For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஸ்து நாள் 2020: வீட்டில் எந்த திசையில் எப்படி இருந்தா அஷ்டலட்சுமி யோகம் வரும்...

|

சதுரமும் செவ்வகமும் ஒருவரின் வாழ்க்கையை மாற்றுமா? மாற்றும் என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள். வீடு கட்டி வசிக்கும் இடம் சதுரமாகவும் செவ்வகமாகவும் இருக்கவேண்டும். நம் அனைவரின் வாழ்க்கையிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். வசிக்கும் வீட்டில் உள்ள மேடு பள்ளங்களே ஒருவரின் ஏற்றத்தாழ்வுகளை நிர்ணயிக்கின்றன. வாஸ்து சரியாக இருந்தால் வெற்றியும் தேடி வரும். ஒருவரை கோடீஸ்வரர் ஆக மாற்றுவதே மேடுபள்ளங்கள் என்கின்றன. வாஸ்து பகவானை குளிர்விக்க வாஸ்து நாளில் பூஜை செய்வது நல்லது. தை 12ஆம் நாள் ஜனவரி 26ஆம் தேதி காலை 10.52 மணி முதல் காலை 11.28 மணி வரை வாஸ்து விழிப்பு நேரத்தில் பூஜை செய்தால் அற்புதமாக வீடு கட்டி அம்சமாக வாழலாம்.

MOST READ: உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

இந்துக்களின் முதல் நூல்களான நான்கு வேதங்களில் நான்காவது வேதமான அதர்வண வேதத்தில் வாஸ்து பற்றி சொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் பல்வேறு அம்சங்களையும் விரிவாக விளக்கிப் பல நூல்கள் பழைய காலத்திலேயே எழுதப்பட்டுள்ளன. வீடு கட்ட ஆரம்பிக்கும் முன் அல்லது செப்பனிட ஆரம்பிக்கும் முன் சரியான நேரத்தில் அருகம்புல், துளசி கொண்டு மனையின் ஈசானியத்தில் வாஸ்து பூஜை செய்தல் மிக நல்லது. வீட்டை செப்பனிடும் முன் வாஸ்து நிபுணர்களைக் கொண்டு தீர நிதானமாக ஆராய்ந்த பின் பழுது பார்க்கும் பணியை வேகமாகவும் கவனமாகவும் செய்ய முடிக்க வேண்டும்.

MOST READ: இத தினமும் ஒரு கையளவு சாப்பிட்டால் தொப்பை நிச்சயம் குறையுமாம்.. ட்ரை பண்ணி பாருங்களேன்!

வாஸ்து என்றால் வாழும் இடம் என்று பொருள். மிகச்சரியான வாஸ்து உள்ள வீட்டில் பிரச்சனைகள் இருக்காது. நிம்மதி மகிழ்ச்சி பெருகும். புதிதாக வீடு கட்டுபவர்கள் அனைவரும் வாஸ்து நாளில் பூமி பூஜை போட்டு வீடு கட்டத் தொடங்கினால், வேலைகள் வெகு சீக்கிரம் முடியும். வாஸ்து பகவான் யார்? அவருக்கு ஏன் பூஜை செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ள இந்த கதையை படிங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாஸ்து புருஷன்

வாஸ்து புருஷன்

அண்டகாசுரன் என்ற அரக்கன், தன்னை வெற்றிகாண எவரும் இல்லை என்ற மமதையில் சிவபெருமானை போருக்கு அழைத்து போரிட்டான். அப்போது சிவபெருமானுடன் போரிட்ட அசுரனின் நெற்றியில் வழிந்த வியர்வையில் இருந்து ஒரு பூதம் தோன்றியது. மிகவும் கரிய நிறம் கொண்ட அந்த பூதத்திற்கு அகோரப் பசி ஏற்பட்டது. அதனால் கண்ணில் கண்ட அனைத்தையும் விழுங்கியது. கொடிய அசுரன் அண்டகாசுரனின் உடலையும் விழுங்கியது. தீராத பசியில் இருந்த பூதம் தன் பசியை தீர்த்து வைக்குமாறு சிவபெருமானிடம் வேண்டியது. சிவபெருமான் அந்த பூதத்திற்கு அனைத்தையும் உண்ணும் வரத்தை அளித்தார்.

பிரம்மா கொடுத்த வரம்

பிரம்மா கொடுத்த வரம்

இதனால் அந்த பூதத்திற்கு இந்த பூமியையே அளிக்கும் சக்தி உண்டானது. உடனே தேவர்கள் அனைவரும் பிரம்மாவிடம் முறையிட்டனர். பிறகு பிரம்மதேவன் அந்த பூதத்திடம் பூமியில் மக்கள் வீடு கட்டும் போது அவர்கள் படைக்கும் உணவை உண் என்றும், சாஸ்திரப்படி வீடு கட்டவில்லை என்றால் அந்த வீட்டில் வசிப்பவரை கஷ்டப்படுத்து என்றும் வரம் அளித்தார். அந்த பூதமே வாஸ்து பகவான் என்றும் வாஸ்துப்படி வீடு கட்டுபவர்களுக்கு நன்மைகளையும், மற்றவர்களுக்கு தீமையையும் அளித்து வருகிறார்.

