Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
உங்கள் வாஷிங் மிஷினில் இந்த பொருட்களை துவைக்க தெரியாமகூட போட்றாதீங்க... இல்லனா மிஷின் வீணாப்போயிடும்...!
நவீன மின்சார சலவை இயந்திரம் 20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். கைகளால் துவைப்பதற்கு அதிக நேரமும், உடலுழைப்பும் தேவை. வாஷிங் மிஷின் தற்போது பல குடும்பங்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது. இந்த நவீன சாதனம் பெண்களின் வாழ்க்கையை மாற்றியமைத்தது, சலவை அறையை விட்டு வெளியேறவும், அவர்களுக்கான நேரத்தை பெறவும் உதவுகிறது.
வாஷிங் மிஷின் எவ்வளவு எளிதான இயந்திரமோ பராமரிக்க அவ்வளவு கடினமான ஒரு இயந்திரமாகும், ஏனெனில் சில வாஷிங் மிஷினில் சில பொருட்களைப் தெரிந்தோ, தெரியாமலோ போடுவது உங்கள் வாஷிங் மிஷனை ஒட்டுமொத்தமாக வீணாக்கும்.

வேலைப்பாடுகளுடன் கூடிய உடைகள்
சீக்வின்ஸ், பீடிங் அல்லது உடையக்கூடிய எம்பிராய்டரி ஆகிய வேலைப்பாடுகள் கொண்ட அழகான மென்மையான பொருட்கள் சலவை இயந்திரத்தில் வீணாக்கப்படலாம், குறிப்பாக அவை தைக்கப்படுவதற்குப் பதிலாக ஒட்டப்பட்டிருந்தால் அதனை கைகளால் துவைப்பதே நல்லது. இதேபோல், சரிகை உள்ள எந்த பொருளையும் கவனமாக துவைக்கவும், இது வாஷரில் கிழிந்துவிடும், குறிப்பாக கொக்கிகள், பொத்தான்கள் அல்லது ஜிப்பர்கள் உள்ள ஆடைகளை கவனமாக துவைக்கவும். அதற்கு பதிலாக அந்த பொருட்களை கையால் துவைக்கவும்.
உள்ளாடைகள்
அண்டர்வயர் மற்றும் ஹூக் உள்ள உள்ளாடைகள் உங்கள் சலவை இயந்திரத்தின் உட்புறத்தை சேதப்படுத்தும். அது மட்டுமின்றி உங்கள் உள்ளாடைகளையும் சேதப்படுத்தும். உங்கள் உள்ளாடைகளை கையால் துவைக்கவும் அல்லது உங்கள் ப்ராக்கள், உள்ளாடைகள் மற்றும் இயந்திரத்தை பாதுகாப்பாக வைத்திருக்க ஒரு பாதுகாப்பு மெஷ் பையில் முதலீடு செய்யவும்.
சாவி மற்றும் நாணயங்கள்
பெரும்பாலும் நியாபக மறதியில் நாம் சாவி அல்லது நாணயங்களை பாக்கெட்டில் வைத்த படியே வாஷிங் மிஷினில் துவைக்க போட்டு விடுகிறோம். நாணயங்கள் வாஷிங் மிஷினில் உள்ள பில்டர்களை சேதப்படுத்தும். அவை சலவை இயந்திரத்தின் வடிகாலில் சிக்கிக் கொள்ளலாம் இதனால் தண்ணீர் தடைபடலாம், டிரம்மை சேதப்படுத்தலாம் அல்லது வாஷரின் கண்ணாடியை உடைக்கலாம். எனவே வாஷிங் மிஷினில் ஆடைகளை போடும் முன் பாக்கெட்டுகளை நன்றாக சோதிக்கவும்.
ரன்னிங் ஷூ
உங்கள் வாஷிங் மெஷின் ஷூக்களைக் துவைக்க முடியும் என்றாலும், அது ஷூக்களை சுருங்கச் செய்யலாம் அல்லது அதன் தரத்தைக் குறைக்கலாம். மேலும், லெதர்கொண்ட காலணிகள் ஒருபோதும் இயந்திரத்தில் துவைக்க போடக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஏனெனில் அது லெதரை சேதப்படுத்தும்.
எரியக்கூடிய கறைகள்
உங்கள் ஆடையில் வாயுவைக் கொட்டினால் அல்லது பெயிண்ட் கொட்டினால் அதனை வாஷிங் மிஷினில் போடாதீர்கள். வெப்பமானது கறையை எரியச் செய்து தீயை உண்டாக்கக்கூடும். இந்த வகை கறையை டிடர்ஜண்ட் மூலம் கையால் துவைக்கவும். -அடிப்படையிலான கறை நீக்கி (ஸ்ப்ரே n' வாஷ் போன்றவை), குறைந்தது பத்து நிமிடங்கள் ஊற வைத்து, கறையை மாற்றாமல், தனியாக மிஷினில் துவைத்து காய வைக்கவும். இல்லையெனில் இரண்டு பங்கு பேக்கிங் சோடாவில் தண்ணீர் கலந்து இந்த கலவையை கறையில் தேய்க்கவும், பின்னர் துவைத்து உலர வைக்கவும்.
அதிகளவு டிடர்ஜண்ட்
உங்கள் ஆடைகள் அதிக அழுக்காக இருந்தால், அதற்கு கூடுதல் டிடர்ஜண்ட் தேவைப்படும் என்று நினைப்பது தவறு. அதிகளவு டிடர்ஜண்ட்உபயோகிப்பதை விட, துணியை இரண்டு முறை துவைப்பது நல்லது. பல இயந்திரங்களில் ப்ரீவாஷ் அமைப்பு உள்ளது, அதையும் பயன்படுத்தலாம். கூடுதல் டிடர்ஜண்ட் வெளியிடப்பட்ட நீரின் அளவைக் கொண்டு சரியாக துவைக்காது.
முடியுடன் கூடிய ஆடைகள்
பெரும்பாலான மக்கள் செய்யும் தவறு இதுவானது. முடியுடன் கூடிய ஆடைகளை வாஷிங் மிஷினில் துவைப்பது உங்கள் வாஷிங் மிஷ்கினுக்கு சேதத்தை ஏற்படுத்தும். முடி இருக்கும் ஆடைகளை துவைக்கும் போது அது மிஷின் முழுவதும் பரவும். அந்த முடிகள் உங்கள் பில்டர் மற்றும் குழாய்களை அடைத்துவிடும்.



Click it and Unblock the Notifications



