Latest Updates
-
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
'முருங்கைக்காயை முறுக்கிப் பார்த்து வாங்கணும்'

எனவே சுவையான சமையல் செய்ய நல்ல காய்கறிகளை வாங்க வேண்டும். அதற்கு சில டிப்ஸ் இருக்கிறது. அதில் ஒரு சில முக்கியமான, அன்றாட சமையலில் பயன்படும் காய்கறிகளை படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
காய்கறி வாங்க சில டிப்ஸ்...
உருளைக்கிழங்கு: முளைக்கட்டாமல், பச்சை பச்சையாக நரம்பு தெரியாமல் இருக்க வேண்டும். மேலும் தோலை கீறினாலே கையோடு வர வேண்டும்.
பூண்டு: பூண்டை வாங்கும் போது பல் பல்லாக வெளியே நன்கு தெரியுமாறு இருப்பதை வாங்க வேண்டும்.
பெரிய வெங்காயம்: பெரிய வெங்காயத்தின் மேல் பகுதியில் இருக்கும் தண்டுப் பகுதி பெரிதாக இல்லாமல் வாங்க வேண்டும்.
பச்சை மிளகாய்: மிளகாயானது நீளமாக இருந்தால் காரம் குறைவாக இருக்கும். அதே குண்டாக இருந்தால் காரம் அதிகமாக இருக்கும். மேலும் இந்த குண்டு மிளகாயை சேர்க்கும் போது வாசனையும் பிரமாதமாக இருக்கும்.
முருங்கைக்காய்: 'முருங்கைக்காயை முறுக்கிப் பார்த்து வாங்கணும்' என்று சொல்வார்கள். இவ்வாறு முறுக்கும் போது நன்கு வளைந்தால், காய் முற்றவில்லை என்று அர்த்தம்.
கத்தரிக்காய்: கத்தரிகாய் வாங்கும் போது தோலானது மென்மையாக இருக்க வேண்டும். முற்றல் காயாக இருந்தால் தோலானது கடினமானதாக இருக்கும்.
பெங்களூர் தக்காளி: நன்றாக சிவந்த தக்காளியாக இருப்பதை வாங்க வேண்டும். அதுவும் பெங்களூர் தக்காளி ஒரு வாரம் கூட கெடாமல் இருக்கும்.
இஞ்சி: தோலை கீறினால், தோலானது ஈஸியாக பெயர்ந்து வர வேண்டும். அப்போது தான் நார்ப்பகுதி குறைவாக இருக்கும்.
காலிஃப்ளவர்: குருமாவுக்கு சுவையைத் தரும் காலிஃப்ளவரை வாங்கும் போது பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் வாங்க வேண்டும். இதில் தான் காம்புகள் தடிமனாக இருக்காது.
புடலங்காய்: கெட்டியாக இருக்கும் புடலங்காயை வாங்க வேண்டும். இதில் தான் சதைப்பகுதி அதிகமாகவும், விதைப்பகுதி குறைவாகவும் இருக்கும்.
பீன்ஸ்: பீன்ஸில் 2 வகைகள் இருக்கிறது. பிரெஞ்ச் பீன்ஸில் நார் அதிகமாக இருக்கும். புஷ் பீன்ஸில் நார் குறைவாக இருக்கும். இவற்றில் நார் குறைவாக இருப்பதையே அதிகம் விரும்புவர். இந்த பீன்ஸ் வாங்கும் போது தோலானது மென்மையாக இருக்க வேண்டும். அதுவே மிகுந்த சுவையாக இருக்கும்.
பாகற்காய்: பாகற்காயை வாங்கும் போது உருண்டையாக இருப்பதை வாங்குவதைவிட, தட்டையான, நீளமான காயாக வாங்க வேண்டும்.
மேற்கூறியவாறு வாங்கினால் காய்களானது நீண்ட நாட்கள் இருப்பதோடு, சமையலும் சுவையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
