Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
செல்லப் பிராணிகளுக்கான உணவு பழக்கம்!!!
மழைக்காலம் என்பது நமக்கு குஷியை தரும் காலம் தான். ஆனால் எந்த அளவுக்கு மகிழ்ச்சியை தருகிறதோ, அதே அளவுக்கு உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கும். இதற்கு நாய் போன்ற செல்லப்பிராணிகள் மட்டும் விதிவிலக்கல்ல. பருவக்காலத்தில் செல்லப்பிராணியை மழையில் நனையாமல் இருக்க, அவைகளை வீட்டிற்குள் வைக்க நினைத்தாலும், தீயில் ஈர்க்கப்படும் விட்டில் பூச்சிகளை போல செல்லப்பிராணிகளும் மழையால் ஈர்க்கப்படும்.
பருவக்காலத்தில் செல்லப்பிராணியின் உடல்நலத்தை பாதுகாப்பது ஒரு பெரிய கடமையாகும். ஏனென்றால், இக்காலத்தில் பூஞ்சைத் தொற்று, அலர்ஜிகள், ரோமம் கொட்டுதல் மற்றும் வயிற்று போக்கு போன்ற பல வியாதிகளால் பாதிக்கப்படலாம். நாய் தன்னை தானே எத்தனை முறை நக்குகிறதோ, அதை வைத்தே, அது எந்த அளவு சுத்தமாக இருக்கிறது என்பதைக் கூறி விடலாம்.
நாயை சுத்தமாக வைத்திருக்க தினமும் ஒரு முறை அதை குளிப்பாட்டலாம். ஆனால் அப்படி செய்தால் மட்டும், அது ஆரோக்கியமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. அதற்கேற்ற உணவை சரியான நேரத்தில், சரியான முறையில், அதற்கு வழங்கினால் தான் அதன் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அதனால் நாயின் சாப்பாட்டு தட்டையும், கிண்ணத்தையும் தினமும் இரண்டு முறை நன்றாக கழுவ வேண்டும்.

செல்லப்பிராணிகளின் உணவு பழக்கம்
செல்லப்பிராணிகளின் உணவு பழக்கங்கள் அதன் இனத்தை பொறுத்து வேறுபடுவதில்லை, மாறாக அதன் உருவத்தை பொறுத்தே வேறுபடும். பொதுவாக குட்டி நாய்களின் உணவு பழக்கத்தை, வளர்ந்த நாய்களோடு ஒப்பிடுகையில் சற்று வேறுபாட்டுடன் இருக்கும். குட்டி நாய்களுக்கு திறன் அதிகமாக தேவைப்படாததால், அதற்கு குறைந்த அளவு சாப்பாடு போதுமானது.

உணவு திட்டம்
செல்லப்பிராணிகளுக்கு சமநிலையான உணவை வழங்க வேண்டும். சிக்கன் மற்றும் ஆட்டு இறைச்சி (நெஞ்சுக்கறி,தொடைக்கறி, கால் பகுதி என்று எல்லா பாகங்களையும் கொடுக்கலாம்), சாதம், சர்க்கரைவள்ளி கிழங்கு, பட்டாணி, முட்டை மற்றும் மீன் எண்ணெய் ஆகியவற்றை அதற்கு உணவாக கொடுக்கலாம். ஆனால் சோயா, சோளம் மற்றும் கோதுமையை தவிர்க்க வேண்டும்.

போதிய உணவு
அளவுக்கு அதிகமான உணவை உண்ண கொடுக்கக்கூடாது. வளர்ந்த நாய் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிடலாம். இதுவே குட்டி நாய் என்றால் ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து முறை சாப்பிட வேண்டும்.

வீட்டில் சமைத்த உணவு மற்றும் பழங்கள்?
நாய்களுக்கு பழங்கள் கொடுத்தால், செரிமானமாவதில் சிரமம் ஏற்படும். அதனால் வீட்டில் சமைத்த சாதத்துடன் கோழி/ஆட்டிறைச்சி அல்லது ஓட்ஸ் உடன் சேர்த்து கோழி கறியை கொடுக்கலாம். ஆனால் ஓட்ஸை மாட்டிறைச்சி அல்லது பன்றிக்கறி போன்ற இறைச்சியுடன் சேர்த்து கொடுக்கக்கூடாது. ஏனெனில் அது அவ்வளவு சுலபமாக செரிமானம் ஆவதில்லை. அதே போல் கோழி எலும்பையும் நாய்க்கு கொடுக்கக்கூடாது. அது அதன் தொண்டை குழியில் சிக்கி கொள்ளும்.

புரதச்சத்தின் முக்கியத்துவம்
நாயின் தசை வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சிக்கு தேவைப்படும் அமினோ அமிலம் புரதச் சத்தில் உள்ளது. மேலும் புரதம், தேவையான ஆற்றல் சக்தியை கொடுத்து செரிமானத்திற்கு உதவி புரியும். அதனால் அதன் உணவில் தேவையான அளவு புரத சத்து, வைட்டமின்கள் மற்றும் கால்சியம் இருந்தால் தான் நாய் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியத்துடனும் இருக்கும். பொதுவாக கோழி, ஆட்டிறைச்சி மற்றும் மீன்களில் புரதச்சத்து நிறைந்து உள்ளது.

நோய்களும், செல்லப்பிராணியும்
பருவக்காலத்தில் நாய்களுக்கு கூடுதல் கவனிப்பு தேவை. குடிநீர் மாசுபடுவது இந்த காலத்தில் மிகவும் சகஜம். அப்படிப்பட்ட நீரை பருகுவதால் நாய்களுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படும். இதற்கு சிறந்த வழி நாய்க்கு சுத்தமான உணவையும் தண்ணீரையும் கொடுக்க வேண்டும்.

பருவக்கால சிறப்பு உணவு
கோடை காலத்திலும் பருவக்காலத்திலும் காற்றில் அதிக ஈரப்பதம் மற்றும் வெப்பம் இருப்பதால், நாய்கள் காய்ந்த உணவு வகைகளை விரும்புவதில்லை. வீட்டில் சமைத்த குழம்புத் தன்மையுள்ள உணவு வகைகள் தான் அதற்கு ஏற்றவை. இயற்கையான சமநிலை உணவை அதற்கு அளிக்க வேண்டும். அப்படிப்பட்ட உணவில் நிச்சயம் தேவையான அளவு கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், கொழுப்பிணி மற்றும் வைட்டமின்கள் இருக்க வேண்டும்.

மெட்டபாலிசத்தை மேம்படுத்துதல்
அதிக நார்ச்சத்துள்ள உணவான சர்க்கரைவள்ளி கிழங்கு, கொழுப்பு நீக்கிய கோழிக்கறி, கைக்குத்தல் அரிசி மற்றும் பன்னீர் போன்றவை, நாயின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தவும், நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் இருக்க உதவி புரியும்.



Click it and Unblock the Notifications