Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
வீட்ல நாய் வளர்க்குறீங்களா!!! சுத்தமா வெச்சுக்கோங்க!!!

செல்லமாக வளர்க்கும் நாய்களை தினமும் குளிப்பாட்ட வேண்டுமென்று அவசியமில்லை. ஆனால், அவற்றை சுத்தமாக எந்த ஒரு அழுக்கும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாற்றம் அடிக்க ஆரம்பித்துவிடும். ஆகவே குறைந்தது மூன்று நாட்களுக்கு ஒரு முறையாவது நாய்களை குளிப்பாட்ட வேண்டும். அதனால் எந்த ஒரு நோயும் நாய்க்கும் வராது, நமக்கும் வராது. நிறைய நாய்கள் தண்ணீரைப் பார்த்தால் பயந்து, குரைக்க ஆரம்பிக்கும். ஆகவே அப்போது அதனை ஒரு குழந்தையை எப்படி சமாளித்து, குளிப்பாட்டுகிறோமோ, அப்படி அதன் சிந்தனையையும் திசை திருப்ப வேண்டும். இதனால் அதன் பயம் போய்விடுவதோடு, அதற்கு ஒரு தன்னம்பிக்கையும் வரும்.
நாய்களின் மீது இருக்கும் முடிகளை தினமும் சீப்பை வைத்து சீவ வேண்டும். அதனால் நாய்களின் மீது இருக்கும் அழுக்குகள் நீங்கி விடுவதோடு, நாய்களுக்கும் ஒரு மசாஜ் போன்று இருக்கும்.
தினமும் எப்படி வாய் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நாம் பற்களை தேய்க்கின்றோமோ, அப்படி தான் நாய்களுக்கும் மூன்று நாட்களுக்கு ஒரு முறை என்று தேய்க்காமல், தினமும் ஒரு முறை பற்களை தேய்க்க வேண்டும். அதனால் அதன் பற்களில் எந்த ஒரு நோயும் வராமல் தடுப்பதோடு, அதற்கு பிற்காலத்தில் வரும் பிரச்சனையையும் தடுக்கலாம். ஆகவே அதற்கு கடைகளில் விற்கும் நாய்க்கான மென்மையான பிரஸ்களை வாங்கி, நல்ல பேஸ்ட் பயன்படுத்தி தேய்க்கலாம். ஆனால் அதை விட சிறந்தது பேக்கிங் சோடாவுடன், சிறிது உப்பு மற்றும் தண்ணீரை விட்டு கலந்து தேய்த்தால், அதன் பற்களில் இருக்கும் கிருமிகள் அழிந்துவிடும்.
அனைவருக்குமே நகங்கள் என்று இருந்தால், அதில் அழுக்குகள் கண்டிப்பாக இருக்கும். அதிலும் நாய்களுக்கு சொல்லவா வேண்டும். அது அங்கம் இங்கும் செல்லும் போது, மண் தரையில், எதையேனும் புதிதாக இருப்பது போல் தோன்றினால், தன் கால்களை வைத்து, தோண்டும் குழிகளில் அதன் நகங்களில் கோடிக்கணக்கில் கிருமிகள் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கும். ஆகவே நம் செல்ல நாய்கள் ஆரோக்கியமாக இருக்க, அதன் நகங்களை அடிக்கடி வெட்டி விட வேண்டும். நகங்கள் சற்று கடினமாக இருந்தால், நாய்களுக்கு குளிப்பாட்டியவுடன், ஈரமாக இருக்கும் போது வெட்டினால், ஈஸியாக வெட்டலாம்.
இவ்வாறெல்லாம் கவனித்து வந்தால், நம் வீட்டு செல்ல நாய்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, நாமும் ஆரோக்கியமாக இருக்கலாம்.



Click it and Unblock the Notifications