Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
வீட்டுல இருக்க அரிசியில் பூச்சியும் வண்டும் மேய்தா? அப்ப இந்த பொருட்களை அரிசி டப்பாவில் வையுங்க...இனி வராதாம்!
வீட்டின் சமையலறையில் என்னதான் நாம் பாதுகாப்பாக அரிசி, தானியங்கள் மற்றும் பருப்புகளை சேமித்து வைத்திருந்தாலும், பூச்சிகள் மற்றும் வண்டுகள் அவற்றில் மேய்ந்து கொண்டிருக்கும். இது உணவு பொருட்களின் தரத்தை பாதிப்பதோடு, நமக்கும் தொற்றுநோயை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை காற்று புகாத கொள்கலன்களிலும், உலர்ந்த இடங்களிலும் சேமித்து வைப்பது பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டிருப்போம். மேலும், ஈரமான கைகளால் அவற்றைத் தொடாமல் மிக கவனமாக இருந்திருப்போம். இன்னும், எல்லா வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்தாலும், அவை பூச்சி மற்றும் வண்டுகளால் பாதிக்கப்படுகின்றன.
நீங்களும் இதே சிக்கலை எதிர்கொண்டால், அரிசி மற்றும் பிற தானியங்களை பூஞ்சை தொற்று, பூச்சிகள் மற்றும் வண்டுகளிடமிருந்து பாதுகாக்க உதவும் சில எளிய சமையலறை குறிப்புகள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.
பிரியாணி இலை
புழுக்கள் மற்றும் வண்டுகளைப் போக்க பிரியாணி இலைகளை பயன்படுத்துவது சிறந்த மருந்துகளில் ஒன்றாகும். நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், அரிசி பாத்திரத்தில் அல்லது பாக்கெட்டில் 4-6 பிரியாணி இலைகளை வைக்க வேண்டும். உங்கள் அரிசி பாத்திரம் மாசுபடுவதைத் தவிர்க்கவும் மற்றும் காற்று புகாதா கொள்கலனில் வைக்க வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
கிராம்பு
வலுவான நறுமணம் கொண்ட கிராம்பு மசாலா, பூச்சிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும், பூச்சி மற்றும் வண்டுகள் மூலமாக ஏற்படும் தொற்றுநோயைத் தவிர்க்க உதவுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, சமையலறையில் கிருமிகள் இல்லாமல் இருக்க கிராம்பு எண்ணெயை ஸ்ப்ரேயாகவும் பயன்படுத்தலாம்.
குளிர்சாதன பெட்டி
காய்கறி மற்றும் பழங்களை மட்டுமல்ல அரிசையையும் நீங்கள் குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கலாம். இது அனைத்து அந்துப்பூச்சிகளையும் கொல்ல உதவும். பின்னர் நீங்கள் அரிசியை அறை வெப்பநிலையில் காற்று புகாத கொள்கலனில் மீண்டும் சேமித்து பயன்படுத்தலாம்.
பூண்டு
நீங்கள் அரிசி சேமித்து வைத்திருக்கும் பாக்கெட் அல்லது பாத்திரத்தில் உரிக்காத பூண்டுகளை நிறைய போட்டு வைக்கலாம். பின்னர், பூச்சுக்கள் மற்றும் வண்டுகள் இல்லாததை சரிபார்த்து, பூண்டை வேறு இடத்திற்கு மாற்றலாம்.
சூரிய ஒளி
சேமித்து வைக்கப்பட்டிருந்த அரிசி ஏற்கனவே பூச்சிகள் மற்றும் வண்டுகளால் பாதிக்கப்பட்டிருந்தால், அதை ஒரு காகித தாளில் பரப்பி ஒரு நாள் முழுவதும் சூரிய ஒளி நன்றாக படுமிடத்தில் வைக்க வேண்டும். பின்னர் சுத்தமான, உலர்ந்த, காற்று புகாத கொள்கலனில் அவற்றை சேமித்து வைக்க வேண்டும்.
சமையலறையில் நேரடியாக சூரிய ஒளி படவில்லை என்றால், ஒவ்வொரு 1-2 மாதங்களுக்குப் பிறகு அரிசி, பிற தானியங்கள் மற்றும் பருப்புகளை சூரிய ஒளியில் வைப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது பூஞ்சை தொற்றுக்கள் மற்றும் வண்டுகள் உருவாதை தடுக்க உதவும்.



Click it and Unblock the Notifications

