Latest Updates
-
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
தொழிலில் எந்த முன்னேற்றமும் தெரியமாட்டீங்குதா? அப்ப வீட்டுல இந்த மாற்றங்களை செய்யுங்க..
நீங்கள் உங்கள் தொழில் அல்லது வேலையில் வெற்றி அல்லது முன்னேற்றத்தைக் காண்பதில் சிக்கலை சந்திக்கிறீர்களா? அப்படியானால் ஒருசில வாஸ்து டிப்ஸ்களை உங்கள் வீட்டில் மட்டுமின்றி, பணியிடத்திலும் பின்பற்றுங்கள்.
நாம் அனைவருமே வாழ்வில் பெற விரும்புவது வெற்றியையும், முன்னேற்றத்தையும் தான். வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை காண வேண்டுமானால் அதற்கு வாஸ்து சாஸ்திரம் பெரிது உதவி புரியும். ஒருவரது வளர்ச்சிக்கு அவரது கடின உழைப்பு மற்றும் அதிர்ஷ்டம் மட்டுமின்றி, அவர் வாழும் வீட்டின் சூழலும் ஓர் முக்கிய காரணம். அதனால் தான் நாம் வாழும் வீடு சரியான வாஸ்துப்படி இருக்க வேண்டுமென்று கூறுகிறார்கள்.

நீங்கள் உங்கள் தொழில் அல்லது வேலையில் வெற்றி அல்லது முன்னேற்றத்தைக் காண்பதில் சிக்கலை சந்திக்கிறீர்களா? அப்படியானால் ஒருசில வாஸ்து டிப்ஸ்களை உங்கள் வீட்டில் மட்டுமின்றி, பணியிடத்திலும் பின்பற்றுங்கள். இதனால் உங்ளைச் சுற்றி ஒரு நேர்மறை ஆற்றல் நிரம்பியிருக்கும். இதன் விளைவாக, தொழில் அல்லது வேலையில் நல்ல முடிவுகளைப் பெறலாம். இப்போது தொழிலில் வெற்றியும், முன்னேற்றத்தையும் பெற உதவும் சில வாஸ்து டிப்ஸ்களைக் காண்போம்.

டிப்ஸ் #1
வாஸ்துப்படி, வீட்டில் வடகிழக்கு பகுதியை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க முயற்சிக்க வேண்டும். ஏனெனில் வாஸ்து சாஸ்திரத்தின் படி, இந்த திசையானது வளர்ச்சி, வெற்றி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியுடன் தொடர்புடையது. எனவே இதைப் பின்பற்றுங்கள்.

டிப்ஸ் #2
வீட்டில் ஒரு நீரூற்று (Water Fountain) இருப்பது நல்லது. இது மனதிற்கு அமைதியைத் தருவதோடு, தொழிலில் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் காண வைக்கும். அதற்கு வீட்டின் வடகிழக்கு பகுதியில் ஒரு நீரூற்றை வைக்க வேண்டும். ஆனால் அப்படி வைக்கும் நீரூற்றில் விளக்குகள் எதுவும் இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

டிப்ஸ் #3
வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவர் தொழிலில் நல்ல லாபத்தையும், பண வரவையும் பெற நினைத்தால், பணத்தையும், விலையுயர்ந்த பொருட்களையும், வீட்டின் வடக்கு பகுதியில் உள்ள அலமாரியில் வைக்க வேண்டும்.

டிப்ஸ் #4
வாஸ்துப்படி தொழிலில் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கான திசை வடகிழக்கு பகுதியாகும். எனவே நீங்கள் வீட்டில் இருந்து வேலை செய்பவராக இருந்தால், அந்த வேலையை வீட்டின் வடகிழக்கு பகுதியில் செய்யுங்கள். இதனால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.

டிப்ஸ் #5
தூங்கும் போது, தலையை கிழக்கு திசை நோக்கி வைத்து படுக்க வேண்டும். இது நல்ல தொழில் வளர்ச்சிக்கு உதவுவதோடு, ஒருவரின் செறிவு நிலை மற்றும் மன உறுதியை மேம்படுத்த உதவுகிறது.

டிப்ஸ் #6
வாஸ்துப்படி, நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உள்ள ஃபர்னிச்சர்கள் மரத்தாலானதாக இருக்க வேண்டும் மற்றும் மேஜையானது செவ்வக வடிவத்தில் இருக்க வேண்டும். இது பணியிடத்தில் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவி புரியும்.

டிப்ஸ் #7
உங்கள் வீட்டில் மற்றும் பணியிடத்தில் உள்ள குழாய்களில் இருந்து நீர் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த நீர்க்கசிவு பண இழப்பிற்கு வழிவகுப்பதோடு, முன்னேற்றத்திற்கும் இடையூறை ஏற்படுத்தும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
