Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
மரணப் படுக்கையில் இருக்கும் நாயை பராமரிப்பது எப்படி?
வீட்டில் அன்புடன் வளர்க்கும் நாய் வீட்டில் ஒரு குடும்ப உறுப்பினர் போலவே வலம் வரும். குடும்ப உறுப்பினர் நம்மை விட்டு மரணத்தை தழுவும் போது நாம் பெறும் எண்ணிலடங்கா துயரம், நாம் வளர்க்கும் நாய் நம்மை விட்டு போகும் போதும் உண்டாகும். இது நாய் வளர்ப்பவர்களுக்கு மட்டுமே புரியும்.
மனிதனோடு ஒப்பிடுகையில் நாய் இனத்தின் ஆயுட்காலம் மிகவும் சிறியதே. அதனால் உங்கள் ஆயுட்காலத்திலேயே உங்கள் நாயின் மரணத்தை நீங்கள் காண நேரிடலாம். பிரியமுடன் வளர்த்த செல்ல நாயின் பிரிவினையை தடுக்க முடியாது. அதனால் ஏற்பட போகும் சோகத்தையும் தடுக்க முடியாது. ஆனால் அதன் வாழ்வின் கடைசி நாட்களில் அதை சுகமாக வைத்திருந்து, வழி அனுப்பினால் அந்த பிரிவினால் ஏற்பட போகும் சோகத்தை சற்று குறைக்கலாம் அல்லவா?
உங்கள் நாயின் முடிவை கணித்து விட்டீர்களா? அப்படியானால் அதன் வாழ்க்கையின் கடைசி நாட்களில் அதனை மகிழ்ச்சியாகவும், சுகமாகவும் வைத்துக் கொள்ள நடைமுறை ஏற்பாடுகளுக்கு ஆயத்தமாக வேண்டும். இந்த விஷயத்தினால் மன ரீதியாக உடைந்து போவீர்களா? அப்படியானால் ஒரு நல்ல மன நல மருத்துவரிடம் சென்று அறிவுரையோ அல்லது வேறு விதமான உதவியோ பெற்றுக் கொள்ளலாம்.

வழி 1
கால்நடை மருத்துவரிடம், நாய்க்கு வந்திருக்கும் நோயின் தன்மை பற்றியும் அது எத்தனை நாள் எஞ்சியிருக்கும் என்பதையும் கேட்டறிந்துக் கொள்ளவும். உதாரணத்திற்கு, மருத்துவர், நாய் கடைசி நிலை புற்று நோயால் பாதிக்கப்பட்டு இன்னும் இரண்டிலிருந்து மூன்று வாரங்களில் இறந்து விடும் என்று சொல்கிறாரென்று வைத்துக் கொள்ளுங்கள். அது உயிர் வாழப் போகும் நாட்களை முன்கூட்டியே அறிவதால் அதற்கேற்ப மன நிலையை தயார்படுத்திக் கொள்ளவும். மேலும் அதன் கடைசி நாட்கள் சந்தோஷமாக கழியும் படியும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வழி 2
கால்நடை மருத்துவரிடம் இருந்து தேவையான அளவு மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொள்ள வேண்டும். மேலும் மருந்து கொடுக்க வேண்டிய நேரத்தையும், இடைவெளியையும், அளவையும் மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அழற்சியை தடுக்கும் மருந்துகள், ஸ்டீராய்ட் மருந்துகள், மயக்க மருந்துகள் போன்ற மருந்துகளை இந்நேரத்தில் அதற்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். மேலும் சாப்பிடும் அளவு குறைந்தாலோ, குமட்டல் எடுத்தாலோ, வாந்தி எடுத்தாலோ அல்லது வயிற்றுப் போக்கு ஏற்பட்டாலோ, அதற்கு உண்டான மருந்துகளை மருத்துவரிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

