Latest Updates
-
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா?
வீட்டை சுத்தம் செய்ய பேக்கிங் சோடா மற்றும் வினிகர் இருக்க பயம் ஏன்...?
அனைவருமே வீட்டை சுத்தப்படுத்துவதற்கு எளிமையான பொருட்கள் கிடைக்காதா என்று ஏங்குவோம். அப்போது டிவியில், வீட்டை சுத்தப்படுத்துவதற்கு என்ற பொருளை விளம்பரப்படுத்தினால், உடனே அது எவ்வளவு விலையாக இருந்தாலும் வாங்கி பயன்படுத்துவோம். மேலும் தற்போது வீட்டை சுத்தப்படுத்துவதற்கு நேரம் கிடைக்காததால், எளிமையாக வீட்டை சுத்தப்படுத்துவதற்கான வழிமுறைகளையே பலரும் தேடுகின்றனர்.
அவ்வாறு கஷ்டப்பட்டு பணத்தை செலவழித்து வீட்டை சுத்தப்படுத்த பயன்படும் பொருளை வாங்குவதற்கு பதிலாக, வீட்டில் இருக்கும் எளிய பொருட்களைக் கொண்டு எப்படி சுத்தம் செய்வது என்பதை தெரிந்து கொண்டால், ஈஸியாக இருக்கும் அல்லவா? ஆகவே இப்போது பேக்கிங் சோடா மற்றும் வினிகரைப் பயன்படுத்தி எவற்றையெல்லாம் சுத்தம் செய்யலாம் என்று பார்ப்போமா!!!

பாத்திரம் கழுவும் தொட்டி
சமையலறையில் உள்ள தொட்டியை சுத்தம் செய்வது என்பது சற்று கடினமான வேலையாக இருக்கலாம். ஏனெனில் அங்குள்ள குழாயில் உணவுப் பொருட்கள் தங்கி அடைப்பை ஏற்படுத்துதோடு, துர்நாற்றத்தையும் வெளிப்படுத்தும். எனவே இத்தகைய பிரச்சனையை எளிதில் போக்குவதற்கு பேக்கிங சோடா வினிகரில் கலந்து, தொட்டியில் தெளித்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவினால், தொட்டி பளிச்சென்று மின்னும். ஒருவேளை குழாயில் அடைப்பு இருந்தால், இரவில் இந்த கலவையை ஊற்றி இரவு முழுவதும் ஊற விட்டு, காலையில் சூடான நீரை ஊற்றினால், அடைப்பு எளிதில் நீங்கிவிடும்.

குளியலறை
குளியலறையை பேக்கிங் சோடா மற்றும் வினிகர் கொண்டு சுத்தம் செய்யலாம். இவ்வாறு இதனைக் கொண்டு செய்வதால், குளியலறையில் உள்ள கறைகள் அனைத்து எளிதில் நீங்கிவிடும். மேலும் குளியலறையில் இதனை அவ்வப்போது தெளித்து விட்டால், துர்நாற்றமின்றியும் இருக்கும்.

கார்பெட் கறைகள்
கார்பெட்டில் குழம்பு அல்லது ஒயின் சிந்தினால், அப்போது வினிகர் மற்றும் பேக்கிங் சோடா கலவையில் நனைத்தால், கார்பெட்டில் உள்ள கறை முற்றிலும் நீங்கிவிடும்.

ஷவர்
சில சமயங்களில் ஷவரில் அடைப்பு ஏற்படும். அப்போது அந்த அடைப்பை எளிதில் நீக்க, பேக்கிங் சோடா மற்றும் வினிகர் கலவையில் ஊற வைத்தால், அடைப்பு நீங்கிவிடும்.

கழிவறை
கழிவறையை சுத்தம் செய்ய, வினிகரை முதலில் கழிவறையில் தெளித்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் பேக்கிங் சோடாவை தூவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் தண்ணீர் ஊற்றி தேய்த்தால், கறைகள் நீங்குவதோடு, துர்நாற்றமின்றியும் இருக்கும்.

அடிப்பிடித்த பாத்திரம்
மறதியில் சில நேரங்களில் அடுப்பில் வைத்த பாத்திரங்களை மறந்திருப்போம். அதனால் பாத்திரங்கள் அடிப்பிடித்திருக்கும். அத்தகைய கறையை போக்குவதற்கு, பேக்கிங் சோடா மற்றும் வினிகர் கலந்த கலவையை தெளித்து 10 நிமிடம் ஊற வைத்தால், கறைகள் மட்டுமின்றி, அதிலிருந்து வெளிவரும் நாற்றத்தையும் போக்கும்.

கண்ணாடி ஜன்னல்
கண்ணாடி ஜன்னலில் உள்ள கையின் அச்சு, எண்ணெய் பசை கறைகள் அவ்வளவு எளிதில் போகாது. ஆனால், வினிகர் கலவையை தெளித்து, செய்தித்தாள் கொண்டு துடைத்தால், அவை எளிதில் போய்விடும்.



Click it and Unblock the Notifications