For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோக் குடிக்கிறதுக்கு மட்டும்னு நெனச்சீங்களா? வேற என்னலாம் பண்ணலாம்னு வாயை பிளந்து பாருங்க...

|

உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற குளிர் பானங்களுள் ஒன்றாக இருக்கிறது கொக்கோ - கோலா என்பது நம் எல்லோருக்கும் தெரிந்தது தான். இந்த குளிர் பானம் உலக அளவில் மார்க்கட்டிங் அளவில் மிகப்பெரிய சாதனையைப் படைத்ததற்குக் காரணமாக இருந்தது அதனுடைய சுவை தான்.

இது வெறுமனே குடிப்பதற்காக மட்டுமே இந்த கொக்கோ - கோலா பானம் நீங்கள் நினைத்துவிட வேண்டாம். அது குடிப்பதற்கு மட்டும் இல்லாமல் வீட்டின் இன்னும் சில விஷயங்களுக்கும் பயன்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆச்சர்யங்கள்

ஆச்சர்யங்கள்

அதைப்பற்றி கேள்விப்பட்டீர்கள் என்றால், ஆச்சர்யத்தில் வீட்டின் கொக்கோ - கோலாவை வாங்கி அடுக்கி வைத்துக் கொள்வீர்கள். சரி வாங்க. எப்படி எதுக்கெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்த்துவிடலாம்.

ஏனென்றால் இதில் பேக்கிங் சோடாவில் சோடியம் கார்பனேட் உள்ளடங்கி இருக்கிறது. அதனால் பேக்கிங் சோடாவில் உள்ள அத்தனை நன்மைகளும் இதிலும் உங்களுக்குக் கிடைக்கும்.

MOST READ: எந்த நிற பழங்களைச் சாப்பிட்டால் என்னென்ன நோய்கள் குணமாகும்னு தெரியுமா? இத படிங்க...

ஆஸ்துமாவை குணப்படுத்த

ஆஸ்துமாவை குணப்படுத்த

காபி அதிகமாகக் குடிப்பவர்களுக்கு ஆஸ்துமா பிரச்சினை வருவதற்கான வாய்ப்புண்டு. இதில் மிக அதிக அளவில் காஃபினைன் இருக்கிறது. ஒரு கப் காபியில் இருக்கிற அளவு காஃபினைனும் இரண்டு கேன் கோக்கில் இருக்கிற காஃபினைனும் சமமாகத் தான் இருக்கிறது. அதனால் ஆஸ்துமா நோயுள்ளவர்கள் அதன் தீவிரத்தைக் குறைக்க கோக் குடிப்பது நல்லது.

சிறுநீரகக் கற்கள்

சிறுநீரகக் கற்கள்

தினமும் ஒரு பாட்டில் கோக் குடித்து வந்தால் சிறுநீரகக் கற்கள் கரைய ஆரம்பிக்கும். கிட்னியில் கற்கள் உண்டாகாமலும் பார்த்துக் கொள்ளும்.

பூக்களை புத்துணர்ச்சியாக வைக்க

பூக்களை புத்துணர்ச்சியாக வைக்க

பூக்கள் வாடிப் போய் இருந்தால் அதைப் பார்த்து நம்முடைய மனமும் வாடிவிடும் தானே. இனிமேல் அந்த கவலையை விடுங்கள். பூக்களின் மேல் சிறிது கோக்கை தெளித்து வையுங்கள். பூக்கள் புத்துணர்ச்சியோடு புதிதாக பூத்ததுபோலவே இருக்கும். வாசனையும் அதிகரிக்கும்.

மார்க்கர் கறைகள்

மார்க்கர் கறைகள்

கார்ப்பெட் மற்றும் டேபிள் விரிப்புகளில் அடிக்கடி எழுதும் மார்க்கர்களால் கறைகள் உண்டாகிவிடும். கொக்கோ - கோலாவை சிறிதளவு ஊற்றி சிறிது நேரம் கறை படிந்த இடத்தில் நன்கு அழுத்தித் தேய்த்து பின்பு சோப்பு தண்ணீரில் அலசி எடுத்தால் போதும். மார்க்கர் கறை போயே போகும்.

