Latest Updates
-
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்!
கண்ணாடியை பளிச்சென்று மின்னச் செய்ய சில டிப்ஸ்....
அனைவரும் கண்ணாடியை சுத்தம் செய்வது என்பது மிகவும் எளிது என்று நினைக்கின்றனர். உண்மையில், அது தான் தவறு. என்ன தான் வெறும் தண்ணீரைக் கொண்டு, கண்ணாடியை துடைத்தாலும், அதிலிருக்கும் கறைகளானது முற்றிலும் போகாமல் இருக்கும். எனவே கண்ணாடியில் படிந்திருக்கும் கறைகளை முற்றிலும் போக்குவதற்கு, ஒருசில பொருட்களைப் பயன்படுத்தினால், நிச்சயம் முகம் பார்க்கும் கண்ணாடியானது பளிச்சென்று மின்னும்.
அத்தகைய கண்ணாடியில் உள்ள கறைகளை போக்க சில ட்ரிக்ஸ் உள்ளன. உதாரணமாக, ஈரமான துணியைக் கொண்டு கண்ணாடியை துடைத்து விட்டு, காய்ந்த சுத்தமான துணியைக் கொண்டு துடைப்பதற்கு பதிலாக, செய்தித்தாள்களைப் பயன்படுத்தலாம். இதனால் கண்ணாடியில் உள்ள ஈரம் முற்றிலும் உறிஞ்சப்படுவதோடு, தண்ணீர் கறைகளும் அகலும். சரி, இப்போது இது போன்ற சில ட்ரிக்ஸ்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து கண்ணாடியைத் துடைத்துப் பார்த்து, எப்படியிருந்தது என்று சொல்லுங்கள்.

செய்தித்தாள்
கண்ணாடிகள் நன்கு பளிச்சென்று மின்னுவதற்கு, சிறிது தண்ணீரை கண்ணாடியில் தெளித்து, செய்தித்தாள் கொண்டு துடைக்க வேண்டும். அதிலும் துடைக்கும் போது சற்று அழுத்தி துடைக்க வேண்டும். மேலும் இந்த நேரத்தில் கைவிரல்களை கண்ணாடியில் உடனே வைக்கக்கூடாது.

வெள்ளை வினிகர்
வெதுவெதுப்பான நீரில் சிறிது வெள்ளை வினிகரை சேர்த்து கலந்து, கண்ணாடியின் மீது தெளித்து, பேப்பர் கொண்டு துடைத்தால், முகம் பார்க்கும் கண்ணாடியானது மின்னும்.

எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறு முகத்தை மட்டுமின்றி, கண்ணடியையும் தான் பளிச்சென்று வைத்துக் கொள்ள உதவும். அதற்கு எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கலந்து, கண்ணாடியில் தெளித்து காகிதம் கொண்டு துடைக்க வேண்டும். இதனால் நல்ல நறுமணமும் வீசும்.

ஆல்கஹால்
ஆல்கஹாலை நீரில் கலந்து, கறை உள்ள கண்ணாடியின் மீது தெளித்து, சுத்தமான பேப்பரால் துடைத்தால், கறைகள் நீங்கிவிடும்.

போராக்ஸ்
கண்ணாடியை சுத்தப்படுத்த மற்றொரு முறை, போராக்ஸ் பொடியை வெள்ளை வினிகருடன் சேர்த்து கலந்து, அந்த கலவையை கண்ணாடியில் தெளித்து துடைக்க வேண்டும்.

மென்மையான காட்டன் துணி
கண்ணாடியை சுத்தப்படுத்த மென்மையான காட்டன் துணியைப் பயன்படுத்த வேண்டும். இதனால் கண்ணாடியில் உள்ள கறைகள் மற்றும் அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும்.



Click it and Unblock the Notifications