வழி 3
நாயினத்தின் வலி அளவுகோலை பயன்படுத்தி நாயின் வலி அளவை மதிப்பிட வேண்டும். நாயால் தனக்கு எந்தளவுக்கு வலி இருக்கிறது என்பதை வாயை திறந்து பேச முடியாது, தன் வலியை தாங்கிக் கொண்டு உணர்ச்சியை கட்டுப்படுத்துவதைப் போல. அதன் வலி அளவை கணக்கிட அறிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப வலி மருந்துகளை கொடுக்கலாம் அல்லது கால்நடை மருத்துவரை உடனே அணுகலாம். ஆகவே அதன் வலி அளவை கண்டுபிடிக்கும் வழிமுறைகளை மருத்துவரிடம் கேட்டு தெரிந்துக் கொள்வதோடு, அதன் நடத்தையின் மாறுதல்கள், தசை இறுக்கங்கள் அல்லது அதன் உடம்பில் உள்ள பகுதிகளில் ஏற்படும் வெப்பம் போன்றவைக்கான அறிகுறிகளையும் காரணங்களையும் தெரிந்துக் கொள்ளவும்.

வழி 4
நாய்க்கு வசதியாகவும், அமைதியாகவும் இருக்கும் ஒரு படுக்கையை ஏற்பாடு செய்யவும். இது வெதுவெதுப்பாக, மனிதர்களிடம் இருந்தும் மற்ற வளர்ப்புப் பிராணிகளிடமிருந்தும் தள்ளியே இருக்க வேண்டும். வீட்டில் உள்ள மற்ற வளர்ப்புப் பிராணிகள் நாய்க்கு தொந்தரவு கொடுத்தால், அவைகளிடம் இருந்து நாயை எப்போதுமே விலக்கியே வைக்க வேண்டும். சில நேரம் நோய்வாய்பட்ட அல்லது வயதான நாய்களை மற்ற நாய்கள் தாக்க முற்படும், ஏன் சில நேரங்களில் கொன்றும் விடும்.

வழி 5
நாய்க்கு சீரான சாப்பிடும் அட்டவணையை தயாரித்துக் கொள்ளவும். நாய்க்கு குமட்டல் ஏற்பட்டால், சிறிய அளவிலான சாப்பாட்டை சில நேர இடைவெளியில் பல முறை கொடுக்க வேண்டும். லேசான சாப்பட்டை அதற்கு கொடுக்கவும். அதிலும் கலவை போன்ற உணவை கொடுக்கவும். உதாரணத்திற்கு, டப்பியில் அடைத்த உணவை கொடுத்தால், அதற்கு மெல்லவும் விழுங்கவும் சுலபமாக இருக்கும்.

வழி 6
நாய்க்கு பிடித்த செயல்களை தொடர வேண்டும். உதாரணத்திற்கு, அது நடை கொள்ளவோ அல்லது காரில் பயணம் செய்யவோ விரும்பும் என்றால் அதற்கு சலிப்பு தட்டும் வரை அதை நிறுத்த வேண்டாம். குறிப்பாக அது மேற்கொள்ளும் செயல், அதனை சோர்வடைய செய்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் நாயிடம் கனிவான முறையில் பேச வேண்டும். நாய்கள் மனித உணர்ச்சிக்கேற்ப உணர்ச்சிவசப் படக்கூடியது. எனவே நீங்கள் மிகவும் சோகத்தில் இருந்தாலோ அல்லது அழுதாலோ, நாய்க்கு உடல் மற்றும் மன உளைச்சல் ஏற்படும்.

வழி 7
மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகள் வலியை குறைக்கிறதா என்று கண்காணித்துக் கொள்ள வேண்டும். ஒரு வேலை அதற்கு வலி கூடி கொண்டே போய் அது மிகவும் துடிதுடித்துப் போனால், அதை கருணைக் கொலை செய்வதே அதற்கு நாம் ஆற்றும் பெரும் உதவியாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