ஸ்விம்மிங் பூல்

ஸ்விம்மிங் பூல்

ஸ்விம்மிங் பூலை சரியாக சுத்தம் செய்து சரியாகப் பராமரிக்கவில்லை என்றால், எப்படி நாறிவிடும் என்று தெரியுமல்லவா? அதனால் தான் நாம் பொதுவாக ஸ்விம்மிங் பூலில் குளிப்பதற்கு பெரிதாக அருவருப்படைகிறோம். ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா? கொக்கோ - கோலாவால் எப்படிப்பட்ட ஸ்விம்மிங் பூலின் அழுக்கையும் உங்களால் சுத்தம் செய்ய முடியும். ஆம். சுத்தம் செய்ய நினைக்கின்ற பொழுது, இரண்டு பாட்டில் கோக்கை நீச்சல் தொட்டிக்குள் ஊற்றி சிறிது நேரம் ஊறவிட்டு நன்குத் தேய்த்தால் போதும். நீச்சல்குளம் பளிச்சிட ஆரம்பித்துவிடும்.

MOST READ: இன்றைய அதிர்ஷ்ட ராசிகள் மூன்று பேர் யார் யாரென்று இதை பார்த்து கண்டுபிடிங்க பார்க்கலாம்...

என்ஜின் அடைப்பு

என்ஜின் அடைப்பு

நம்முடைய வண்டிகளில் அடிக்கடி என்ஜின்களில் அடைப்புகள் உணடாகும். ஒரு சிறிய கப்பில் கோக்கை ஊற்றிக் கொண்டு, என்ஜினைச் சுற்றுலும் நன்றாகத் துணி வைத்துத் துடைத்துவிட்டு, ஒரு சிறிய ஸ்கிரப் வைத்து மெதுவாக தேய்த்து விடுங்கள். சிறிது நேரம் ஊறவிட்டு, பின் தண்ணீர் விட்டு அலசினால் போதும் சுத்தமாகிவிடும்.

குளிர் நடுக்கம்

குளிர் நடுக்கம்

குளிர் காலத்தில் குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கும் பொழுது, கொஞ்சம் கோக் எடுத்துக் குடித்துப் பாருங்கள். சுகமாக உணர்வீர்கள். ஆம். இதை நீங்கள் குளிர்ச்சியாக குடிக்க வேண்டிய பானம் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் இது கதகதப்புக்காக குடிக்க வேண்டிய பானம். அதிலும் குளிர்காலத்துக்கு ஏற்ற கதகதப்பைக் கொடுக்கும் பானம் தான் இந்த கொக்கோ - கோலா.

காசுகளில் உள்ள கறைகள்

காசுகளில் உள்ள கறைகள்

சில்லறைக் காசுகளில் கொஞ்சம் கறை இருந்தால் கூட கடைகளில் செல்லாது என்று வாங்குவதில்லை. அதுபோன்ற நிறைய காயின்களை வீட்டில் டப்பாக்களில் போட்டு சேர்த்து வைத்திருப்போம். ஆனால் இனிமேல் அந்த சில்லறைகளுக்கு எல்லாம் வேலை வந்துவிட்டது. ஒரு பாட்டிலில் சிறிது கோக்கோ ஊற்றி, அதில் கறை படிந்த சில்லறைக் காசுகளைப் போட்டு சிறிது நேரம் ஊறவையுங்கள். அரை மணி நேரம் கழித்து எடுத்து சுத்தமான தண்ணீரில் கழுவிப் பாருங்கள். கறைபடிந்து ஓரமாகக் கிடந்த சில்லறை காசுகள் புதிதுபோல் பளபளக்கும்.

