Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
சமைக்கும் போது உப்பை அள்ளி கொட்டிட்டிங்களா? அப்ப இத பண்ணுங்க உப்போட அளவு சரியாகிரும்...!
உப்பு அனைத்து உணவுகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும், உப்பு ஒரு உணவை சுவையாகவும் மாற்றும், மோசமாகவும் மாற்றும். உணவின் சுவையில் உப்பின் அளவு என்பது மிகவும் முக்கியமானது.
சில சமயங்களில் உங்கள் உணவில் உங்களுக்கேத் தெரியாமல் சிறிது உப்பு கூடுதலாக சேர்க்கப்படலாம், இது ஒட்டுமொத்த உணவின் சுவையையும் பாழாக்கும். "உப்பில்லா பண்டம் குப்பையிலே" என்பது போல உப்பு அதிகமான உணவும் குப்பைக்குத்தான் போகும்.

உங்கள் உணவில் உப்பு அதிகமாகிவிட்டால் அதனை நீக்குவது என்பது சற்றுக் கடினமானதுதான். ஆனால் சரியான வழிகளின் உதவியுடன் உங்கள் உணவில் உள்ள உப்பை சரி செய்யலாம். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு உங்கள் உணவுகளில் இருக்கும் அதிகமான உப்பை விரைவில் உறிஞ்சிவிடும். எனவே உங்கள் சமையலில் அதிகளவு உப்பை சேர்த்து விட்டால், ஒரு உருளைக்கிழங்கை நறுக்கி, குழம்பில் போட்டு 15-20 நிமிடங்கள் குறைந்த தீயில் கொதிக்க வைக்கவும்.
பின்னர், உருளைக்கிழங்கை தூக்கி எறிந்துவிடுங்கள். இருப்பினும், உப்புடன், அது குழம்பையும் உறிஞ்சுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே உருளைக்கிழங்கு துண்டுகளை எடுத்த பிறகு அதனை சமநிலைப்படுத்த வேண்டும்.
பால்
பால் பல உணவுகளின் சுவையைப் பாதுகாப்பதுடன், உப்பின் அளவையும் சரிசெய்கிறது. அதிகப்படியான உப்பை நடுநிலையாக்க உங்கள் உணவில் சிறிது தேங்காய் பால் சேர்க்கவும். உணவிலிருந்து அதிகப்படியான உப்பை அகற்றுவதற்கான சிறந்த வழிகளில் இதுவும் ஒன்றாகும், மேலும் இது உங்கள் உணவுக்கு க்ரீமியான தோற்றத்தைக் கொடுக்கும்.
தண்ணீர்
உணவில் சேர்க்கப்பட்ட அதிகப்படியான உப்பை அகற்றுவதற்கான மிகவும் எளிமையான வழி, பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி நிலைக்கு கொண்டு வருவதன் மூலம் அதை நீர்த்துப்போகச் செய்வதாகும். தண்ணீர் அதிகப்படியான உப்பை சமன் செய்து, உங்கள் உணவைக் காப்பாற்றும்.
தயிர்
அதிகப்படியான உப்பில் இருந்து உங்கள் உணவைப் பாதுகாக்க, ஓரிரு டீஸ்பூன் தயிர் சேர்ப்பது மிகவும் எளிமையான வழியாகும். இது உணவின் சுவையை அதிகம் மாற்றாது, அதேசமயம் உப்பின் அளவையும் குறைக்கும், மேலும் இது உங்கள் உணவின் சுவையையும் அதிகரிக்கும்.
எலுமிச்சைச்சாறு
எலுமிச்சைச்சாறு உங்கள் உணவில் இருக்கும் உப்பை எளிதில் குறைத்து, அதேசமயம் உங்களின் உணவிற்கு புளிப்பான சுவையையும் கொடுக்கும். ஒருவேளை உங்கள் உணவிற்கு நீங்கள் அதிக புளிப்பு சுவையை சேர்க்க விரும்பாவிட்டால், தண்ணீருடன் எலுமிச்சைச்சாறை கலந்து உங்கள் குழம்பில் சேர்க்கவும்.
மாவு
இந்த பொருள் கொஞ்சம் வித்தியாசமானதாகத் தோன்றலாம் ஆனால் நீங்கள் விரும்பும் வழியில் வேலை செய்யும். கிரேவியில் சிறிது மாவு சேர்த்தால், அது அதிகப்படியான உப்பை உறிஞ்சி மேலே மிதப்பதைப் பார்க்கலாம். அதை வெளியே எடுத்து எரிந்து விட்டு உங்கள் சமையலைத் தொடரவும்.
வெங்காயம்
வெங்காயம் உணவிற்கு சுவையை அளிப்பது மட்டுமின்றி, உணவின் சசுவையை பாதுகாக்கவும் உதவும். உணவில் உப்பின் அளவு அதிகரித்து விட்டால் ஒரு வெங்காயத்தை நறுக்கி குழம்பில் போடவும். இது உணவில் உள்ள அதிகப்படியான உப்பை சமன் செய்யும்.
சர்க்கரை
இந்த தந்திரம் சிறிதளவு உப்பு அதிகரிப்பை தவிர்க்க உதவும். எனவே நீங்கள் ஒரு சிட்டிகை கூடுதல் உப்பு சேர்த்திருந்தால், அதை சமநிலைப்படுத்த ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்க்கலாம். இது ஒரு கணக்கிடப்பட்ட நடவடிக்கையாகும், எனவே, உங்கள் உணவில் அதிகளவு உப்பு இருந்தால், இந்த தந்திரத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது உணவை இனிப்பாக மாற்றும்.



Click it and Unblock the Notifications
