Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
சுகாதாரமாக வளர்த்தால் புறாக்களை நோய் தாக்காது

வழ வழப்பான புறாக்கூண்டு
சிறிய அளவில் நான்கு அல்லது ஐந்து ஜோடிகளை மட்டும் வளர்க்க நினைப்பவர்கள், பழையப் பெட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறைந்தது 50 ஜோடிகளை வளர்க்க நினைப்பவர்கள் 10 அடி நீளம், 6 அடி அகலம், ஆறடி உயரத்தில் ஓர் அறையைக் கட்டிக்கொள்ள வேண்டும். சுக்கான் அல்லது செம்மண்ணைக் குழைத்துதான் எழுப்ப வேண்டும். மண்ணைக் குழைத்து சுவர் எழுப்பும் போது, இடையில் செங்கல் அல்லது கருங்கல் வைப்பதற்கு பதிலாக மண்பானைகளை நெருக்கமாக வைத்து கட்ட வேண்டும். இந்தப் பானைகளின் வாய்ப்பகுதி, அறைக்கு உள்பக்கமாக இருக்க வேண்டும். இதில்தான் புறாக்கள் வசிக்கும்.
வாசலுக்கான இடைவெளியைத் தவிர, வேறு எந்தப் பக்கமும் இடைவெளி இல்லாமல் வெளிப்புறச் சுவற்றை சிமெண்ட் வைத்து வழவழப்பாக பூசிவிட வேண்டும். வெளிச்சுவர் வழவழப்பாக இருந்தால்தான் விஷப்பூச்சிகள் சுற்றின் மீது ஏறி அறைக்குள் வராது. அதே போல அறையின் கீழ்பகுதிகளிலும், விஷப்பூச்சிகள் நுழையாதவாறு இடைவெளி இல்லாமல் அடைத்து விட வேண்டும்.
இரை தேடி, வெளியே போய் வருவதற்கு வசதியாக. சுவற்றில் ஐந்தரை அடி உயரத்தில், வீடுகளில் வெண்டிலெட்டர் வைப்பதைப் போல, சிறியதாக சதுர வடிவில் இரண்டு பக்கமும் இடைவெளி விட வேண்டும். கூரைக்கு ஓலை, தகரம், கான்கிரீட் என வசதிக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். புறாக்களை அறைக்குள் விட்டுவிட்டால், ஜோடிஜோடியாக பானைகளுக்குள் சென்று அடைந்து கொள்ளும்.
தானிய உணவுகள்
மழைக் காலத்தில் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படும் போது, மட்டும் கம்பு, சோளம் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். பருவம் வந்தவுடன் பெண் புறா முட்டையிடும். ஒரு பெண்புறா, இரண்டு முட்டையிட்டவுடன் அடைக்கு உட்கார்ந்து விடும். அருகிலுள்ள மற்றொரு பானையில் ஆண் புறா வசிக்கும். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், முட்டையைக் கையால் தொடக் கூடாது, அப்படி தொட்டால் அந்த முட்டை பொறிக்காது. அடை உட்கார்ந்த 28 நாட்களில் குஞ்சு பொறிக்கும். 15 நாட்களில் தாயிடமிருந்து குஞ்சுகளை தனியாகப் பிரித்து விட வேண்டும். அப்போது தான், அடுத்த முப்பது நாட்களில் மறுபடியும் தாய்ப்புறா முட்டை போடத் தொடங்கும்.
உலர்வான கூண்டு
எப்பொழுதும் கூட்டைச் சுத்தமாக, உலர்வாக வைத்திருங்கள். நீர் வைக்கும் பாத்திரம் தினமும் சுத்தப்படுத்தப்பட வேண்டும். மூன்று நான்கு நாட்களுக்கொருமுறை நீரில் வைட்டமின் B மாத்திரை ஒன்று கலந்து விடலாம். அது கோழித்தீவனம் விற்குமிடத்தில் கிடைக்கும். கோழிகளை விட இவை சிறிய பறவைகள் என்பதால் அந்த அளவைவிட சிறிது குறைத்துக் கொடுக்கலாம். கோழிகளோடு சேர்த்து வளரவிடாதீர்கள். அவற்றிலிருந்து ஏதாவது தொற்றக்கூடும். ஒரு பறவையை கால்நடை மருத்துவரிடம் எடுத்துச் சென்று காட்டுங்கள்,
தலை சுற்றல்நோய்
மழைக்காலங்களில்தான் புறாவிற்கு தலை சுற்றல் நோய் வரும். எனவே இந்த நேரத்தில் கூண்டினை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், புறா சாப்பிட்ட மீதி உணவை மீண்டும் வைக்கக் கூடாது. மழை காலத்தில் தண்ணீரில் மஞ்சள் கலந்து வைப்பது நோய் கிருமி தாக்குதலை தடுக்கும்
வெயில் அவசியம்
புறா மீது தினமும் வெயில் பட செய்ய வேண்டும். இதையும் மீறி தலை சுற்று நோய் வந்து விட்டால் பறவை நல மருத்துவரின் அறிவுரையோடு நிரோபியான் (NIROBIAN) மாத்திரை வாங்கி ஒரு வேளைக்கு 1/4 பகுதி வீதம் ஒரு நாளைக்கு இரண்டு வேளை கொடுக்கலாம் என்கின்றனர் பறவை வளர்ப்பாளர்கள். இரண்டு நாட்களில் சரியாகிவிடும். தலை சுற்று நோய் வந்த புறா வை கூண்டில் இருந்து தனியாக பிரித்து வைக்க வேண்டும். இல்லை எனில் இது மற்ற புறா விற்கும் நோய் தாக்கும் அபாயம் உண்டு. முக்கியமாக எந்த காரணம் கொண்டும் இருட்டான அறையில் தலை சுற்று நோய் வந்த புறா வை அடைத்து வைக்க கூடாது.



Click it and Unblock the Notifications