Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
எப்படி துவைச்சாலும் வெள்ளை ஆடை கலர் மங்கலாவே இருக்கா... துவைக்கும்போது இத கொஞ்சம் போடுங்க...
வெள்ளை நிற ஆடைகள் என்றாலே ஒரு கெத்து தான். பீரோவில் கூட முதலிடத்தையும், தனி கவனிப்பையும் பெறுகிறது அல்லவா
வெள்ளை நிற ஆடைகள் என்றாலே ஒரு கெத்து தான். பீரோவில் கூட முதலிடத்தையும், தனி கவனிப்பையும் பெறுகிறது அல்லவா?

நாள்பட நாள்பட வெண்மை சற்றே மங்கலாக ஆகிவிடுவது சகாஜம் தான் என்றாலும் வெள்ளை நிற ஆடைகளை எப்படி தான் துவைப்பதோ என்று சளித்து கொள்ளாதீர்கள். சூப்பரான வழிகள் சில உள்ளன இவற்றை கடைபிடித்து, உங்கள் ஃபேவரைட் வெள்ளை நிற ஆடைகளை ஜொலிஜொலிக்க அணிந்து மகிழுங்கள்.

1) தனியாக துவையுங்கள்.
இதர வண்ண உடைகளுடன் சேர்த்து துவைக்க கூடாது. உங்களுக்கு நேரம் இல்லை என்றாலும் கொஞ்சம் மெனக்கெட்டுங்கள். அதே போல் துணியின் வகை, படிந்துள்ள அழுக்கு, கறை, துவைக்கும் நீரின் வெப்ப நிலை, நீங்கள் பயன்படுத்த இருக்கும் சோப்பு மற்றும் வெளுப்பான் ஆகியவற்றின் மேலும் ஒரு தனி கவனம், ஒவ்வொரு முறை துவைக்கும் போதும் இருக்கவேண்டும்.

2) விடாபிடி கறைகளை கவனமாக கையாளவும்
துவைப்பதற்கு முன் சிறிதளவு திரவ டிடெர்ஜெண்டை கொண்டு, கறையை தனியாக சுத்தம் செய்வது நல்லது. கறையின் தன்மையையும், துணியின் வகையையும் கருத்தில் கொள்ளவும். காட்டன் கை உறைகளை அணிந்து கொண்டு, கறை பட்ட இடத்தை மட்டும் நன்றாக தேய்த்து, ஊர வைத்து சுத்தம் செய்து விடவும். நீங்கள் உபயோகிக்கும் கறை நீக்கியை சுத்தமாக அலசி விடுங்கள். இல்லையென்றால், அந்த கறை நீக்கி மற்ற இடங்களுக்கு பரவி உடை மொத்தத்தையும் பாழக்கிவிடும்.

3) வெந்நீரில் துவைக்கலாம்
வெந்நீரில் துவைப்பதன் முக்கியத்துவம். வெள்ளை நிற துணிகளை நல்ல சூடான வெந்நீரில் துவைப்பது சிறந்தது. ஆனால் கஷ்மீரி மற்றும் பாலியெஸ்டர் துணிகளுக்கு குளிர்ந்த/சாதாரண நீரே போதுமானது. அதே போல் லிக்ரா மற்றும் பட்டு புடவைகளை துவைப்பதற்கு மிதமான வெந்நீரே நல்லது. இல்லையென்றால் அவை, அதிக வெப்பத்தில் சுருங்கி போய் துணியை கெடுத்துவிடும். ஆகையால் ஆடையுடன் வரும் லேபிள்களில் உள்ள வழிமுறைகளை கவனமாக படித்து தெரிந்து, அதன்படி துவைக்கவும்.

4) டிடர்ஜெண்ட்
டிடர்ஜெண்ட் கொண்டு துவைக்கும் போது கொஞ்சம் புத்திசாலித்தனம் தேவை. ஏனென்றால், அதிகமாக டிடர்ஜெண்ட் போட்டு துவைத்தால், அதிக வெண்மை கிடைக்கும் என்ற ஒரு தவறான் நம்பிக்கை நம்மிடம் உண்டு. உண்மையில் அதிகபடியான டிடர்ஜெண்ட் மற்றும் மென்மையாக்கிகள், துணியின் மேல் அப்படியே ஒரு படிமம் போல் படிந்து ஒரு காந்தத்தை போல் அழுக்கை ஈர்க்கும். மேலும், இவை ஆடைகளை பாதித்து விரைவில் சீரழித்து, கிழித்து விடும். ஆகையால், டிடர்ஜெண்டை பார்த்து அளவாக உபயோகிக்கவும். டிடர்ஜெண்ட் போகும் அளவு நன்றாக நீரில் அலசுவது நல்லது.

5) வெளுப்பான்கள்
வெளுப்பான்கள் பொதுவாக ஆடைகள் வெளுக்க பயன்படுத்தப்பட்டாலும் அதிகபடியான வெளுப்பான்கள் துணியை பழுப்பு அல்லது சாம்பல் நிறமாக்கி விடும். மேலும் இவற்றை தொடர்ந்து உபயோகிப்பதால் அதிலுள்ள குளோரின் மற்றும் ஆக்ஸிஜன் சார்ந்து இருப்பதால், ஆடைகளில் ஓட்டையையோ, பொத்தலோ, கிழிசலோ எளிதில் விழுந்து விடும் என்பதிலும் கவனம் கொள்ளவும்.

6) பேக்கிங் சோடா
அது சரி, இதற்கு நம் வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டே தீர்வு காணமுடியும் எனபதும் உண்மை தான். மிகச்சிறந்த மென்மையான வெளுப்பான் நமது வீட்டு சமையலறையிலிருக்கும் பலகார சோடா தான். ஹைட்ரஜன் பெராக்சைடு ஆண்ட்லிமொன் ஜூஸ் ஆகியவை கூட நல்ல பலனை தரும். கறை படிந்த இடத்தின் மேல் இவற்றை மிருதுவாக தேய்த்தாலே போதும். கறை காணாமல் போய்விடும்.

7) உலர்த்துதல்-
வெள்ளை ஆடைகளை, வாஷிங் மெஷினிலிருந்து எடுத்த உடனே உலர்த்துவதால் சுருக்கங்கள், மடிப்புகள் ஆகியவற்றை தவிர்க்கலாம். அதே போல் நேரடியாக சூரிய ஓளியில் காய வைப்பதால் அது கண்ணுக்கு தெரியாத பூச்சி கொள்ளியாகவும், வெண்மையை மேம்படுத்தவும் உதவும். சூரிய ஓளியில் நேரடியாக உலர்த்துவது மிகவும் நல்லது.



Click it and Unblock the Notifications
