For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா போன்ற நோய்கள் உங்கள் வீட்டை தாக்காமல் சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி?

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுநோய் தனது ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கும் வேளை இது. இந்த வகையான கிருமிகள் மேலும் பரவாமல் உங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உகந்த நேரம் இதுவே.

|

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுநோய் தனது ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கும் வேளை இது. இந்த வகையான கிருமிகள் மேலும் பரவாமல் உங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உகந்த நேரம் இதுவே. இருமல் அல்லது தும்மல் மூலம் உடல் திரவங்கள் காற்றின் வழியே மிதந்து அடுத்தவர்களுக்கு பரவுவதால் இந்த நோய்க்கிருமி மற்றவர்களைத் தாக்குகிறது.

Home Hygiene: Clean Your House This Way To Prevent Coronavirus Or Any Flu-Like Disease

தொற்று பாதிப்பு உங்கள் வீட்டில் இருந்தும் பரவ முடியும். பாதிக்கப்பட்டவர்கள் உடல் திரவங்கள் காற்றின் வழியே உங்கள் வீட்டின் மேற்பரப்பில் படர்வதால் கூட இந்த பாதிப்பு பரவக்கூடும். அதனால், உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு வைரஸ் தொற்று பாதிப்பு இருந்தால், உங்கள் இல்லத்தின் எல்லாப் பகுதிகளையும் சுத்தமாக வைத்துக் கொள்வதால் மற்றவர்கள் இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும்.

MOST READ: கொரோனா லாக்டவுன்: உடனே இந்த பொருட்களை வாங்கி வெச்சுகோங்க.. இல்லன்னா இனிமேல் வாங்க முடியாம போயிடும்..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தொற்றை நீக்குவதற்கும், வழக்கமாக சுத்தம் செய்வதற்கும் என்ன வேறுபாடு?

தொற்றை நீக்குவதற்கும், வழக்கமாக சுத்தம் செய்வதற்கும் என்ன வேறுபாடு?

உங்கள் வீட்டின் மேற்பரப்பில் இருக்கும் கிருமிகளைக் கொல்வதற்கும் , தினசரி உங்கள் வீட்டை சுத்தம் செய்வதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. தினசரி சுத்தம் செய்வது என்பது அழுக்கு மற்றும் கிருமிகளை மேலோட்டமாக சுத்தம் செய்வதாகும். தொற்று நீக்குவது என்பது மேற்பரப்பில் உள்ள கிருமிகளை முற்றிலும் அழிக்கும் முறையாகும்.

கொரோனா மாற்று ஃப்ளு போன்ற கிருமிகள் கடினமான ரசாயனங்கள் மூலம் மட்டுமே கொல்லப்படுகின்றன என்பதால் முழுமையான சுத்தம் அவசியம் தேவை. மேலும் மேற்பரப்புகளை வெறும் கைகளால் தொடுவதால் கிருமி தொற்று பரவும் வாய்ப்பு உண்டு.

உங்கள் வீட்டில் கிருமிகள் எத்தனை காலம் வாழும்?

உங்கள் வீட்டில் கிருமிகள் எத்தனை காலம் வாழும்?

வீட்டின் மேற்பரப்பில் கிருமிகள் இவ்வளவு காலம் தான் வாழும் என்று குறிப்பிட்டு சொல்வதற்கில்லை. ஆனால் எல்லா கிருமிகளும் சில மணி நேரம் முதல் சில நாட்கள் தங்க நேரலாம். மற்றும் மேற்பரப்பை பொறுத்து கிருமிகளின் ஆயுள் நீட்டிக்கப்படுகிறது. உங்கள் வீடு சுத்தமாக இல்லாத பட்சத்தில் அல்லது ஏதாவது ஒரு இடம் ஈரமாக இருக்கும் பட்சத்தில் அந்த இடத்தில் கிருமி தாக்கம் ஏற்படலாம்.

குறிப்பாக ஒருவர் தும்மும் போது அல்லது இருமும் போது அதுவும் அவர் முகமூடி எதுவும் அணிந்து இல்லாமல் இருந்தால் அவரைச் சுற்றயுள்ள இடம் முழுவதும் கிருமிகளால் தாக்கப்படுகிறது. கிருமி பாதிக்கப்பட்ட இந்த இடங்களை மற்றவர் தொடுவதால் எளிதில் அந்த நபரையும் கிருமி தாக்கும் அபாயம் உண்டாகலாம். ஆகவே, மனிதர்கள் அதிகமாக தொடும் ஒரு பொருள் கிருமி தாக்கத்திற்கு உள்ளாவது இயல்பானது. லேண்ட்லைன், தொலைக்காட்சி ரிமோட், சமையலறை திண்ணை, டேபிள்டாப் போன்றவை வீட்டில் கிருமிகள் அதிகம் வசிக்கும் இடங்களாகும்.

