For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிறந்த ஹீட்டரை எப்படி வாங்குறதுன்னு சந்தேகமா ? அப்ப இதை முழுசா படிங்க...

மழைக்காலம் தொடங்கியாச்சு. தண்ணி இனிமேல் குளுகுளுன்னுதான் வரப்போகுது. எனவே கண்டிப்பா எல்லாரும் ஹீட்டர் வாங்கனும் அப்டின்னு ஒரு யோசனையில் இருப்பீங்க. அதுனால எல்லா இணையதளங்களிலும் சுத்தி முத்தி தேடியிருப

|

மழைக்காலம் தொடங்கியாச்சு. தண்ணி இனிமேல் குளுகுளுன்னுதான் வரப்போகுது. எனவே கண்டிப்பா எல்லாரும் ஹீட்டர் வாங்கனும் அப்டின்னு ஒரு யோசனையில் இருப்பீங்க. அதுனால எல்லா இணையதளங்களிலும் சுத்தி முத்தி தேடியிருப்பீங்க. ஹீட்டர்ல என்ன வகையெல்லாம் இருக்கு அதோடு நன்மை என்ன தீமை என்ன ? எல்லாவகையான ஹீட்டர்சை பத்தியும் அக்கு வேறா ஆணி வேரா இந்தக் கட்டுரையில் காணலாம்.

Geyser Buying Guide

உங்கள் வாட்டர் ஹீட்டர் மட்டும் உங்களது வீட்டிற்கு பயன்படும் மின்சாரத்திற்காக பட்ஜெட்டில் 15ல் இருந்து 25 சதவீதத்தைக் குடித்துவிடுகிறது. எனவே வாங்கும் போது எந்த வகையான ஹீட்டரைத் தேர்வு செய்கிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இத்தனை காலம் இந்த வகையான ஹீட்டரைத் தான் பயன்படுத்தினேன் என உங்கள் மகன் / மகள் வீட்டுக்கோ அதே ஹீட்டரை வாங்காதீர்கள். காரணம் அப்போதைய தொழில்நுட்பம் வேறு. நீடித்து உழைக்கும் என்பதற்காக மட்டும் ஒரு பொருளை வாங்காதீர்கள். அதோடு அதற்காக ஆகிற இதர செலவீனங்களையும் பார்த்து முடிவு செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எதற்காக வாங்குறோம்

எதற்காக வாங்குறோம்

வாட்டர் ஹீட்டர் வாங்க வேண்டும் என முடிவு செய்த பிறகு எந்த வகைப் பயன்பாட்டுக்கு அதைப் பயன்படுத்தப் போகிறோம், பயனாளர்கள் எத்தனை பேர், என்ன வகையான குளியறையில் பயன்படுத்தப் போகிறோம் என எண்ணற்ற வழிமுறைகள் இருக்கின்றன அதை முதலில் தெளிவாக புரிந்து கொண்டு வாட்டர் ஹீட்டர் வாங்க மார்கெட்டுக்கு செல்லுங்கள் அல்லது ஆன்லைன் தளத்திற்கு செல்லுங்கள்.

வாட்டர் ஹீட்டரின் வகைகள்:

மூன்று வகையான வாட்டர் ஹீட்டர்கள் பொதுவாக வீடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. சேமிப்புக் கலனுடைய வாட்டர் ஹீட்டர், சேமிப்புத் தொட்டி அல்லாத வாட்டர் ஹீட்டர், உடனடி வாட்டர் ஹீட்டர் என்ற மூன்று வகையான வாட்டர் ஹீட்டர்கள் வீடுகளில் பெரும்பாலும் பயன்பாட்டில் உள்ளன.

