Just In
- 8 hrs ago
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- 10 hrs ago
காரமான... பெப்பர் மட்டன் வறுவல்
- 10 hrs ago
இந்த ராசிக்காரங்க துரோகம் செய்ய கொஞ்சம்கூட தயங்க மாட்டாங்களாம்... உஷாரா இருங்க இவங்ககிட்ட...!
- 12 hrs ago
கொத்து கொத்தா முடி கொட்டுதா? அதை தடுக்க இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...
Don't Miss
- News
பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா
- Automobiles
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- Movies
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வீட்டுக்குள் இருக்கும் சிகரெட் வாடையைப் போக்க வீட்டிலுள்ள இந்த 8 பொருட்கள் இருந்தால் போதும்
புகைப்பிடித்தவர்கள் யாராவது பக்கத்தில் நின்றாலே பலருக்கு தலைச்சுற்றல் ஏற்படுவது வழக்கம். புகைப்பிடிப்பவர்களுக்கு கூட ஒரு அறையிலோ அல்லது காரிலோ அடைக்கப்பட்ட சிகரெட் வாடை மிகவும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
ஆண்களில் பலருக்கும் பாத்ரூம் போகும் போது சிகரெட் பிடிப்பவர்களாக இருப்பார்கள். அதுவும் முக்கியமாக பேச்சிலர்ஸ் ஆக இருப்பவர்கள் அடுத்தடுத்து வேலைக்கு கிளம்ப வேண்டும் என்பதால் ஒருவர் வெளியே வந்த அடுத்தகணமே உள்ளே செல்ல வேண்டிய சூழல் இருக்கும்.
வெளியே செல்ல வழியில்லாமல் அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும் சிகரெட் வாடை மூக்கிலேறி ஒரு சில நிமிடங்கள் மூச்சுத் திணறலை ஏற்படுத்தும் .இது கூட ஏதாவது ஒரு மூலையில் ஜீரணித்துக் கொள்ளலாம் ஆனால் ஏசி காரில் இருக்கும் சிகரெட் வாடை சொல்லவே வேணாம்.

எங்கும் செல்லும்:
சிகரெட் புகை வாசனை எதிலும் ஊடுருவிச் செல்லும் தன்மைக் கொண்டது. உதாரணமாக கார்பெட், வீட்டு உபயோகப் பொருட்கள், உடைகள் என எதையும் பாகுபாடு இல்லாமல் ஊடுருவிச் செல்லும் திறன் புகைக்கு உண்டு.

கதவைத் திறந்தால்
புகை தானே எதுக்குப் போய் கஷ்டப்பட்டுக்கிட்டு மூடி இருக்கிற நாளத்தானே உள்ளுக்குள்ளேயே சுத்திக்கிட்டு இருக்குன்னு நீங்கள் நினைக்கலாம். இங்க தான் நீங்கள் ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கனும் காற்றோடு கலந்துள்ள புகை வெளியில் போயிடும். ஆனால் மற்ற பொருட்களில் ஊடுருவியுள்ள புகை போவதற்கு ஆகக்கூடிய கால அளவு மிகப்பெரியது.
பேச்சிலர்சாக இருக்கும் போது கவலை இல்லை. குடும்பமாக இருக்கும் போது குழந்தைகள், அம்மா அப்பா அவுங்களையும் இது பாதிக்கும் அல்லவா. அதைத் தீர்ப்பதற்கான 8 வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அப்ப என்ன தான் வழி:
தீங்கு விளைவிக்கக்கூடிய புகையிலிருந்து விடுபட எண்ணற்ற வழிகள் இருக்கின்றன. அது சிகரெட், பார்பீக்யூஸ், அல்லது கருகிப்போன உணவாகக் கூட இருக்கலாம். இதை நீக்குவதற்கு எண்ணற்ற வழிகள் இருப்பினும் நமது கிட்சனில் இருந்து கிடைக்கக்கூடிய பொருட்களில் இருந்து இந்த புகையை எப்படி வெளியேற்றலாம் என பார்ப்போம்.
1.வினிகரை கொதிக்க வையுங்கள்
2.பேக்கிங் சோடாவை துர்நாற்றம் அதிகமுள்ள இடங்களில் தெளிக்கவும்.
3. ஒரு கப்பில் சார்கோலை திறந்த வெளியில் வையுங்கள்
4.காப்பிக் கொட்டைகளை துர்நாற்றமுள்ள இடத்தில் வையுங்கள்
5.வெண்ணிலா ஃப்ளேவரில் ஊறவைக்கப்பட்ட காட்டன் பந்துகள்
6.இரண்டாக நறுக்கப்பட்ட ஆப்பிள்
7. அம்மோனியா நீரைக் கொண்டு தரையை துடையுங்கள்
8.கார்பன் வடிகட்டியுடன் கூடிய காற்று சுத்திகரிப்பான்

வினிகர்
வெள்ளை அல்லது ஆப்பிள் சாறு வினிகரை பயன்படுத்தி சிகரெட்டினால் வரும் துர்நாற்றத்தை நீக்கமுடியும். வினிகரை கொதிக்க வைத்து அறை முழுக்க பரவும் வகையில் எடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் உடைகளிலும் கொதிக்க வைத்த வினிகரை தேய்க்கும் பொழுது உடை நறுமன்முள்ளதாக மாறுகிறது.

பேக்கிங் சோடா:
பேக்கிங் சோடா ஒரு சிறந்த துர்நாற்றம் நிறைந்த புகையை ஈர்த்துக் கொள்ளும் தன்மையுடைய ஒரு பொருள். துர்நாற்றம் வீசக்கூடிய பகுதிகளில் பேக்கிங் சோடாவைக் கொட்டலாம். புகை எல்லா இடங்களிலும் ஊடுருவி இருக்கும் என்பதால் கார்பெட், வீட்டு உபயோகப் பொருட்கள், கார் சீட்டுகள் போன்றவற்றில் இதைக் கொட்டலாம். சிறுது நேரம் கழித்து அதை துடைத்து எடுத்து விடுங்கள்.

சார்கோல்:
சார்கோலை கப் அல்லது ஏதாவது ஒரு பாத்திரத்தில் கொட்டி அறை அல்லது காரின் பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும். சார்கோலுக்கு சிகரெட் போன்ற துர்நாற்றங்களை ஈர்க்கும் தன்மை அதிகம் என்பதால் சிகரெட் துர்நாற்றத்தை விரைவில் வெளியேற்றும்.

காபி கொட்டைகள்:
பேக்கிங் சோடா மற்றும் சார்கோலை போன்று தான் காப்பிக் கொட்டைகளும். அதுமட்டுமில்லாமல் காப்பிக் கொட்டைகளில் இருந்து வரும் அதீத வாசனை துர்நாற்றத்திலிருந்து தற்காலிகத் தீர்வைத் தரும். காபிக் கொட்டைகளை ஒரு போதும் வெளியே தூக்கி எறியாதீர்கள். ஏனெனில் எண்ணற்ற பணிகளைத் தன்னகத்தே அது கொண்டுள்ளது. சிகரெட் வாடையிலிருந்து உங்களை பாதுகாக்க இது பெரிதும் உதவுகிறது. காப்பிக் கொட்டைகளை காய வைத்து ஒரு பாத்திரத்தில் போடவும். அதை துர்நாற்றம் வீசக் கூடிய பகுதிகளில் வைக்கவும்.

வென்னிலா:
வென்னிலா ஃப்ளேவரை காட்டன் பந்து அல்லது பஞ்சுகளில் நனைத்து துர்நாற்றம் வீசக்கூடிய பகுதிகளில் வைக்க வேண்டும். மேலும் 1/2 டேபிள் ஸ்பூன் வென்னிலாவை எடுத்து 20 நிமிடம் மெதுவாக சூடேற்றவும். இந்த வாசனை காற்றில் கலந்து துர்நாற்றத்தை நீக்கும்.

ஆப்பிள்
ஆப்பிளை இரண்டாக நறுக்கி துர்நாற்றம் வீசும் இடங்களில் வைக்க வேண்டும். துர்நாற்றத்தைக் கவரும் தன்மை ஆப்பிளுக்கு இருப்பதால் விரைவில் துர்நாற்றத்தை வெளியேற்றும்.