MOST READ: வீட்டிலேயே சிவலிங்கம் வைத்து வழிபட வேண்டுமென்றால் செய்ய வேண்டிய விதிமுறைகள் என்ன?

துர்நாற்றம் போக்க

துர்நாற்றம் போக்க

நம்முடைய உடைகளை எப்படி துவைத்தாலும், வாசனை திரவியங்கள் போட்டுக் கொண்டாலும் கூட உடலிலும் ஆடைகளிலும் ஒருவிதமான துர்நாற்றம் வியர்வையோடு கலந்து வீசும். குறிப்பாக மீன் சாப்பிட்டால் அந்த நாற்றம் உங்கள் ஆடைகளிலும் கூட வீசும். அப்படி துர்நாற்றம் வீசுகிற பொழுது, அந்த ஆடைகளை தனியே கோக்கில் சிறிது தண்ணீரையும் கலந்து ஊறவைத்து, வழக்கம்போல சோப்பு போட்டு துவைத்து, வழக்கம்போல காய வைத்து மடித்து வையுங்கள். தொடர்ந்து இரண்டு முறை இதைத் தொடர்ந்து செய்து வந்தால் போதும், ஆடைகளில் உள்ள துர்நாற்றம் விலகிவிடும்.

வலி நிவாரணி

வலி நிவாரணி

தேனீ கொட்டினால் எப்படி உயிர் போக வலியெடுக்கும் என்பது உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. அதேபோல தான் ஜெல்லி ஃபிஷ், கொசு போன்றவை கடிப்பது கூட ஆபத்து தான் கடித்த இடத்திலிருந்து விஷம் பரவாமல் இருப்பதற்கு சில துளிகள் கோக்கை எடுத்து அந்த இடத்தில் அப்ளை செய்தால் அதனால் உண்டான வலியெல்லாம் போயே போய்விடும்.

வயிற்றுக்கோளாறு நீங்க

வயிற்றுக்கோளாறு நீங்க

காரமான உணவுகள் சாப்பிட்ட பின்பு, சிலருக்கு நெஞ்சு மற்றும் வயிற்றெரிச்சல் உண்டாகும். அதேபோல் பல வகைகளில் வயிற்று வலி உண்டாகும். இதை சரிசெய்யவும் கொக்கோ - கோலா உதவும். ஆம். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரு ஸ்பூன் கொக்கோ - கோலாவை ரூம் டெம்பரேச்சரில் வைத்து சிரப் போல குடித்து வாருங்கள். அதில் குழந்தைகளுக்கென்றால், சிறிது சர்க்கரை சேர்த்து குடிக்கக் கொடுங்கள். குழந்தைகளுக்கு சளி கூட ஓடிப்போய்விடும்.

MOST READ: மனிதன் இறக்கும்போது வலிக்குமா?... இன்னும் பல மர்மங்களுக்கு விடை இதோ...

போல்ட் இறுக்கத்தை நீக்க

போல்ட் இறுக்கத்தை நீக்க

சில சமயங்களில் நாம் போல்ட்டை கழட்ட வேண்டும் என்று நினைக்கிற பொழுது, என்னதான் செய்தாலும் அதில் துருப்பிடித்து, கழட்ட முடியாமல் சிரமப்படுவோம். ஆனால் சிறிது சிறிதாக கோக்கை அந்த போல்ட்டில் ஊற்றி, ஊறவிட்டு கழட்டினால் மிக வேகமாகக் கழட்டிவிட முடியும்.

ஹேர்டையை நீக்க

ஹேர்டையை நீக்க

தலைக்கு ஹேர்டை போட்டு அது கொஞ்சம் அதிகமாகிவிட்டால், கொஞ்சம் எரிச்சல் அதிகமாகிவிடும். அப்படி நீங்கள் போடுகின்ற ஹேர்டை மிகவும் அதிகமாகிவிட்டால் அதற்கு மிகச்சிறந்த தீர்வாக இந்த கோக் இருக்கும். கோக்கை தலையில் சிறிது நேரம் சிறிதளவு தண்ணீரில் கலந்து தலையை அலசுங்கள். மிக அடர்த்தியாக உள்ள கலர் குறைந்து, சரியான நிறத்துக்கு வந்துவிடும்.

