Latest Updates
-
தங்கம் ஏன் மஞ்சள் நிறத்தில் மட்டும் இருக்கிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சுக்ராதித்ய யோகத்தால் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்.. பண மழை கொட்டும்.. -
கம்பு ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 22, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணும் - ஜாக்கிரதை -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க
உங்க சமையலறையில் இருக்கும் பூண்டு நீண்ட காலம் கெட்டுப்போகாம இருக்கணுமா? இத பண்ணுங்க போதும்...!
பூண்டு அனைத்து சமையலறைகளிலும் இருக்கும் ஒரு அத்தியாவசிய சமையல் பொருளாகும். பூண்டு சேர்க்கப்படும் உணவுகளின் சுவை எப்போதும் அற்புதமாக இருக்கும். சைவ மற்றும் அசைவ உணவுகள் இரண்டிலுமே பூண்டு பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
பூண்டு உணவுக்கு தனித்துவமான சுவையை வழங்குவது மட்டுமல்லாமல், அதில் சில மருத்துவ குணங்களும் உண்டு. பூண்டு ஆண்டு முழுவதும் கிடைத்தாலும், வெப்பம் அல்லது பிற காரணிகளால் அது கெட்டுப்போகும் அல்லது விரைவாக காய்ந்துவிடும். தினமும் பயன்படுத்தும் பொருளாக இருப்பதால் அதை அதிகளவில் வாங்கி சேமிக்கும் பழக்கம் பெரும்பாலான வீடுகளில் உள்ளது.

பூண்டை தவறான முறையில் சேமிப்பதால் அது விரைவில் கெட்டுவிடும் மற்றும் சுவையை இழக்க நேரிடும். பூண்டை நீண்ட காலம் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும் சில எளிய வழிகள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
காற்று புகாத கொள்கலனில் சேமிக்கவும்
பூண்டைச் சேமிப்பதற்கான சிறந்த வழி, அதை உரித்து, காற்றுப் புகாத ஜாடியில் அடைத்து, குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைப்பதாகும். இந்த வழியில், நீங்கள் ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். அதற்குமுன் ஜாடியில் ஈரப்பதம் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும், ஏனெனில் ஈரப்பதம் இருந்தால் பூண்டு வழக்கத்தை விட விரைவில் கெட்டுவிடும். வேலை செய்யும் பெண்களுக்கு இந்த குறிப்பு உதவியாக இருக்கும், ஏனெனில் பூண்டு உரிப்பதற்கு அதிக நேரம் எடுக்கும். இந்த முறையில் உரித்த பூண்டை அவர்கள் உடனடியாகப் பயன்படுத்தலாம்.
பேஸ்ட்டாக அரைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்
நீங்கள் தினமும் பூண்டை பயன்படுத்துவதாக இருந்தால், பேஸ்ட் செய்து குளிர்சாதன பெட்டியில் சேமிக்கலாம். பூண்டு பற்களை ஒரு மென்மையான பேஸ்டாக அரைத்து, ஒரு பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி காற்று புகாத ஜாடியில் சேமிக்கவும். ஜாடியில் சேமிக்கும் போது அதனுடன் சிறிது வெள்ளை வினிகரை சேர்க்கவும். இது அதன் ஆயுட்காலத்தை நீட்டிக்க உதவுகிறது.
சணல் பைகளைப் பயன்படுத்தலாம்
பூண்டை நீண்ட காலம் சேமிக்க சணல் பைகளையும் பயன்படுத்தலாம். சணல் பைகள் காற்றோட்டத்தை அனுமதிக்கின்றன, இது பூண்டை நீண்ட நாட்கள் ப்ரெஷாக வைத்திருக்க உதவுகிறது. இந்த வழியில் சேமிக்கப்படும், பூண்டு ஒரு வருடம் வரை நீடிக்கும். அதனால்தான் கடைகளில் பூண்டு சணல் பைகளில் வைக்கப்படுகிறது.
காட்டன் துணி அல்லது பைகளை பயன்படுத்தவும்
உங்கள் வீட்டில் சணல் பை இல்லை என்றால் காட்டன் துணியை பயன்படுத்தலாம். அதற்கு மாறாக, ஒரு பருத்தி துணியை இரண்டு முறை மடித்து, முழு பூண்டை அதற்கிடையில் வைத்து, ஒரு மூட்டைப் போல் கட்டவும். இதனை குறைந்த வெளிச்சம் உள்ள இடத்தில் குளிர்ச்சியாக சூழலில் சேமிக்கவும்.
சமையலறையில் எப்படி சேமிப்பது?
சமையலறையில் பூண்டை சேமிக்கும் போது, அதை ஒரு கூடையில் வைக்கவும். இருப்பினும், கூடை காற்றோட்டத்துடன் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தவும். கடைகளிலிருந் வாங்கி வந்த பூண்டை, கே பிளாஷ்டிக் பையில் வைக்க வேண்டாம், ஏனெனில் காற்று சுழற்சி இல்லாததால் அது விரைவில் கெட்டுவிடும். கூடையில் முழு பூண்டு மட்டும் சேமிக்கவும். சில பற்களை நீக்கி சேமித்து வைத்தால், அவை விரைவில் கெட்டுவிடும்.



Click it and Unblock the Notifications

