Latest Updates
-
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
வாஸ்துப்படி, கிருஷ்ணரின் சிலையை இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண மழை கொட்டும்...
Janmashtami 2023: நிறைய பேர் தங்களின் வீடுகளில் கடவுள்களின் சிலைகளை வைத்து வழிபட விரும்புவார்கள். அதில் விநாயகருக்கு அடுத்தப்படியாக கிருஷ்ணரின் சிலைகளை வீட்டில் வைத்து வழிபட நிறைய பேர் ஆசைப்படுவதுண்டு.
கிருஷ்ணரின் சிலைகளானது அழகாக காட்சியளிப்பதோடு, அது வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் தரக்கூடியது. அதுவும் கிருஷ்ண ஜெயந்தி வரவுள்ளது. இந்த கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரின் சிலைகளை வீட்டில் வாங்கி வைப்பது வீட்டில் செல்வத்தை அதிகரிக்கும்.

வாஸ்துப்படி, வீட்டில் வைக்கும் எந்த ஒரு பொருளையும் சரியான திசையில், சரியான இடத்தில் வைக்க வேண்டும். அப்படி வைத்தால் தான் அந்த பொருளால் வீட்டிற்கு கிடைக்கும் முழு பலனைப் பெற முடியும்.
அதுவும் கிருஷ்ணரின் சிலைகளை வீட்டில் வைக்கும் போது சரியான திசை, சரியான இடம் மற்றும் சிலை செய்யப்பட்ட பொருள் போன்றவற்றை கவனித்து வைக்க வேண்டும். கிருஷ்ணர் சிலைகளை வீட்டில் தவறான இடத்தில் வைத்தால், அது அதிர்ஷ்டத்திற்கு பதிலாக துரதிர்ஷ்டத்தையே தரும். இப்போது கிருஷ்ணர் சிலைக்கான சில வாஸ்து விதிகளைக் காண்போம்.
* கிருஷ்ணரின் சிலை என்றில்லை, எந்த ஒரு கடவுள் சிலையை வீட்டில் வைப்பதாக இருந்தாலும், முதலில் அந்த சிலையின் உயரத்தை முதலில் கவனிக்க வேண்டும். மற்றும் அந்த சிலை வைக்கும் பகுதியின் உயரத்தையும் பார்க்க வேண்டும். மேலும் கடவுள் சிலையானது மிகவும் உயரமாகவோ, மிகவும் கீழாகவோ இல்லாமல், கண் மட்டத்தில் சமமாக இருக்க வேண்டும்.
* கிருஷ்ணரின் சிலைகளை வீட்டின் வடகிழக்கு மூலையில் தான் வைக்க வேண்டும் மற்றும் சிலையானது கிழக்கு அல்லது மேற்கு திசையை பார்த்தவாறு இருக்க வேண்டும். எப்போதும் வடக்கு தெற்கு திசையை பார்த்தவாறு வைக்கக்கூடாது. இப்படி வைப்பது வாஸ்துப்படி நல்லதாக கருதப்படுவதில்லை. மேலும் கடவுள் சிலைகள் கழிவறை அல்லது படுக்கை அறைக்கு அருகில் இருக்கக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
* கிருஷ்ணர் சிலையை வீட்டில் வைக்கும் போது, சிலைக்கு வெளிச்சமானது சரியான அளவில் கிடைக்க வேண்டும். அதுவும் ஒளியானது தென்கிழக்கு பக்கத்திலிருந்து சிலையைத் தாக்க வேண்டும். நீங்கள் கோவில்களில் கவனித்தால், விளக்குகள் இந்த திசைகளில் தான் வைக்கப்பட்டிருக்கும். ஏனெனில் இந்த திசை வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலை ஈர்ப்பதோடு, நல்ல சக்தியை வீட்டிற்குள் ஈர்க்கிறது. இதன் விளைவாக வீட்டில் செல்வம், மகிழ்ச்சியும் பெருகும்.
* புத்தர் சிலையைப் போன்றே கிருஷ்ணர் சிலையின் வகையும் மிகவும் முக்கியமானது. உங்கள் வீட்டில் கைக்குழந்தை இருந்தாலோ அல்லது வீட்டில் குழந்தையின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலோ, குழந்தை வடிவிலான கிருஷ்ணரின் சிலையை வைப்பது நல்லது. ஆனால், வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து, செல்வம் பெருக வேண்டுமென்று விரும்பினால், கன்றுடன் கூடிய கிருஷ்ணர் சிலையை வாங்கி வைக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications