Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க...
வீட்ல புறா, குருவி கூடு கட்றது நல்லதா?... கெட்டதா?... எந்த திசைல இருந்தா நல்லது?...
இது வெறும் புறாக்கூடு பற்றிய செய்தி மட்டுமல்ல. உங்களுடைய அதிர்ஷ்டம் பற்றிய விஷயமும் சேர்ந்தது தான். சிலர் புறாக்கூடு கட்டுவது அப சகுனம் என்பார்கள். சிலர் அதிர்ஷ்டம் என்பார்கள்.உண்மைதான் என்ன... தெரிந்
இது வெறும் புறாக்கூடு பற்றிய செய்தி மட்டுமல்ல. உங்களுடைய அதிர்ஷ்டம் பற்றிய விஷயமும் சேர்ந்தது தான். சிலர் புறாக்கூடு கட்டுவது அப சகுனம் என்பார்கள். சிலர் அதிர்ஷ்டம் என்பார்கள்.உண்மைதான் என்ன...

தெரிந்து கொள்வோமா?... வெறும் புறாக்கூடு தானே என்று நாம் சொன்னாலும் வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அதை தங்களுடைய வாழ்ககையோடு தொடர்புபடுத்தி தான் பார்க்கிறார்கள். அது அவர்களுக்கு அதிர்ஷ்டம் சம்பந்தட்டதாக இருக்கிறது.

அதிர்ஷ்டம்
அதிர்ஷ்டம் என்பது எங்கிருந்தோ வருவதெல்லாம் கிடையாது. இதுபோன்று நம்மைச் சுற்றி நடக்கும் சின்ன சின்ன விஷயங்களில் இருந்து உண்டாகும் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல்களின் வாயிலாகவே உண்டாகிறது. அதாவது நம்முடைய இயக்கம் மற்றும் முயுற்சி மட்டுமே அல்லாமல் நம்மைச் சுற்றியுள்ள சில காரணிகளும் நம்முடைய அதிர்ஷ்டத்தைத் தீர்மானிக்கின்றன எனறு தான் நம்முடைய பெரியோர்கள் குறிப்பிடுகிறார்கள். அதிர்ஷ்டம் என்பது முயற்சியில்லாமல் வெற்றி பெறுவது கிடையாது.

புறாவின் கூடு
வீட்டில் புறாக்கூடு இருப்பது அதிர்ஷ்டம், அதிர்ஷ்டமில்லை என்ற சந்தேகம் ஒரு பக்கம் இருந்தாலும், புறாக்கூட்டின் அளவு, எந்த திசையில் கூடு இருக்கிறது என்பது போன்ற எல்லா விஷயங்களையும் கணித்து தான் அதிர்ஷ்டம் என்பது உண்டா இல்லையா என கணிக்கப்படுகிறது.

புறாக்கூட்டில் எப்படி அதிர்ஷ்டம்
அதாவது உயரே கட்டப்பட்டிருக்கும் புறாக்கூட்டின் அளவு, அது வடக்கு, தெற்கு என அமைந்திருக்கும் திசை, அதனுடைய நிறம் அடர்ந்த பிரௌன் நிறத்தில் இருக்கிறதா இல்லை லைட் பிரௌனா ஆகியவற்றை நீங்கள் உற்று நோக்கினால் போதும். உங்களுக்கு எதையும் ஆராய்ந்து முடிவு எடுக்கும் திறனும் அதேபோல் அந்த கூட்டில் எத்தனை புறாக்கள் இருக்கின்றன என்பதையும் கவனித்து வந்தால் உற்று நோக்கல் திறன், பறவைகள் மீதான கருணை, ஆகியவற்றை உணர்வதன் மூலம் வாழ்க்கைக்குத் தேவையான ஆற்றல்களைப் பெற முடியும். அதுவே உங்களுக்கு அதிர்ஷ்டம் தானே!.

துரதிஷ்டம்
ஆனால் ஆன்மிக ரீதியாக புறாவை வீட்டில் வளர்த்தால் துரதிஷ்டம் உண்டாகும். அந்த வீட்டில் உள்ளவர்கள் நோய்வாய்ப்படுவார்கள் என்றெலவ்லாம் சொல்வதுண்டு. அது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.

ஆஸ்துமா
புறாவை வீட்டில் வளர்த்தாலோ அல்லது புறாக்கள் வசிக்கும் இடத்துக்கு அருகில் வசித்தாலோ அவர்களுக்கு ஆஸ்துமா, மூச்சிறைப்பு நோய் ஏற்படும் என்று மருத்துவர்கள் குறிப்பிடுவார்கள். நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் உண்டாகும்.

தெய்வீக சக்தி
எவ்வளவு தான் கஷ்டங்கள் வந்தாலும் சமாளிக்கக்கூடிய ஆளாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் நாம் அனைவருமே நாடிச் செல்லும் ஒரு விஷயம் கடவுள் தான். அப்படிப்பட்ட தெய்வீக சக்தியை, லட்சுமிதேவியை நம்முடைய வீட்டுக்குள் கொண்டு வருவதற்கு சில பரிகாரங்கள் உள்ளன.

என்ன செய்ய வேண்டும்?
வீட்டில் சில பரிகார காரியங்களைச் செய்தால், தெய்வீக சக்தி உள்ளே வரும். சில எதிர்மறை காரியங்களைச் செய்தால், வீட்டுக்குள் இருக்கும் தெய்வீக சக்தி கூட வெளியேறிவிடும். அப்படி என்னென்ன செயல்கள் செய்தால் தெய்வீக சக்தி வீட்டுக்குள் வரும் என்று பார்க்கலாம்.
புறா, குருவி, அணில் ஆகியவை நம்முடைய வீட்டுக்குள் வந்து போனால் அதை விரட்டாதீர்கள். அவை வந்து போனாலே நமக்கு நன்மை உண்டாகும். அதனால் தான் வீட்டில் புறா மற்றும் குருவி இருந்தால் வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இந்த உயிரினங்களுக்கு தெய்வீக சக்தியை உணரும் ஆற்றல் மிக அதிகம்.

புறாக்கூடு
புதிதான ஏதேனும் வீட்டுக்கு வாடகைக்கோ அல்லது சொந்த வீடாக இருந்தாலும் நீங்கள் செல்வதற்கு முன்பாக அங்கே ஏதேனும் புறாக்கூடோ அல்லது குருவிக்கூடோ இருந்தால், அது அந்த வீட்டுக்கு அதிர்ஷ்டம் தரும் ஜீவ சக்தியாக இருக்கும். கொதுவாக மனிதர்களைவிட பறவைகளிடம் ஜீவ சக்தி மிக அதிகம்.

நெல், அரிசி
வீட்டுக்கு வாயிலுக்கு அருகில், நெல்மணிகள் அல்லது அரிசியை கட்டித் தொங்க விடுவது நல்லது. அது வீட்டைத் தேடி வரும் பறவைகளுக்கு உணவாக அமையும். அப்படியே பழக்கப்படுத்தி விட்டால் அந்த பகுதிகளிலேயே கூடு கட்டி, குஞ்சு பொரிக்க ஆரம்பித்துவிடும்.



Click it and Unblock the Notifications