கொரோனா வைரஸ் தாக்கத்தில் வீட்டை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கான குறிப்புகள்:

கொரோனா வைரஸ் தாக்கத்தில் வீட்டை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கான குறிப்புகள்:

எந்த ஒரு சூழலிலும் கிருமிகள் தாக்கும் வாய்ப்பு உள்ளது. வெப்பம் மற்றும் டிடர்ஜென்ட் போன்றவை கிருமிகளை அழிக்க வல்லது ஆகும்.

மேற்பரப்பில் கவனம் செலுத்துங்கள்

மேற்பரப்பில் கவனம் செலுத்துங்கள்

வீட்டின் மேற்பரப்புகள் குறிப்பாக தரை, சமையலறை அலமாரிகள் போன்றவற்றை அவ்வப்போது சுத்தம் செய்து தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் பொதுவாக பயன்படுத்தும் கிருமிநாசினி ஓரளவிற்கு வீட்டை கிருமிகளிடமிருந்து பாதுகாக்கும். ஆல்கஹால் அடிப்படை கொண்ட கிருமிநாசினி நல்ல பலன் தரும் . ஆனால் அவற்றைக் கொண்டு சுத்தம் செய்து முடித்தவுடன் உங்கள் கைகளை நன்றாக கழுவ வேண்டும் என்பதை மறக்காதீர்கள். மேலும் இவற்றைப் பயன்படுத்தும் போது உங்கள் கைகளால் கண்கள், வாய் மற்றும் மூக்கு போன்ற பகுதிகளை தொட வேண்டாம். பேப்பர் டவல், துணி, வைப்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம் .

S வடிவத்தில் சுத்தம் செய்யவும்

S வடிவத்தில் சுத்தம் செய்யவும்

வீட்டை சுத்தம் செய்யும் போது எப்படி சுத்தம் செய்கிறீர்கள் என்பது முக்கியம். ஒரே திசையில் சுத்தம் செய்ய வேண்டாம். மேற்பரப்பில் சுத்தம் செய்யும் போது ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கம் S வடிவத்தில் சுத்தம் செய்யவும். மாப் பயன்படுத்தி சுத்தம் செய்து மறுமுறை துணி கொண்டு சுத்தம் செய்தால் அந்த துணியை நன்கு அலசி வெயிலில் காய வைக்கவும் . அல்லது வாஷிங் மெஷினில் வழக்கமான டிடர்ஜென்ட் கொண்டு அந்த துணியை அலசுவதால் கிருமிகள் கொல்லப்படும் வாய்ப்பு உண்டு. இந்த துணிகளை துவைக்கும் போது சூடான நீர் பயன்படுத்துவது நலல்து.

மேலும் சில குறிப்புகள்

மேலும் சில குறிப்புகள்

கிருமிகளை அழிக்க பயன்படுத்தும் துணிகளை வெந்நீர் பயன்படுத்தி அலசியுங்கள். அலசியபின் அந்த துணிகளை வெயிலில் உலர்த்துங்கள். உங்கள் வீட்டில் ஒரு நபர் நோய்வாய்பட்டிருந்தால் அவருடைய துணிகளை தனியாக துவைத்து போடுங்கள். சுத்தம் செய்ய பயன்படுத்தும் டவல், ஷீட் போன்றவற்றை வாஷிங் மெஷினில் துவைத்து முடித்தவுடன் அதனை மற்ற இடங்களில் வைப்பதால் கிருமிகள் ஒருவேளை அந்த இடத்தில் பரவ நேரலாம் என்பதால் வேறு இடங்களில் எங்கும் வைக்காமல் உடனடியாக வெயிலில் உலர்த்துங்கள். அதனால் கிருமிகள் பரவுவது குறைகிறது. வீட்டை சுத்தம் செய்து முடித்தவுடன் உங்கள் கைகளை சோப்பு பயன்படுத்தி நன்றாக கழுவ மறக்க வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Hygiene: Clean Your House This Way To Prevent Coronavirus Or Any Flu-Like Disease

Here are some ways to clean your house to prevent coronavirus or any flu like disease. Read on ...
Desktop Bottom Promotion