வாஸ்து மண்டலம்

வாஸ்து மண்டலம்

வாஸ்து புருஷ மண்டலம் என்பது ஒரு சதுர வடிவத்தை 64 அல்லது 81 கட்டங்களாகப் பிரித்த ஒரு வரி வடிவமாகும். இவற்றில் குறிப்பிட்ட சில கட்டங்களுக்கு பல்வேறு தேவர்கள் அதிபதிகளாக இருப்பதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. கட்டிடம் கட்டுவதற்கான நிலத்தில் கட்டிடத்தின் அமைவிடம், நோக்கும் திசை, மற்றும் கட்டிடத்தின் வெவ்வேறு பகுதிகள் இருக்க வேண்டிய இடம் என்பவற்றைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது வாஸ்து புருஷ மண்டலம் ஆகும்.

இம்மண்டலத்தின் மையப் பகுதிக்கு வேதகால முழுமுதற் கடவுளான பிரம்ம தேவன் அதிபதியாக உள்ளார். 81 கட்டங்களைக் கொண்ட வாஸ்து புருஷ மண்டலத்தில் மையப்பகுதியிலுள்ள ஒன்பது கட்டங்களும் இவருக்கு உரியவை. இதனால் இப்பகுதி பிரமஸ்தானம் எனப்படுகிறது. இம்மண்டலத்தில் மொத்தமாக 45 தேவர்கள் இருப்பதாக வாஸ்து நூல்கள் கூறுகின்றன. முக்கியமான எட்டுத் திசைகளுக்கும் அதிபதியான தேவர்கள் அட்டதிக்குப் பாலர்கள் எனப்படுகின்றார்கள்.

எட்டு திசைகளின் அதிபதிகள்

எட்டு திசைகளின் அதிபதிகள்

வடக்குத் திசைக்குப் குபேரனும், கிழக்குத் திசைக்கு ஆதித்தனும், தெற்குத் திசைக்கு இயமனும், மேற்குத் திசைக்கு வருணனும் அதிபதிகளெனக் குறிப்பிடப்படுகிறார்கள். வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளுக்கு முறையே வாயு, ஈசன், அக்னி, பித்ரு ஆகியோர் அதிபதிகள். இந்து தத்துவங்களின்படி நிலம் உயிர்ப்புள்ள ஒன்றாகவே கருதப்படுகின்றது. ஒவ்வொரு கட்டிட மனையிலும் உள்ள இந்த உயிர்ப்புச் சக்தியையே வாஸ்து புருஷன் என வாஸ்து சாஸ்திரம் உருவகப்படுத்துகின்றது.

வாஸ்து டிப்ஸ்

வாஸ்து டிப்ஸ்

நாம் வாங்கும் நிலம் எப்படி இருந்தாலும் அதை சதுரமாகவோ, செவ்வகமான வடிவத்திலோ மாற்ற வேண்டும். ஈசானிய மூலை நீண்டு இருப்பது மிகவும் நல்லது. வீட்டுக்கு வடக்கு, வடகிழக்கு, கிழக்கு திசையில் ஓடை, கால்வாய், ஏரி, ஆறு இருப்பது நல்லது. வீட்டுக்கு தெற்கு, தென்மேற்கு, மேற்கு திசையில் மலை, குன்று இருப்பது நல்லது. வீடு கட்ட கடைக்கால் தோண்டும் போது முதலில் ஈசானியத்தில் ஆரம்பித்து கடைசியில் தென்மேற்கே தோண்டி முடிக்க வேண்டும். வீடு கட்டுமானப் பணியின் போது முதலில் தென்மேற்கில் ஆரம்பித்து ஈசானியத்தில் முடிக்க வேண்டும்.

மேடு பள்ளம் எங்கே எப்படி

மேடு பள்ளம் எங்கே எப்படி

மனையில் வீடு கட்டும் போது வடக்கு, வடகிழக்கு, கிழக்கு பகுதியில் கிணறு அல்லது பம்ப் அமைத்து நீர் எடுத்து பயன்படுத்த வேண்டும். வீட்டின் மத்தியிலும் மற்ற திசைகளில் அமையும் கிணறு, பம்ப் தீய பலன்களைத் தரும். வீட்டின் தெற்கு, மேற்கு பகுதிகளில் குறைந்த இடமும், வடக்கு, கிழக்கில் அதிக இடமும் விட்டு கட்ட வேண்டும். வீட்டின் தெற்கு, மேற்கு, தென்மேற்கு உயர்ந்தும் வடக்கு, கிழக்கு, வடகிழக்குப் பகுதி தாழ்ந்தும் இருக்க வேண்டும். வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பகுதிகளில் பால்கனி அமையலாம். மழைநீர் ஈசானிய மூலை வழியாக வெளியேற வேண்டும். ஈசானிய மூலை நீண்டு இருப்பது மிகவும் நல்லது. அலமாரிகள் தெற்கு அல்லது மேற்கு பகுதியில் அமைவது நல்லது.

