Latest Updates
-
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்..
செல்லப் பிராணிகளோட என்னென்ன முக்கியமா ஷேர் பண்ணலாம்!!!
வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்க்கும் போது, நிறைய பொருட்களை அதனுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அதுவும் உங்கள் வீட்டின் ஒருவராக இருக்கும் போது, உங்களுடன் நிறைய இடங்களில், வேலைகளில் ஈடுபடும். அவ்வாறு ஈடுபடும் போது எந்தெந்த பொருட்களை அதனுடன் பகிர்ந்து கொண்டால், அது சந்தோஷமாக இருக்கும் என்பதை சரியாக தெரிந்து கொண்டு, பின்னர் அதனை வளர்க்க ஆரம்பித்தால், எந்த ஒரு கவலையுமின்றி நம்மிடமிருக்கும் பொருட்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். அது என்னென்ன பொருட்கள் என்று பார்ப்போமா!!!

* நாய்கள் தரையில் படுக்கும் போது மிகுந்த குளிர்ச்சியாக இருக்கும். ஆகவே வீட்டில் இருக்கும் சாக்ஸை அதன் கால்களில் மாட்டிவிட்டால், அதற்கு சற்று இதமாக இருக்கும். மேலும் நாய்கள் படுக்கும் முன்பு, அதன் கால்களில் சாக்ஸை மாட்டி விடுங்கள். இதனால் செல்ல நாய்கள் நிம்மதியான தூக்கத்தை பெறும்.
* உண்ணும் உணவை செல்ல நாய்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் என்பது மிகவும் நல்லது. ஏனெனில் நாய்களுக்கு அதற்காக கடைகளில் விற்கும் உணவுகளை விரும்பி சாப்பிடுவதை விட, வீட்டில் சமைக்கும் உணவுகளைத் தான் விரும்பி சாப்பிடும், அதிலும் அந்த உணவுகளை தட்டில் வைத்து கொடுக்கும் போது, அங்கும் இங்கும் குதித்து சந்தோஷமாக விளையாடி உண்ணும். மேலும் நாய்களுக்கு கொடுக்கும் உணவுகளை பார்த்து, அவற்றிற்கு கொடுக்கக் கூடியது தானா என்பதை நன்கு அறிந்து பின்பு கொடுக்க வேண்டும். உதாரணமாக நாய்கள் சாதம், பிரட், மோர், தயிர் என்பதை சாப்பிடலாம். ஆனால் ஒரு சில உணவுகளை சாப்பிட்டால், நாய்களுக்கு அலர்ஜி ஏற்படும். ஆகவே நன்கு தெரிந்து கொண்டு பின்னர் கொடுங்கள்.
* நாய்களும் ஒரு சிறு குழந்தை போல் தான். மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். அதிலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த செல்லப் பிராணி எது என்று பார்த்தால், அது நாய் தான். அதிலும் நாய்களுக்கு எந்த ஒரு விளையாட்டு பொருட்கள் என்றாலும் ஆசையோடு நன்கு விளையாடும். மேலும் வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால், நாய்களுக்கு விளையாட்டுப் பொருட்களை கொடுக்க வேண்டாம். இதனால் குழந்தைகளும் அந்த விளையாட்டுப் பொருட்களுடன் விளையாடி, பின் அவர்களுக்கு ஏதேனும் தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
ஆகவே மேற்கூறியவற்றை மனதில் கொண்டு, நாய்களை வளர்த்து, அதனுடன் பகிர்ந்து வந்தால், நாய்கள் நன்கு சந்தோஷமாக இருப்பதோடு, நாமும் எந்த ஒரு பயமும் இல்லாமல் இருக்கலாம்.



Click it and Unblock the Notifications