Latest Updates
-
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
இந்த பறவையின் இறகை வீட்டின் 'இந்த' இடத்துல வெச்சா.. வீட்டுல பணம் அதிகம் சேருமாம்.. ட்ரை பண்ணி பாருங்க..
Pigeon Feather Remedies In Tamil: நாம் ஒவ்வொருவருமே நல்ல செழிப்பான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையையே வாழ விரும்புவோம். அதற்காக நாம் வாஸ்து மற்றும் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ள பல வழிகளைப் பின்பற்றுவோம்.
இந்த சாஸ்திரங்களில் நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும், வீட்டில் செல்வம் பெருகவும் ஒருசில பரிகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த பரிகாரங்களை மேற்கொள்வதன் மூலம், வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்பது நம்பிக்கை.

அந்த வகையில், பறவைகளுள் பழங்காலம் முதலாக இன்று வரை ஒரு செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு வருவது புறா. இந்த புறா அக்காலத்தில் வெறும் தூது அனுப்ப மட்டும் பயன்படுத்தப்படவில்லை. ஒரு புறாவின் இறகு ஒருவரது வாழ்க்கையையே மாற்றும் சக்தி கொண்டது.
அந்த அளவு புறா ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இப்போது ஒருவரது வாழ்க்கை செல்வ செழிப்புடணும், மகிழ்ச்சியாகவும் இருக்க புறாவின் இறகை எப்படியெல்லாம் வீட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
பணப் பிரச்சனை தீர...
வீட்டில் பணப் பிரச்சனை அதிகமாக இருந்தால், புறாவின் இறகுகளை எடுத்து, வெள்ளை துணியில் வைத்து, சிவப்பு நிற நூலால் 7 முறை சுற்றி, வீட்டில் உள்ள பணப் பெட்டியில் வைக்க வேண்டும். இப்படி வைக்கும் போது லட்சுமி தேவியின் அருள் முழுமையாக கிடைக்கும். இதன் விளைவாக பண பிரச்சனை நீங்குவதோடு, வீட்டில் மகிழ்ச்சியும், சந்தோஷமும் நிலைதிருக்கும்.
கடன் தொல்லை நீங்க...
கடன் வாங்கி அந்த கடனை அடைக்க முயற்சித்தும் முடியவில்லையா? அப்படியானால் கடன் பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபட, 3 புறா இறகுகளை எடுத்து, வீட்டின் மூலைகளில் வையுங்கள். அதாவது ஒரு இறகை வீட்டின் தெற்கு மூலையிலும், அடுத்த இறகை சமையலறையின் வடக்கு மூலையிலும், மூன்றாவது இறவை மேற்கு திசையை நோக்கியவாறும் வைக்க வேண்டும். இப்படி வைப்பதன் மூலம் லட்சுமி தேவியின் ஆசி கிட்டும் மற்றும் கடன் தொல்லை படிப்படியாக குறைய வழி பிறக்கும்.
விரைவில் வேலை கிடைக்க...
நீங்கள் பல மாதங்களாக வேலை தேடியும் நல்ல வேலை கிடைக்கவில்லையா அல்லது நீங்கள் எதிர்பார்க்கும் காரியங்கள் வெற்றிகரமாக நடப்பதில்லையா? அப்படியானால் வியாழக்கிழமை அன்று ஒரு மஞ்சள் துணியில் புறாவின் இறகுகளை வைத்து, மஞ்சள் நூலால் கட்டி, வீட்டின் பணப் பெட்டியில் வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், சீக்கிரம் நல்ல வேலை கிடைக்கும்.
வீட்டிற்குள் புறா வருவது நல்லதா?
ஒருவரது வீட்டிற்குள் புறா அடிக்கடி வந்தால், அந்த வீட்டில் உள்ளோர் ஒரு நல்ல செய்தியை விரைவில் பெறப் போகிறார் என்று அர்த்தம். தூது அனுப்ப பயன்படுத்தப்பட்டு வந்த புறா, கடவுளின் தூதர் என்றும் அழைக்கப்படுகிறது. ஆகவே வீட்டில் புறா வந்தால், வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் வரப் போகிறது என்று அர்த்தம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications