Latest Updates
-
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
பாத்திரத்தில் இருந்து வெளிவரும் முட்டை துர்நாற்றத்தைத் தடுக்க சில டிப்ஸ்...
முட்டையை தினமும் சாப்பிட்டால் நல்லது என்பதற்காக, பலர் தினமும் முட்டையை பலவாறு சமைத்து உணவில் சேர்த்துக் கொள்வார்கள். அதில் குறிப்பாக முட்டையை வேக வைப்பார்கள் அல்லது பொரியல் போன்று செய்வார்கள். இப்படியெல்லாம் செய்து சாப்பிடும் போது அருமையாக இருக்கும்.
ஆனால் அதனை சாப்பிட்ட பின்பு, முட்டையை சமைத்த பாத்திரத்தை சுத்தம் செய்யும் போது, அதிலிருந்து வெளிவரும் நாற்றம் வாந்தி வரச் செய்துவிடும். இப்படி வெளிவரும் முட்டையின் நாற்றத்தைப் போக்குவது எப்படி? அதிலும் எளிதில் சுத்தம் செய்வது எப்படி என்று யோசிக்கிறீர்களா?
இதுப்போன்று வேறு படிக்க: சமையலறை கத்தியை சுத்தப்படுத்துவதற்கான சில எளிய வழிகள்!!!
அப்படியானால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில டிப்ஸ்களைப் பயன்படுத்தி பாருங்கள். இந்த முறைகள் அனைத்துமே, பாத்திரத்தில் இருந்து வெளிவரும் முட்டையின் துர்நாற்றத்தைப் போக்கிவிடும். சரி, இப்போது அந்த முறைகளைப் பார்ப்போமா!

கடலை மாவு முறை
முட்டையை சமைத்து சாப்பிட்ட பின்னர், பாத்திரத்தில் கடலை மாவைத் தூவி சிறிது நேரம் தேய்த்து ஊற வைத்து, பின் மீண்டும் தேய்த்தால், பாத்திரத்தில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தைத் தடுக்கலாம்.

எலுமிச்சை சாறு
பாத்திரத்தில் இருந்து வெளிவரும் முட்டையின் துர்நாற்றத்தைப் போக்க எலுமிச்சை சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதற்கு ஒரு துணியை எலுமிச்சை சாற்றில் நனைத்து, அதனை நாற்றமடிக்கும் பாத்திரத்தில் நன்கு தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி, பின் சோப்பு போட்டு தேய்த்தால், முட்டை துர்நாற்றத்தைப் போக்கலாம்.

வினிகர் ஸ்ப்ரே
பிளாஸ்டிக் பொருட்களில் முட்டையின் நாற்றம் இருந்தால் அது அவ்வளவு எளிதில் போகாது. ஆகவே பிளாஸ்டிக் தட்டில் முட்டையை வைத்து சாப்பிட்ட பின்னர், அதில் வினிகர் ஸ்ப்ரேவை தெளித்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் சோப்பு பயன்படுத்தி சுத்தமாக கழுவினால் போதும், துர்நாற்றம் மறைந்துவிடும்.

வினிகர் சிகிச்சை
பாத்திரத்தில் உள்ள முட்டையின் துர்நாற்றத்தைப் போக்க நினைத்தால், முதலில் சோப்பு பயன்படுத்தி பாத்திரத்தை கழுவி விட்டு, பின் ஒரு டீஸ்பூன் வினிகரை பாத்திரத்தின் மீது தெளித்து ஊற வைத்து, பிறகு நீரில் அலசி வைத்தால், பாத்திரம் நன்கு மணத்துடன் இருக்கும்.

பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா கூட வாந்தி வரச் செய்யும் முட்டை துர்நாற்றத்தைப் போக்கும். அதற்கு பேக்கிங் சோடாவை நீரில் போட்டு, அந்த நீரில் முட்டை சமைத்த பாத்திரத்தை பபோட்டு சிறிது நேரம் ஊற வைத்து, பின் சோப்பு பயன்படுத்தி கழுவினால், துர்நாற்றம் போய்விடும்.



Click it and Unblock the Notifications