Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மின்சாரத்தை சிக்கனப்படுத்த சில ஐடியாக்கள்!

சுவிட்ச் ஆப்
ஒரு வீட்டின் அனைத்து அறைகளிலும் மின்சார விளக்கை எறிய விடாதீர்கள். எந்த அறைக்கு செல்கிறீர்களோ அப்பொழுது விளக்கை எரிய விடலாம். அதுவரை சுவிட்ச் ஆப் செய்யவும்.
ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு செல்லும் போது, அந்த அறையில் இயங்கிக் கொண்டிருக்கும் பேன், லைட், டிவி ஆகியவற்றின் சுவிட்களை அணைத்துவிட்டு செல்லுங்கள்.
மிக்சி, பிரிட்ஜ், அயர்ன் பாக்ஸ்,கிரைண்டர், வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களின் தேவை இல்லாதபோது அவற்றின் பிளக்கை பிடுங்கி வைத்து விடுங்கள் அல்லது சுவிட்ச் ஆப் செய்யுங்கள்.
மஞ்சள் ஒளி உமிழும் குண்டு பல்புகளை ஏறக்கட்டுங்கள். மின்சார சிக்கனம் தரும் மின் விளக்குகளை பொருத்துங்கள். பகல் நேரத்தில் வெளிச்சம் தரக்கூடியவாறு அறைகளை வடிவமையுங்கள்.
பிரிட்ஜ் கவனம்
கோடை காலத்தில் அதிகம் உபயோகப்படுத்தப்படுவது ப்ரிட்ஜ்தான். எனவே ஒவ்வொரு முறை பிரிட்ஜை திறக்கும் போதும் அதிக அளவில் மின்சாரம் வீணாகிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். எனவே பிரிட்ஜை அடிக்கடி திறந்து மூட வேண்டம்.
ஏசியில் மின் சிக்கனம்
கோடை காலத்தில் ஏசியின் பயன்பாடு அதிகம் இருக்கும். ஏசி பொருத்தப்பட்டுள்ள அறையில் சூரிய ஒளி புகாதவாறு அடர்த்தியான திரைச்சீலைகளை தொங்க விட வேண்டும். தேவையற்ற பொருட்களை ஏசி அறையில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
கண்ணாடி ஜன்னல்கள் நன்கு மூடப்பட்டிருக்க வேண்டும். ஜன்னல், கதவுகளில் ஏதேனும் இடைவெளியோ, துளைகளோ இருந்தால் சரிசெய்துவிட வேண்டும். குளிர்ச்சி போதுமான அளவு ஏற்பட்ட பிறகு, ஏசியிலுள்ள விசிறியையோ, அறையிலுள்ள ஃபேனையோ பயன்படுத்தலாம்.
பழைய ஏசியெனில் குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸ் செய்ய மறக்க வேண்டாம். 5 ஸ்டார் ரேட்டிங் உள்ள ஏசியை பயன்படுத்துவது ஆற்றல் சேமிப்புக்கு உதவும்.
இந்த அலோசனைகளை பின்பற்றினால் மின்சாரம் சிக்கனம் ஏற்படுவதோடு வீட்டிற்கும், நாட்டிற்கும் பலன் கிடைக்கும். மின்சார சிக்கனத்தினால் பணமும் சேமிக்கப்படும்.



Click it and Unblock the Notifications