இரண்டாக வெட்டி, அதன் ஒரு பாதியில் சில கிராம்புகளை சொருகி, ஜன்னல் போன்ற கொசுக்கள் நுழையும் இடத்தில் வைக்க வேண்டும்.
கிராம்பு எண்ணெயும் இதேப் போன்ற விளைவை கொண்டது. எனவே சில துளிகள் கிராம்பு எண்ணெய் மற்றும் எலுமிச்சை எண்ணெய்களை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவினால், கொசுக்கள் கடிப்பதைத் தடுக்கலாம்.
5. பட்டை
பட்டை எண்ணெயில் யூஜெனால், அனெத்தோல், சின்னமைல் அசிடேட் மற்றும் சின்னமால்டிஹைடு ஆகிய நான்கு சேர்மங்கள் உள்ளன. இவை கொசுக்களை விரட்டி அழிக்கும் திறன் கொண்டவை. இப்படிப்பட்ட பட்டையின் எண்ணெயை 10 துளிகள் எடுத்து, அத்துடன் 40 மிலி நீரை சேர்த்து கலந்து, அந்நீரை சருமத்தில் தடவினால், கொசுக்கள் கடிப்பதைத் தடுக்கலாம்.
6. ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகர் ஒரு சக்தி வாய்ந்த கொசுவிரட்டும் பண்புகளைக் கொண்ட பொருள். அந்த ஆப்பிள் சீடர் வினிகரை 2 டேபிள் ஸ்பூன் எடுத்து, அத்துடன் 250 மிலி நீரை சேர்த்து, சிறிது தேனை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அத்துடன் சிறிது பேக்கிங் சோடாவை சேர்க்கும் போது, அது கார்பன் டை ஆக்ஸைடை வெளியிட்டு, கொசுக்களை ஈர்த்து, அழிக்கும்.
7. கற்பூரம்
அக்காலத்தில் கொசுக்களை அழிக்க பயன்படுத்தப்பட்ட ஒரு பொருள் தான் கற்பூரம். நல்ல மணத்தைக் கொண்ட கற்பூரத்தின் வாசனை கொசுக்களுக்கு பிடிக்காது. அப்படிப்பட்ட கற்பூரத்தை ஒரு பௌல் நீரில் போட்டு, அதை கொசுக்கள் நுழையும் பகுதியில் வைக்க வேண்டும். இதனால் அதிலிருந்து வெளிவரும் கற்பூரத்தின் வாசனையால் கொசுக்கள் வீட்டிற்குள் நுழையாது.
8. காபித் தூள்
உங்கள் வீட்டைச் சுற்றி நீர் தேங்கியுள்ளதா? அந்நீரில் கொசு முட்டைகள் அதிகம் உள்ளதா? அப்படியானால் அந்நீரில் காபித் தூளைத் தூவுங்கள். இதனால் கொசு முட்டைகள் அழிந்துவிடும் மற்றும் வீட்டிற்குள் கொசுக்கள் அதிகம் வருவதையும் தடுக்கலாம்.



Click it and Unblock the Notifications