Latest Updates
-
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்!
வாஸ்து படி உங்க வீட்டுல இந்த 5 விஷயங்கள மாத்துனா... எப்பவும் உங்க வீட்டுல பணமழைதானாம்..!
Vastu Tips In Tamil: இவ்வுலகில் உள்ள 95% சதவீத மக்கள், தாங்கள் பெரிய பணக்காரராக ஆக வேண்டும் மற்றும் செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்று விரும்புகிறார்கள், ஆசைப்படுகிறார்கள். ஆனால், எல்லாருக்கும் இந்த பாக்கியம் கிடைப்பதில்லை. ஆனால், அதற்கான முயற்சியையும் கைவிடுவதில்லை.
செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்ற உங்கள் கனவை வாஸ்து சாஸ்த்திரம் நனவாக்க உதவும். வாஸ்து சாஸ்த்திரம் என்பது ஒரு பண்டைய இந்திய விஞ்ஞானமாகும். இது நேர்மறை ஆற்றலை மேம்படுத்தும் மற்றும் செல்வத்தை ஈர்க்கும் இடங்களை வடிவமைப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறது.

பண்டைய இந்திய கட்டிடக்கலை அறிவியல் மூலம் இயற்கையின் வடிவங்களுடன் கட்டமைப்புகளை அமைப்பதன் மூலம் செழிப்பையும் மகிழ்ச்சியையும் தருவதாக வாஸ்து சாஸ்த்திரம் கூறுகிறது. நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் மற்றும் எதிர்மறை தாக்கங்களைக் குறைக்கும் வகையில் இடைவெளிகளை வடிவமைப்பதற்கான வழிகாட்டுதல்களை இது வழங்குகிறது.
இந்தக் கொள்கைகளைப் பின்பற்றினால் செல்வமும் வெற்றியும் பெருகும் என்று பலர் நம்புகிறார்கள். அந்த வகையில், உங்கள் வீட்டில் செல்வ செழிப்பு நிறைந்து வழிய மற்றும் இருமடங்கு செல்வத்தை அதிகரிக்க செய்வது எப்படி என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
திசையின் முக்கியத்துவம்
வாஸ்து படி, செல்வ வளத்தை ஈர்ப்பதில் திசை முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில், வடக்கு திசை செல்வம் மற்றும் செழிப்புடன் தொடர்புடையது. இது செல்வத்தின் கடவுளான குபேரானால் ஆளப்படுகிறது. எனவே, இந்த திசையில் நிதி ஆவணங்கள் அல்லது மதிப்புமிக்க பொருட்களை வைத்திருப்பது அதிக செல்வத்தை உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்க்கும்.
அதேபோல, நீங்கள் கிழக்கு திசையைப் பார்த்து வேலை செய்தால் உற்பத்தித் திறனை அதிகரிக்கும், பொருளாதார ரீதியாக நீங்கள் முன்னேற்றம் அடைவீர்கள்.
செல்வத்தை ஈர்ப்பதில் நீரின் பங்கு
வாஸ்து விதிகளின்படி செல்வ செழிப்பைக் கொண்டுவருவதற்கு நீர் கூறுகளும் முக்கியமானவை. வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள நீர் நீரூற்று அல்லது மீன்தொட்டி போன்ற பொருட்கள் உங்கள் நிதி வளர்ச்சியை அதிகரிக்க உதவும். இருப்பினும், அழுக்கு நீர் நேர்மறை ஆற்றலை விரட்டும் என்பதால், இந்த பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க மறக்காதீர்கள்.
கதவுகள் மற்றும் ஜன்னல்களின் முக்கியத்துவம்
வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் ஆற்றல்களுக்கான நுழைவு புள்ளிகளாக செயல்படுகின்றன. எனவே செல்வத்தை வீட்டிற்குள் ஈர்ப்பதில் கதவு மற்றும் ஜன்னல் இருக்கும் இடம் மிகவும் முக்கியமானது. உங்கள் வீட்டின் பிரதான கதவு வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.
அதற்கு நேர் எதிரே மரங்கள் அல்லது கம்பங்கள் போன்ற தடைகள் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இவை, நல்ல ஆற்றல் வருவதை தடுக்கலாம். நல்ல ஆற்றல் மற்றும் நல்ல அதிர்ஷ்டம் உங்கள் வீட்டிற்குள்ளே இருக்க வேண்டும் என நினைத்தால், ஜன்னல்களை உள்நோக்கி திறக்க வேண்டும். இவை, உங்கள் செல்வ செழிப்பை வீட்டை விட்டு வெளியே செல்லவிடாது.
வீட்டில் சுத்தமில்லாத இடங்கள்
'சுத்தம் சோறுபோடும்', 'தூய்மையான இடங்களில் தெய்வம் குடியிருப்பார்' போன்ற பல பழமொழிகள் சுத்தம் பற்றி கூறப்பட்டு வருகிறது. வாஸ்து சாஸ்த்திரத்தின்படி, செல்வம் உங்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்றால் அல்லது உங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்றால், வீட்டை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அசுத்தமான வீட்டில் எதிர்மறை ஆற்றல் மட்டுமே இருக்கும்.
தூய்மையான வீடு நேர்மறை ஆற்றலை ஈர்ப்பது மட்டுமல்லாமல், உங்கள் வீட்டைச் சுற்றி செல்வம் மற்றும் நேர்மறை ஆற்றலின் சீரான ஓட்டத்தையும் வழங்குகிறது. வழக்கமாக வீட்டை தூய்மையாக வைத்திருப்பது நிதி வளர்ச்சியை நோக்கிய உங்கள் பாதையைத் தடுக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலை விரட்டுகிறது.
அக்னி மூலை
'அக்னி மூலை' என்று அழைக்கப்படும் 'தென் கிழக்கு மண்டலம்', வாஸ்து சாஸ்திரத்தின்படி பணப்புழக்கம் அதிக இருக்கும் மற்றும் வருமான ஆதாரங்களை அதிகரிக்கும் பகுதியை குறிப்பதாகும். இது உங்கள் செல்வ வளத்தை அதிகரிக்க உதவும் முக்கியமான பகுதியாகும்.
எனவே, பாதுகாப்பான லாக்கரை வடகிழக்கு திசையை நோக்கி வைக்க வேண்டும். பின்னர் நிலையான நிதி நன்மைகள் உங்களைத் தேடி வரும் மற்றும் உங்கள் செல்வத்தை விரைவாக இருமடங்கு மும்மடங்கு அதிகரிக்கலாம்.



Click it and Unblock the Notifications
