Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
எலி கிட்ட இருந்து கிரைண்டரை காப்பாத்துங்க

கிரைண்டர் வாங்கும் போது கல் வெள்ளையாக இல்லாமல் கருப்புக் கல்லாக வாங்க வேண்டும். அப்பொழுதுதான் அதிக மாவு கிடைக்கும்.தானியங்கள் எதுவும் போடாமலோ, சிறிதளவு தானியங்கள் போட்டோ அரைப்பதால் கிரைண்டர் வீணாக தேய்வு அடையும்.முதலில் சிறிதளவு தானியங்களைப் போட்டு கிரைண்டரை சில வினாடிகள் ஓடவிட வேண்டும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீதமிருக்கும் தானியங்களைச் சேர்க்க வேண்டும். கிரைண்டரில் உளுந்து அரைத்த பிறகு அரிசியை அரைத்தால் வழவழப்பு நீங்கும். உளுந்தும் கணிசமாக இருக்கும். இட்லியும் மெத்து மெத்தென்று பூப்போல இருக்கும்.
கல் பாலீஸ்
கிரைண்டர் வாங்கி வருடக்கணக்கில் ஆனால் கல் வழு வழுப்பாகிவிடும். இதனால் மாவு அரைக்க அதிக நேரமாகும். இதைத் தவிர்க்க இரண்டுக் கல்லையும் கொத்திக் கொள்ள வேண்டும்.
கிரைண்டரில் உள்ள தள்ளு பலகை இறுக்கமாக மாட்டப்பட்டு இருக்க வேண்டும். லூசாக இருந்தால் மாவு சரியாக அரைபடாது.
கிரைண்டரில் உட்பகுதியில் மாவு தள்ளும் பலகை டிரம்மில் ஒட்டாதபடியும், வட்டையில் உள்ள கல்லிலும் படாதபடியும் சிறிதளவு இடைவெளி விட்டு மாட்டி இருக்க வேண்டும். இல்லையெல் பலகை விரைவில் தேய்ந்துவிடும். தள்ளுப்பலகை கையைப் போல வேலை செய்யும் எனவே அதனை பத்திரமாக பராமரிக்க வேண்டும்.
துரு ஜாக்கிரதை
கிரைண்டர் குழவி மாட்டும் ஸ்டாண்டில் இன்சுலேஷன் டேப்பைச் சுற்றி விட்டால் துருப்பிடிக்காமல் இருக்கும்.
குழவியல் உள்ள கட்டை தண்ணீரில் ஊறி இற்றுப் போய்விட்டால் உடனே மாற்ற வேண்டும்.
டேபிள் டாப் கிரைண்டரில் இந்த தொந்தரவு இல்லை என்றாலும் மாவு ஆட்டி முடித்த உடன் கிரைண்டரை நன்றாக கழுவி சுத்தம் செய்து எண்ணெய் போடவும். அப்பொழுதுதான் துரு ஏறாமல் பாதுகாப்பாக இருக்கும்.
எலி கடிக்கும்
கிரைண்டர் அதிகம் பாதிக்கப்படுவது எலிகளால்தான். எலிகள் ஒளிந்து கொள்ள வசதியான இடம் என்பதால் எலிகளிடம் இருந்து கிரைண்டரை பாதுகாக்க வேண்டும்.
சில சமயங்களில் எலி ஒயர்களைக் கடித்துவிடும். இதனால் சமயங்களில் கிரைண்டர் ஷாக் அடிக்கும் அபாயமுள்ளது. ஆகையால் கிரைண்டர் இருக்குமிடம் தனியாக இருக்க வேண்டும்.
கொர, கொர என்ற சத்தம் அதிகம் வந்தால் பேரிங் பழுதடைந்து இருக்கும். உடனே பேரிங்க்கை மாற்ற வேண்டும். பெல்ட் லூசானால் கிரைண்டர் மாவு அரைக்க அதிக நேரமாகும். எனவே பெல்ட்டை கவனித்து புதிய பெல்ட் மாற்ற வேண்டும்.



Click it and Unblock the Notifications