காபி/ டீ கறைகள்

காபி/ டீ கறைகள்

காபி மற்றும் டீ போடும் பாத்திரங்களில் உண்டாகிற இந்த கறைகள் என்ன செய்தாலும் எப்படி தேய்த்தாலும் போகாது. அதற்கும் இந்த கோக் சிறந்த தீர்வாக இருக்கும். அந்த பாத்திரத்தில் கோக்கை சிறிது மட்டும் தண்ணீர் கலந்து இரவு முழுக்க ஊறவிடுங்கள். பிறகு காலையில் எழுத்து வழக்கம் போல சோப் போட்டு தேய்த்துப் பாருங்கள். அந்த பாத்திரத்தில் டீ கறை சிறிது கூட இருக்காது.

MOST READ: இந்த 10 வேலை செய்றவங்கதான் குண்டாகிட்டே போவாங்களாம்... நீங்களும் இதான் செய்றீங்களா?

டாய்லெட்

டாய்லெட்

டாய்லெட்டை கிளீன் செய்வதற்கு பல்வேறு வகையான கிளீனர்களை நாமும் வாங்கிப் பயன்படுத்தி இருப்போம். எதிலுமே நாம் திருப்தியடைந்தது கிடையாது. ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா? கோக் மறற் எந்த கிளீனர்களையும் விட அதிக சுத்தத்தை உங்களுடைய டாய்லெட்டுக்குக் கொடுக்கும். ஒரு பௌல் அளவுக்கு கோக்கை டாய்லெட்டில் ஊற்றி சிறது நேரம் ஊறவிடுங்கள். பேக்கிங் சோடாவில் உள்ள அமிலத்தினால் டாய்லெட் பளிச்சென்று மாறிவிடும்.

மௌத்வாஷ்

மௌத்வாஷ்

வாயில் சிறிதளவு கோக்கை ஊற்றி தினமும் வாய் கொப்பளித்துப் பாருங்கள். உங்களுடைய வாயில் உண்டாகும் துர்நாற்றம், பல் கறைகள் ஆகியவை நீங்குவதை நீங்கள் கண்ணார உணர்வீர்கள்.

ஸ்கின் லோஷன்

ஸ்கின் லோஷன்

எவ்வளவு விலையுயர்ந்த லோஷனை வாங்கி சருமத்தில் அப்ளை செய்தாலும் உங்களுடைய சருமத்தில் நீங்கள் எதிர்பார்த்த பளபளப்பு உங்களுக்குக் கிடைக்கிறதா என்ன? ஆனால் அந்த லோஷனில் சிறிதளவு கோக்கை விட்டு பின் அப்ளை செய்யுங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் மேனியின் பளபளப்பை.

MOST READ: நட்புக்காக உயிரையே கொடுக்கும் ஐந்து ராசிக்காரர்கள் யார் தெரியுமா? தெரிஞ்சி பழகுங்க...

மேரனேட்

மேரனேட்

சிக்கனோ மட்டனோ மேரனேட் செய்யும் போது உங்களுடைய மசாலாவுடன் சேர்த்து, சிறிதளவு கோக்குடன் மேரனேட் செய்து வைத்துவிட்டு, பின்னர் அதை சமைத்துப் பாருங்கள். இதுவரைக்கும் அப்படியொரு சிக்கனை நீங்கள் சாப்பிட்டு இருக்கவே மாட்டீர்கள்.

பிறகென்ன! இன்னைக்கே வீட்ல கோக்கை வாங்கி அடுக்கப் போறீங்களா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

amazing and unexpected uses of coco - cola

here we are talking about the amazing and multiple unexpected uses and things of coco cola
Story first published: Wednesday, December 5, 2018, 14:02 [IST]
Desktop Bottom Promotion