Latest Updates
-
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்.. -
Malai Ice Cream: கொளுத்துற வெயிலுக்கு வெறும் 4 பொருளை வெச்சு குளுகுளு-ன்னு இப்படி ஐஸ்க்ரீம் செய்யுங்க.. -
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்
காதலை உணர்த்தும் மணம் தரும் மலர்கள்

சிவப்பு ரோஜா
காதலை தெரிவிக்க அனைவரும் உபயோகிக்கும் மலர் சிவப்பு ரோஜா. இது உணர்வுப் பூர்வமாக வெளிப்படுத்த ஏற்ற மலர். இந்த சிவப்பு ரோஜாக்களை தோட்டத்தில் வளர்த்து பராமரித்தால் வீட்டிற்குள் காதலுக்கு பஞ்சமிருக்காது. இதனை வீட்டிற்குள்ளேயும் வளர்க்கலாம். தினந்தோறும் ஒருமுறை தண்ணீர் விட்டாலே போதுமானது. நாள்தோறும் இரண்டு முதல் நான்கு மணிநேரம் சூரிய ஒளியில் வைக்கவேண்டும்.
மணம் தரும் பெருங்கள்ளி
புளுமெரியா என்றும் பெருங்கள்ளி என்றும் அழைக்கப்படும் இந்த மலர்கள் எண்ணற்ற மணம் தரக்கூடியவை. இது மஞ்சள், பிங்க் என பல வர்ணங்களில் காணப்படுகின்றன. எளிதில் வளரும் வீட்டிற்குள்ளேயும் வளர்க்கலாம். குளுமையான சீதோஷ்ணமே போதுமானது. மனதிற்கு இதம் தரும் மலர் இது.
மயக்கும் மல்லிகை
மல்லிகை மணத்திற்கு மயங்காதவர் எவரும் இல்லை. இந்த மலர்களின் மணம் தம்பதியருக்கு ஏற்றது. காதலை வெளிப்படுத்த ஒரு முழம் மல்லிகையை கொடுத்து துணையை வழிக்கு கொண்டுவந்தவர்கள் ஏராளம். இந்த மல்லிகையை வீட்டுத் தோட்டத்தில் வைத்த வளர்த்தால் மணத்தோடு மனதிற்கு இதம் தரும். சரியான அளவில் தண்ணீர் விட்டு வளர்த்தால் நீண்ட காலத்திற்கு நறுமணம் தரும் மல்லிகை மலர்களை தரும்..
துலிப் மலர்கள்
துலிப் மலர்கள் கண்களை கவர்வதோடு மனதிற்கும் இதம் தரும் செந்நிறம் மட்டுமல்லாது பல வண்ணங்களில் இது கிடைக்கிறது. துணையின் எண்ணத்தையும், மனதையும் மாற்றுவதில் இந்த மலர்களுக்கு ஈடு இல்லை. இந்த மலர்களை தோட்டத்தில் வளர்ப்பது கண்ணுக்கு இதம் தருவதோடு காதலையும் வளர்க்கும் என்கின்றனர் தோட்டக்கலை நிபுணர்கள்.



Click it and Unblock the Notifications