Most Read: இப்போ இதுக்கல்லாமா வயிற்றுப் போக்கு ஆகுது கொஞ்சம் உஷாரா இருங்க

சேமிப்புக் கலனுடைய வாட்டர் ஹீட்டர்

சேமிப்புக் கலனுடைய வாட்டர் ஹீட்டர்

Source:

இந்தியாவில் பயன்படுத்தும் வாட்டர் ஹீட்டர் மாடல்களில் மின்சார சேமிப்புக் கலன் வாட்டர் ஹீட்டர் மிகவும் பிரபலமானது. அதே சமயத்தில் இவ்வகையான வாட்டர் ஹீட்டர்களில் எண்ணெய் அல்லது கேஸை பயன்படுத்தி இயங்கும் வாட்டர் ஹீட்டர்களும் இருக்கின்றன. ஆனால் அவ்வகையான வாட்டர் ஹீட்டர்கள் இந்தியாவில் பிரபலமடையவில்லை. 40 முதக்

சேமிப்புக் கலன் அல்லாத வாட்டர் ஹீட்டர்

சேமிப்புக் கலன் அல்லாத வாட்டர் ஹீட்டர்

இவ்வகை வாட்டர் ஹீட்டர்களில் சேமிப்பு என்ற ஒன்று இருக்காது. வாட்டர் ஹீட்டருக்குள் வரும் நீரை தொடர்ச்சியான மின்சாரச் சுருள் அல்லது எரிவாயு பர்னர்கள் சூடு செய்து சுடுநீருக்கான குழாயை திறக்கும் போது வெந்நீராக வந்து சேருகிறது.

உடனடி வாட்டர் ஹீட்டர்

உடனடி வாட்டர் ஹீட்டர்

உடனடி வாட்டர் ஹீட்டர்கள் குறைந்த அளவிலான தண்ணீரை சூடுபடுத்துவதற்காக தயாரிக்கப்பட்டது. இது பெரும்பாலும் கிட்சன்களில் பயன்பாட்டில் உள்ளன.

ஆற்றல் மூலங்களை அடிப்படையாகக் கொண்டு வாட்டர் ஹீட்டரின் வகைகள்

எலெக்ட்ரிக் வாட்டர் ஹீட்டர்

தீமைகள்

மின்சாரம் இல்லாத போது உங்களால் வெந்நீரை பற்றி எண்ணிக் கூடப் பார்க்க முடியாது. அதே சமயத்தில் குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டாலும் இவ்வகை வாட்டர் ஹீட்டர்கள் செயல்படுவதில் சிக்கல் ஏற்படுகிறது.

மின்சார வெளியீடு என்பது வெப்பநிலை உயர்வு மற்றும் அதன் ஓட்டங்களை பாதிக்கிறது.

மின்சாரத்தை பயன்படுத்தும் ஹீட்டர்கள் பொதுவாக விலை உயர்ந்தது.

மின்சார வாட்டர் ஹீட்டர் வகைகள்

மின்சார வாட்டர் ஹீட்டர் வகைகள்

உடனடி மின்சார வாட்டர் ஹீட்டர்

சமையலறை அல்லது சீரான வெப்பநிலை தேவைப்படுகிற பாத்ரூம்களில் இவ்வகை வாட்டர் ஹீட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை ஹீட்டர்களில் நீரோட்டமானது வரையறுக்கப்பட்டதாகத் தான் இருக்கும் ஷவர்களுக்கு இவ்வகை ஹீட்டர்களும் மிகவும் பொருத்தமானவை.

மின்சார சேமிப்பு ஹீட்டர்

இவ்வகை ஹீட்டர்கள் கிடைமட்டமாக, அல்லது செங்குத்தாக வடிவமைக்கப்பட்டிருக்கும். கிடைமட்டமாக இருக்கும் ஹீட்டர்களை நிறுவுவது மிகவும் எளிமையாக இருக்கும்.

குறைகள்

தண்ணீரை சூடுபடுத்தி சேமிக்கும் போது தேவைக்கு அதிகமான ஆற்றல் வீணாக்கபடுகிறது. ஒரு வேளை கலனில் இருக்கும் தண்ணீர் தீர்ந்து போனால் மறுபடியும் தண்ணீரை சூடு செய்யும் நேரம் மிகவும் அதிகம்.

எரிவாயு வாட்டர் ஹீட்டர்

எரிவாயு வாட்டர் ஹீட்டர்

Source:

நன்மைகள்

இவ்வகையான ஹீட்டர்கள் மின்னழுத்தம் மற்றும் மின்சாரம் இல்லை என்ற காரணங்களுக்காக நின்று போவதில்லை.

