Latest Updates
-
இந்த ஆண்டின் கடைசி 4 மாதங்கள் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் வளர்ச்சியையும், லாபத்தையும் காண்பாங்களாம்.! -
கொசுக்களுக்கு ஏன் மனித இரத்தம் தேவைப்படுகிறது? கொசுக்கள் கடித்தால் ஏன் அரிப்பு ஏற்படுகிறது தெரியுமா? -
செப்டம்பர் மாதத்தில் வெற்றிகளையும், கோடிகளையும் குவிக்கும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் ரவா லட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
ஹை பிபி இருக்கா? மருந்து மாத்திரை இல்லாமலேயே பிபி-யை குறைக்கணுமா? அப்ப இந்த 5 பானங்களை குடிங்க.. -
வறுத்து அரைச்ச கோவக்காய் சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
1 வருடம் கழித்து வக்ரமடையும் சுக்கிரனால் பணத்தையும், புகழையும் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
இந்தியாவின் எத்தனை செயற்கைகோள்கள் விண்வெளியில் உள்ளது? எந்த நாட்டிடம் மிக அதிக செயற்கைகோள்கள் உள்ளது தெரியுமா? -
கர்நாடகா ஸ்பெஷல் அக்கி ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணம் கொட்டும் நாளாக இருக்குமாம்
நீங்க சாப்பிடும் பழத்தில் உயிருக்கு ஆபத்தான பூச்சிக்கொல்லிகள் இல்லாம இருக்கணுமா? இப்படி கழுவிட்டு சாப்பிடுங்க!
ஒருவர் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்க்கு பழங்கள் மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் பழங்கள் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலங்களாக இருக்கிறது மற்றும் ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு முறையை உருவாக்க உதவுகிறது.
நம் தினசரி உணவின் ஒரு முக்கிய அங்கமாக பழங்கள் இருக்கும்போது, அது தேவையான ஆற்றலை அளிக்கிறது மற்றும் ஊட்டச்சத்துக்களின் தினசரி தேவையை பூர்த்தி செய்ய உதவுகிறது. ஆனால் தற்போதைய கலப்பட உலகில், நாம் பெரும்பாலும் இரசாயன சிகிச்சைக்கு ஆளாகியே பழங்களையே உண்கிறோம், இது நன்மையை விட அதிக தீமைக்கு வழிவகுக்கும்.

இந்த சூழலில் வீட்டில் பழங்களை கையாளும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உங்கள் வீட்டில் உள்ள பழங்களிலிருந்து பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயனங்களை அகற்றுவதற்கான எளிய மற்றும் சிறந்த வழிகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஊறவைத்து கழுவுதல்
புதிதாக வாங்கிய பழங்களிலிருந்து பூச்சிக்கொல்லிகள் மற்றும் இரசாயனங்களை அகற்றுவதற்கான எளிதான மற்றும் புத்திசாலித்தனமான வழிகளில் இதுவும் ஒன்றாகும். இந்த முறையில் பழங்களைத் தண்ணீரில் ஊறவைத்தால் போதும். அவற்றை சிறிது நேரம் அப்படி ஊற வைக்கவும், பின்னர் மெதுவாக தேய்த்து, ஓடும் நீரில் கழுவவும்.
உப்பு நீர்
இந்த வழியை முயற்சிக்க, நீங்கள் செய்ய வேண்டியது தண்ணீரில் சிறிது வெள்ளை உப்பைச் சேர்த்து, நன்கு கரைக்கவும், பின்னர் அந்த தண்ணீரில் பழங்களை ஊறவைக்கவும். இது 30 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும், பின்னர் பழங்களை மெதுவாக தேய்த்து, ஓடும் நீரில் கழுவவும்.
தோலை உரிப்பது
பூச்சிக்கொல்லிகளை அகற்றுவதற்கான ஒரு ஆரோக்கியமான வழிமுறையாக வெளிப்புற தோலை உரிப்பது கருதப்படுகிறது. இதனை செய்வதற்கு பழங்களை ஓடும் நீரில் நன்கு கழுவிய பின், நீங்கள் தோலை அகற்றி, பின்னர் அவற்றை உட்கொள்ள வேண்டும்.
பிளான்ச்சிங்
இது தூசி, அழுக்கு மற்றும் இரசாயனங்களை அகற்றுவதற்கான சிறந்த வழியாகவும் கருதப்படுகிறது. பழங்களை சுத்தப்படுத்த, நீங்கள் சிறிது தண்ணீரை கொதிக்க வைத்து அதில் பழத்தை 1 நிமிடம் ஊறவைத்து, பின்னர் பழங்களை குளிர்ந்த நீரில் மாற்றி கழுவ வேண்டும். இது அசுத்தங்களை திறம்பட அகற்ற உதவுகிறது.
வினிகர்
வினிகரின் காரத்தன்மை பெர்ரி மற்றும் திராட்சை போன்ற பழங்களின் சுவைக்கு இடையூறு விளைவிக்கும் என்பதால், இந்த முறையை கொஞ்சம் கவனமாக கையாள வேண்டும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் 10 சதவிகிதம் வெள்ளை வினிகர் மற்றும் 90 சதவிகிதம் தண்ணீருடன் ஒரு கரைசலை உருவாக்கி, அதில் பழங்களை ஊற வைக்கவும். அவற்றை சுற்றி கிளறி நன்கு அலசவும். பெர்ரி போன்ற பழங்களைக் கழுவும்போது கவனமாக இருங்கள், மேலும் மெல்லிய சருமம் கொண்ட பழங்களைக் கழுவினால், அவற்றின் நுண்துளை தோலை சேதப்படுத்தலாம்.
பேக்கிங் சோடா
வீட்டில் உள்ள பழங்களை சுத்தம் செய்ய பேக்கிங் சோடாவையும் பயன்படுத்தலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தண்ணீரில் பேக்கிங் சோடாவை கலந்து கரைசலைத் தயாரிக்கவும், பின்னர் பழங்களை அதில் ஊறவைத்து, சிறிது நேரம் ஊற விடவும், பின்னர் ஓடும் நீரில் பழங்களை கழுவவும்.
எலுமிச்சை மற்றும் மஞ்சள்
உப்பு மற்றும் மஞ்சள் கலந்து ஒரு கரைசலை உருவாக்கவும், இதில் ஒரு எலுமிச்சையை பிழிந்து பழங்களை 30 நிமிடம் ஊற வைக்கவும். 30 நிமிடம் கழித்து பழங்களை வெதுவெதுப்பான நீரில் நன்கு கழுவி உலர வைக்கவும்.



Click it and Unblock the Notifications
