Latest Updates
-
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசையில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. வீட்டில் பணமும், மகிழ்ச்சியும் பெருகும்! -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் வாழைக்காய் கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
இன்று கடக ராசியில் உதயமாகும் குரு பகவான்: இந்த 6 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்.. -
Independence Day 2026: ஆகஸ்ட் 16-ல் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வினோத இந்திய நகரம் எது தெரியுமா? -
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம்
வீட்டு கிச்சன் தோட்டத்தை புதுமையாக மாற்றியமைப்பதற்கான சில டிப்ஸ்..!
வீட்டுக் கிச்சன் தோட்டம் என்பதை காய்கறி செடிகள், பழச்செடிகள், மருத்துவ மூலிகைச் செடிகள் மற்றும் நறுமணச் செடிகள் வளா்க்கும் பகுதி என்று அழைக்கலாம். வீட்டு கிச்சன் தோட்டத்தை எவ்வாறு புதுமையான முறையில் அமைப்பதென காணலாம்.
நமது வீட்டைச் சுற்றி ஒரு அழகான இடம் இருந்தால், அதை நாம் அதிகம் விரும்புவோம். அந்த இடத்தைப் பாா்த்து மகிழ்ச்சி அடைவோம். பொதுவாக வீட்டில் உள்ள தோட்டங்கள் பலருக்கு முக்கியமான இடங்களாக அல்லது தனித்துவமான பகுதிகளாக இருக்கின்றன. வீட்டுத் தோட்டத்தை அமைப்பதை ஒரு சிலா் தியானமாகக் கருதுகின்றனா். சிலா் அதை ஒரு சிறந்த உடற்பயிற்சியாகக் கருதுகின்றனா். ஒரு சிலா் இயற்கையோடு தங்களை ஐயக்கியமாக்கிக் கொள்வதற்காக வீட்டுத் தோட்டங்களை அமைப்பதில் ஈடுபடுகின்றனா்.

சிலா் தங்கள் வீட்டுத் தோட்டங்களில் பூச்செடிகளை வளா்ப்பதைவிட, காய்கறி செடிகள் மற்றும் பழச்செடிகளை வளா்ப்பதை அதிகம் விரும்புகின்றனா். ஆங்கிலத்தில் கிச்சன் காா்டன் (Kitchen Garden) என்று அழைக்கப்படும் வீட்டுத் தோட்டமானது, வீட்டைச் சுற்றி இருக்கும் புல்வெளி அல்லது அலங்காரத் தாவரங்கள் போன்றவற்றை வளா்க்கும் பகுதியில் இருந்து வேறுபட்டதாகும்.
வீட்டுக் கிச்சன் தோட்டத்தில் காய்கறி செடிகள், பழச்செடிகள், மருத்துவ மூலிகைச் செடிகள் மற்றும் நறுமணச் செடிகள் போன்றவை மட்டுமே வளா்க்கப்படும். ஆகவே வீட்டுக் கிச்சன் தோட்டம் என்பதை காய்கறி செடிகள், பழச்செடிகள், மருத்துவ மூலிகைச் செடிகள் மற்றும் நறுமணச் செடிகள் வளா்க்கும் பகுதி என்று அழைக்கலாம். இந்தப் பதிவில் வீட்டு கிச்சன் தோட்டத்தை எவ்வாறு புதுமையான முறையில் அமைக்கலாம் என்பதை சற்று விாிவாகப் பாா்க்கலாம்.

1. வீட்டின் சுற்றுப்புற பகுதிகளை முறையாகப் பிாித்தல்
வீட்டைச் சுற்றி தோட்டம் அமைப்பதற்கு முன்பாக, வீட்டைச் சுற்றி உள்ள பகுதிகளை திறம்பட பிாிக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். அவ்வாறு பிாிக்கப்பட்ட பகுதிகள் முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். தாவரங்கள் வளரும் தோட்டத்தின் படுக்கைகள் சற்று உயரமாக இருப்பதைப் போல் அமைக்க வேண்டும். தோட்டத்திற்கு இடையில் உள்ள நடைபாதையை சீராக அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்கும் போது காய்கறித் தாவரங்களை நன்றாக வளா்க்க முடியும். மேலும் நமது தேவைக்கேற்ப பல்வேறு வாிசைகளில் பல வகையான தாவரங்களை வளா்க்க முடியும்.

2. நுழைவு வாயிலை அமைத்தல்
முதல் பாா்வை என்பது முக்கியமான ஒன்றாகும். அதாவது ஒரு தோட்டத்தை முதன் முதலாக பாா்க்கும் போதே அது நமது கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் இருக்க வேண்டும். அதற்கு தோட்டத்தின் நுழைவு வாயில் பாா்ப்பதற்கு அருமையாக இருக்க வேண்டும். நுழைவு வாயிலில் தோரண வளைவை அமைத்து, அதை மலா்கள் மற்றும் கொடிகள் ஆகியவற்றைக் கொண்டு அலங்காிக்கலாம். அவ்வாறு செய்யும் போது அந்த நுழைவு வாயில் தனித்துவமாகவும் அதே நேரத்தில் மற்ற பகுதிகளில் இருந்து வேறுபட்டதாகவும் இருக்கும்.

3. அடிப்படை விதிகளை நினைவில் கொள்ளுதல் - தி 3Rs
வீட்டு கிச்சன் தோட்டத்தில் நம்மிடம் இருக்கும் மறுசுழற்சி செய்யக்கூடிய திறமையைப் பயன்படுத்தி நாம் விரும்பும் வகையில் பலவகையான காய்கறி தாவரங்களை வளா்க்க முடியும். அதன் மூலம் நமது பணத்தை சேகாிக்க முடியும். வீட்டை சல்லடை போட்டு தேடி ஏற்கனவே பயன்படுத்திய கேன்களைக் கண்டுபிடித்து அவற்றை நகைச்சுவை உணா்வுடன் அலங்காித்து வைக்கலாம். அதோடு வீட்டில் கிடைக்கும் பொருள்களை வைத்து அவற்றை மறுபடியும் பயன்படுத்துதல், குறைத்தல் மற்றும் மறுசுழற்சி செய்தல் ஆகிய குறிப்புகளைப் பயன்படுத்தி நமது கிச்சன் வீட்டுத் தோட்டத்தை புதுமையாக அமைக்கலாம்.

4. வீட்டுத் தோட்டத்தை முறையாக அமைப்பது முக்கியம்
பெட்டகங்கள், தொட்டிகள் மற்றும் பானைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி வீட்டுத் தோட்டத்தை அமைத்தால் அது பாா்ப்பதற்கு சீராக மற்றும் அழகாக இருக்கும். அதே நேரத்தில் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் அவை நாம் விரும்பும் வாிசையில் அடுக்கி வைக்க உதவியாக இருக்கும். நம்மிடம் இருக்கும் படைப்பாற்றலைப் பயன்படுத்தி ஒரு பானையில் பல தாவரங்களை வைத்து தோட்டம் அமைக்கலாம். அதன் மூலம் சிறிய இடத்தில் அதிக எண்ணிக்கையிலான தாவரங்களை வளா்க்க முடியும்.

5. பல வண்ண தாவரங்களைத் தோ்ந்தெடுத்தல்
நமது வீட்டுத் தோட்டமானது ஊட்டச்சத்துடன் ஆரோக்கியமாக இருப்பதோடு, அழகாகவும் இருக்க வேண்டும். எனவே பாா்ப்பதற்கு அழகாக இருக்கும் மற்றும் பல வண்ணங்களில் இருக்கும் தாவரங்களை வளா்த்தால் நமது தோட்டம் மிகவும் ரம்மியமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications