For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாய்களுக்கு அரிக்குதா? குளிப்பாட்டுங்க!

By Mayura Akilan
|

Dog Care
கோடைகாலத்தில் உடல் வறட்சி, உஷ்ணம் போன்ற காரணங்களினால் நாய்களுக்கு அரிப்பு ஏற்படும். ஒரு சில நாய்கள் ரத்தம் வரும் வரை சொரிந்து புண்ணாக்கி கொள்ளும். எனவே நாய்களுக்கு அரிப்பு ஏற்பட்டால் அவற்றை தடுக்க கால்நடை மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

குளு குளுன்னு குளிப்பாட்டுங்க

நாய்களுக்கு அரிப்பு ஏற்பட்ட உடனே முதலில் செய்ய வேண்டிய விசயம் குளிர்ந்த நீரில் குளிப்பாட்டுவதுதான். இதனால் நாய்களுக்கு அரிப்பு ஏற்படுவதில் இருந்து ரிலீப் கிடைக்கும்.

ஷாம்புவை மாற்றுங்கள்

அரிப்பு இருக்கும் நாய்களுக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டலாம் இது சருமம் வறட்சி ஏற்படுவதை தடுக்கும்

நாய்களுக்கு என்ன ஷாம்பு போடுகிறீர்கள். சென்சிடிவ் சரும்ம் உள்ள நாய்களக்கு ஒரு சில ஷாம்புகள் ஒத்துக்கொள்ளாது எனவே நாய்களுக்கு உபயோகப்படுத்தும் ஷாம்புகளை மாற்றவும்.

பேக்கிங் சோடா

நாய்களுக்கு எந்த இடத்தில் அரிப்பு ஏற்படுகிறதோ அந்த இடத்தில் எப்சோம் உப்பு வைக்கலாம். குடிக்க தண்ணீர் வைக்கலாம். இதனால் நாய்களுக்கு அரிக்க வேண்டும் என்கிற எண்ணம் கட்டுப்படும். அதேபோல் பேக்கிங் சோடா எடுத்து குளிக்கும் தண்ணீரில் கலந்து அதை அரிப்பு ஏற்படும் இடத்தில் அப்ளை செய்யலாம்.

வைட்டமின் உணவுகள்

ஆரோக்கியமான சருமத்திற்கும், பற்கள், நகங்களுக்கும் ஆரோக்யமான உணவு அவசியம். எனவே தேவையான அளவு வைட்டமின், தாது உப்புகள் நிறைந்த உணவுகளை நாய்களுக்கு அளிக்க வேண்டும்.

சத்து நிறைந்த மீன் எண்ணெய்களை உணவுகளில் கலந்து கொடுக்கலாம். தண்ணீரில் ஓட்ஸ் மீல் கலந்து நாய்களுக்கு சாப்பிட கொடுக்கலாம். இது நாய்களின் சருமத்திற்கு நல்லது.

உண்ணிகள்

நாய்களின் உடலில் அதிகமாக முடி இருந்தாலும் அரிக்கும். அதேபோல் அதிகமாக உண்ணிகள் இருந்தாலும் அரிப்பெடுக்கும். உண்ணிகளை கொல்ல அதற்கேற்ப மருந்துகளை வாங்கி உபயோகிக்கலாம்.

அதையும் மீறி நாய்களுக்கு அரிப்பு எடுத்தால் உடனே நல்ல கால்நடை மருத்துவரை அணுகவும்.

English summary

Home Remedies for Itchy Dogs | நாய்களுக்கு அரிக்குதா? குளிப்பாட்டுங்க!

However unfortunately itching is very common in dogs and there are a range of different things that might be causing it from heat, to dry skin, to fleas or ticks. Here we will look at some of the ways you can address your pup's irritation with easy home remedies.
Story first published: Monday, April 16, 2012, 16:19 [IST]
Desktop Bottom Promotion