எரிவாயுக்கள் மிகுந்த ஆற்றலை உண்டு பண்ணும் திறன் வாய்ந்தது. அதனால் நீரை வேகமாக கொதிக்க வைக்க முடியும்.

சூடுபடுத்திய தண்ணீர் வீணாதலோ அல்லது சேமித்து வைக்க வேண்டிய அவசியமோ இதில் இல்லை.

உங்கள் செலவீனத்தை மிகவும் சிக்கனப்படுத்தும்.

வரம்பற்ற வகையில் நீரை சூடு செய்யும் திறன் பெற்றது

குறைகள்

எரிவாயு கசிதல் மற்றும் கார்பன் மோனாக்ஸைடு பாதிப்பிலிருந்து கவனமாக இருக்க வேண்டும்.

சோலார் வாட்டர் ஹீட்டர்

சோலார் வாட்டர் ஹீட்டர்

சோலார் வாட்டர் ஹீட்டரில் முக்கியமானது ஆற்றலைச் சேமிப்பதாகும்.

குறைகள்

எரிவாயு ஹீட்டரை விட செலவீனம் அதிகம்

சூரிய ஒளி படும் அளவுக்கு சோலாரை வைக்க வேண்டும். அதே சமயத்தில் சோலாரை நிறுவுவதற்கு அதிக இடமும் தேவை.

100 லிட்டருக்கு மேல் நீரை சூடேற்றுவதற்கு தேவையான திறன் இருக்கிறது. இது ஒரு குடும்பத்திற்கு தேவையான நீரைவிட அதிகமாக இருக்கும்.

துருப்பிடிக்காத எஃகு & காப்பர் வாட்டர் ஹீட்டர்

துருப்பிடிக்காத எஃகு & காப்பர் வாட்டர் ஹீட்டர்

நேரிடையாக தண்ணீரை சூடுசெய்வதற்கு துருப்பிடிக்காத எஃகு வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தப்படுகிறது. அதே சமயத்தில் காப்பரைக் கொண்டு பயன்படுத்தும் போது சூடு செய்யும் நேரத்தை அது வெகுவாக குறைக்கிறது.

வாட்டர் ஹீட்டரின் உடல் பகுதிகள்

வாட்டர் ஹீட்டரின் உடல் பகுதிகள்

Source:

பஃப் அல்லது கண்ணாடி கம்பளி காப்பு

கண்ணாடி கம்பளி காப்பைவிட பஃவ் வகைக் காப்புகள் சிறந்தது. மேலும் தண்ணீரின் வெப்பநிலையை நீண்ட நேரத்திற்கு தக்கவைத்துக் கொள்ளும். அதுமட்டுமில்லாமல் 40% ஆற்றலை சேமிக்கிறது.

பாலிப்ரொப்பிலீன்

பாலிப்ரொப்பிலீன் நீண்ட நாட்களுக்கு துருப்பிடிக்காமல் உழைக்கிறது.

உலோக உடல்:

உலோக உடல் பகுதியைச் சுற்றி உலோகப் பூச்சுகளால் ஆனதால் நீண்டகாலத்துக்கு நீடித்து உழைக்கும் திறன் பெற்றது.

Most Read:மன உளைச்சல், மனச்சிதைவுக்கு நோய்க்கு வைட்டமின் பி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாமா?

பாதுகாப்பு உபகரணங்கள்

பாதுகாப்பு உபகரணங்கள்

தெர்மோஸ்டட்

வெப்பநிலை தொடரறு கருவி

அழுத்தம் வெளியீட்டு வால்வு

உருகக்கூடிய ஃப்யூஸ் ஒயர்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Water Heater or Geyser Buying Guide

The rainy season has begun. water will be too cold now. So be sure everyone have an idea for buying heater. So you can search websites. Here is the buying guide to buy the water heater or geyser. Check it out
Story first published: Thursday, July 25, 2019, 15:42 [IST]
Desktop Bottom Promotion