பஞ்சபூத ஆற்றல்

பஞ்சபூத ஆற்றல்

பஞ்சபூத ஆற்றல் கிடைக்க ஈசானிய மூலை காலியாக இருக்க வேண்டும். மாலையில் விளக்கேற்ற சுபிட்சமுண்டாகும். வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிக கதவுகள், ஜன்னல்கள் அமைய வேண்டும். வீட்டிற்கு ஜன்னல், கதவுகள் இரட்டைப்படையில் இருப்பதே நல்லது. வடகிழக்கில் குடிநீர் குழாய் இருத்தல் வேண்டும். ஈசானிய மூலையில் மண் அமைத்து அருகம்புல், துளசி வளர்ப்பது நல்லது. உயரமான துளசி மாடம் கட்டக்கூடாது. ஈசானிய மூலையில் மாடிப்படி கூடாது. ஈசானிய மூலையில் சமையல் அறை கூடாது. ஈசானிய மூலையில் குப்பை கூளங்களை குவித்தல் கூடாது.

நீர் தொட்டி எங்கே வரணும்

நீர் தொட்டி எங்கே வரணும்

வீடு மற்றும் காம்பவுண்டின் வடகிழக்கு மூலை வளைவாக இருக்க கூடாது. மாடிப்படி தென்மேற்கு அல்லது வடமேற்கு மூலையில் அமைய வேண்டும். வீட்டிற்கு தெற்கு மேற்கு உயர்ந்து இருக்க வேண்டும். கழிவுநீர் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி செல்ல வேண்டும். கழிப்பிடம் தெற்கு அல்லது வடக்கு நோக்கி அமருமாறு அமைய வேண்டும். செப்டிக் டேங்க் வடமேற்கு அல்லது தென்கிழக்கே காம்பவுண்டு சுவரை தொடாமல் கட்ட வேண்டும். தென் மேற்கு அல்லது வடமேற்கு மூலையில் நீர் உபயோகத் தொட்டி அமைய வேண்டும்.

பணம் வரும் வாய்ப்பு அதிகம்

பணம் வரும் வாய்ப்பு அதிகம்

ஈசான்யம் உயரமாகவும், கன்னி மூலை பள்ளமாகவும் இருந்தால் பல துயரங்களில் ஆழ்த்தி விடும். சந்ததிகளுக்குக் கண்டங்கள் உண்டாகும். அக்னி மூலை மேடாகவும், வாயு மூலை பள்ளமாகவும் இருந்தால், நல்லவை நடக்கும். பெண்களுக்கு ஆரோக்கியம் ஏற்படும். வாயு மூலை மேடாகவும், அக்னி மூலை பள்ளமாகவும் இருந்தால், அவ்வீட்டில் தீ விபத்து, திருட்டு போன்றவை ஏற்படும். கன்னி மூலை உயரமாகவும்,ஈசான்யம் பள்ளமாகவும் இருந்தால், மிக்க செல்வ வளர்ச்சியும், புகழும் உண்டாகும். ஆரோக்கியம் கூடும்.

அதிர்ஷ்டமான வீடு

அதிர்ஷ்டமான வீடு

அக்னி மூலையும், தெற்கும் உயரமாகவும், வாயுமூலையும், வடக்கும் பள்ளமாகவும் இருந்தால் பல வகை இலாபங்கள் ஏற்படும். தெற்கும், தென்மேற்கும் உயரமாகவும், வடக்கும், ஈசான்யமும் பள்ளமாகவும் இருந்தால் பணம் தாராளமாக வரும். நீண்ட ஆயுள், சந்தானம் விருத்தி ஏற்படும். தென்மேற்கும் மேற்கும், உயரமாகவும் இருந்தால் பல வழிகளில் நன்மைகள் உண்டாகும். வடக்கும், வடமேற்கும் உயர்ந்தும், தெற்கும், அக்னி மூலையும், பள்ளமாகவும் இருந்தால் நோய்கள் வாட்டும். நீண்ட கால வியாதிகள் தோன்றும். உங்க வீடு எப்படி இருக்கு பாருங்க உடனே அதற்கு பரிகாரம் பண்ணுங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vastu Day Tips: Positive Energy In Your Home

Vastu is important when planning your dream home.But vastu also plays on equally important part when it comes to each individual planing their home and life.
Story first published: Saturday, January 25, 2020, 16:54 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more