Latest Updates
-
நவம்பர் 05, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வெற்றிகளை குவிக்கப் போறாங்களாம் -
தீபாவளியில் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு வருமானம் இரட்டிப்பாகும்! உங்க ராசி இதுல இருக்கா? -
Diwali 2026 Horoscope: இந்த தீபாவளியில் ராஜயோகத்தை பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Hair Care: கருகருனு நீளமான முடி வேணுமா? அப்ப தயிரை இந்த மாதிரி முடியில் யூஸ் பண்ணுங்க -
பட்டுப்போன்ற மென்மையான உதடுகள் வேண்டுமா? அப்ப இந்த லிப் மாஸ்க்கை தினமும் நைட் போடுங்க.. -
தீபாவளிக்கு பேக்கரி ஸ்டைல் மைதா பிஸ்கட்டை செய்யுங்க.. 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வெண்டக்காயை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பச்சடி செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் 'வெங்காய தலைநகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
Dhanteras 2026: தந்தேராஸ் நாளில் குறைந்த பட்ஜெட்டில் மகாலட்சுமியின் அருளைப் பெற வாங்க வேண்டிய 5 பொருட்கள்! -
வாஸ்து படி உங்களோட தங்க நகைகளை வீட்டின் திசையில் மட்டும் வைக்காதீங்க - இல்லனா அவ்வளவுதான்
நீங்க சாம்பாரில் போடும் பெருங்காயம் போலியானதானு தெரிஞ்சிக்கணுமா? அப்ப இதை பண்ணுங்க...!
இந்திய உணவுகளில் பெருங்காயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பெருங்காயம் அதன் தனித்துவமான வாசனை மற்றும் செரிமான பண்புகளுக்காக பல நூற்றாண்டுகளாக சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது, அதனால்தான் இந்திய சமையலறைகளில் பெருங்காயம் முக்கிய இடம் பிடித்துள்ளது.
இந்த மசாலாப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், கலப்படம் மற்றும் போலியான பெருங்காயம் சந்தையில் அதிகம் விற்கப்படுகிறது, இந்த போலியான பெருங்காயம் உணவின் சுவையில் மட்டுமின்றி தரத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

உங்கள் உணவுகள் நல்ல சுவையில் இருப்பதையும், அதனால் கிடைக்கும் முழு ஆரோக்கிய நன்மைகளையும் பெறுவதற்கு போலியான பெருங்காயத்தை கண்டறிவது மிகவும் அவசியம். போலியான பெருங்காயத்தை எப்படி கண்டறியலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வாசனையை சோதிக்கவும்
உண்மையான பெருங்காயம் மிகவும் வலுவான மற்றும் கடுமையான வாசனையைக் கொண்டிருக்கும், பெருங்காய டப்பாவை திறந்தாலே அந்த வீடு அறை முழுவதும் பெருங்காய வாசனை இருக்கும். போலியான அல்லது கலப்படமான பெருங்காயம் இந்த தீவிரத்தன்மை இல்லாமல் இருக்கும் அல்லது அவற்றின் செயற்கையாக மேம்படுத்தப்பட்ட வாசனை விரைவில் மறைந்துவிடும். இதை சரிபார்க்க, ஒரு சிறிய அளவு பெருங்காயத்தை எடுத்து, அதை நசுக்கி, அதன் வாசனையை சோதிக்கவும், அதன் வாசனை மிகவும் லேசானதாகவோ அல்லது செயற்கை வாசனையாகவோ இருந்தால், அது போலியானதாக இருக்கலாம்.
தண்ணீரில் கரைக்கவும்
கலப்படமில்லாத பெருங்காயம் வெதுவெதுப்பான நீரில் எந்த எச்சத்தையும் விட்டு வைக்காமல் முழுவதும் கரையும். இதை உறுதி ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை பெருங்காயத்தைச் சேர்க்கவும். நீங்கள் கரையாத துகள்கள் அல்லது மிச்சத்தைக் கண்டால், அது கலப்படமான பெருங்காயமாக இருக்கலாம்.
அமைப்பை சோதிக்கவும்
உண்மையான பெருங்காயம் மென்மையானது மற்றும் ஒட்டக்கூடியத் தன்மை உடையது, குறிப்பாக அதன் மூல பிசின் வடிவத்தில் இருக்கும் போது. பெருங்காயத்தூள் மிகவும் உலர்ந்ததாகவோ அல்லது பொடியாகவோ இருந்தால், அது கலப்படம் செய்யப்பட்ட பெருங்காயமாக இருக்கலாம். எனவே மென்மையான பெருங்காயத்தை பார்த்து வாங்கவும்.
வெப்ப சோதனை
ஒரு கரண்டியில், ஒரு சிறிய அளவு பெருங்காயத்தை எடுத்து நெருப்பில் சூடாக்கவும். உண்மையான பெருங்காயம் சமமாக உருகும் மற்றும் கூர்மையான, தனித்துவமான வாசனையைக் கொண்டிருக்கும். பெருங்காயம் கருகுவது, துர்நாற்றம் அல்லது தூசிகள் எஞ்சியிருப்பது கலப்படமான பெருங்காயத்தைக் குறிக்கிறது.
பேக்கேஜை சரிபார்க்கவும்
உண்மையான பிராண்டுகள் தங்கள் தயாரிப்புகள் தரமான தரத்தை பூர்த்தி செய்வதை உறுதி செய்கின்றன. பேக்கேஜிங்கில் "100% தூய்மையானது" அல்லது "உண்மையானது" போன்ற சான்றிதழ்கள் மற்றும் லேபிள்களைத் தேடுங்கள். அறியப்படாத கம்பெனிகளின் பெருங்காயத்தை வாங்க வேண்டாம், ஏனெனில் உள்ளூர் விற்பனையாளர்கள் கலப்படம் செய்யப்பட்டவற்றை மலிவான விலையில் விற்க வாய்ப்புள்ளது.
போலியான பெருங்காயத்தைப் பயன்படுத்துவது உங்கள் உணவுகளின் சுவையை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், ஆரோக்கியமற்ற இரசாயனங்கள் அல்லது கலப்படங்களையும் அதிகரிக்கிறது. இந்த எளிய சோதனைகள் உங்கள் சமையலறையில் சுத்தமான பெருங்காயம் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யும்.



Click it and Unblock the Notifications

