For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செடிகள் செழிப்பாக வளர வேண்டுமா?

By Maha
|

Gardening
வீட்டில் ஆசைக்காகவும், அழகுக்காகவும் வளர்க்கும் செடிகள் நன்கு செழிப்பாப வளர வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். முயற்சி என்றதும் உடனே கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தலாம் என்று தானே நினைத்திருப்பீர்கள். ஆனால் அவ்வாறு கெமிக்கல் கலந்த பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தி செடிகளை வளர்ப்பதை விட, ஈஸியான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களிலேயே செடிகளுக்கு ஏற்ற உரம் மற்றும் பூச்சிக் கொல்லிகள் இருக்கின்றன. அது என்னென்னவென்று படித்து தெரிந்து கொண்டு, தோட்டத்தில் இருக்கும் செடிகளை செழிப்பாக வளரச் செய்யுங்கள்...

செடிகள் செழிப்பாக வளர...

1. வீட்டில் சமைக்க பயன்படுத்தும் பூண்டை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும். பின் அந்த தண்ணீரை தோட்டத்தில் உள்ள பூச்சிகளால் பாதிக்கப்பட்ட செடிகளின் மீது தெளித்தால், பூச்சிகள் அழிந்துவிடும். இதனால் செடிகளானது எந்த ஒரு பூச்சிகளாலும் தாக்கப்படாமல் இருக்கும்.

2. வெள்ளை அல்லது ஆப்பிள் பழச்சாற்றால் ஆன வினிகரை, தண்ணீரில் கலந்து, செடிகளின் மீது தெளித்தால் களை மற்றும் பூச்சிகள் அழிந்து, செடிகளின் வளர்ச்சியானது அதிகரிக்கும். இந்த கலவையை ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு கூட சேமித்து வைக்க முடியும்.

3. வேப்ப இலை ஒரு சிறந்த இயற்கை உரம். இந்த உரத்தை எளிதில் வீட்டிலேயே தயாரிக்க முடியும். அதற்கு சிறிது வேப்பிலையை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அந்த நீரை தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தெளிக்க வேண்டும். அதனால் தோட்டத்தில் செடிகளை தாக்கும் பூச்சிகள், வண்டுகள் அழியும். மேலும் தோட்டத்தில் பாம்புகள் வராமலும் இருக்கும். அதிலும் வேப்பிலை கொசுக்கள் மற்றும் சிலந்திகளையும் அழித்துவிடும்.

4. வீட்டில் உடம்பு சரியில்லை என்று வாங்கி வைத்திருக்கும் மாத்திரைகளை செடிகளுக்கு பொடி செய்து தூவினால், செடிகள் நன்கு செழிப்பாக வளரும்.

5. தண்ணீரை கொதிக்க வைத்து செடிகள் இருக்கும் நிலத்தில் ஊற்றலாம். இதனால் நிலத்தில் இருக்கும் பாக்டீரியா, பாசி மற்றும் எறும்புகள் அழிந்துவிடும். வேண்டுமென்றால் மிளகுத்தூள் அல்லது உப்பு சேர்த்து கூட ஊற்றலாம்.

இவ்வாறு இயற்கையான முறையில் வீட்டில் இருக்கும் பொட்களை வைத்து செய்து, செடிகளை செழிப்பாக வளர்த்து சந்தோஷப்படுங்கள்.

English summary

natural alternatives for garden chemicals | செடிகள் செழிப்பாக வளர வேண்டுமா?

To maintain your garden plants and trees, you use chemicals to control pests and fertilizers to improve the growth of the plants. Instead of using harsh chemicals in your garden, go natural by using eco-friendly alternatives! Take a look at the easily available natural alternatives for your garden.
Story first published: Thursday, July 19, 2012, 17:43 [IST]
Desktop Bottom Promotion