Latest Updates
-
சூரியன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், வெற்றிகளையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
1 கப் மீல் மேக்கர் இருந்தா இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - சாதம், சப்பாத்தி எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி குழந்தைகள் படிப்பில் கெட்டிக்காரர்களாக பெரிய சாதனையாளர்களாக வருவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முட்டை சால்னாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
மின்விசிறிகளில் ஏன் எப்போதும் மூன்று இறக்கைகள் மட்டுமே உள்ளது தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
1 கப் பாஸ்மதி அரிசி இருந்தா இந்த காஷ்மீர் பேமஸ் யக்னி புலாவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
ஜூலை 16-ல் நிகழும் சூரியன்-சந்திரன் அரிய சேர்க்க: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்க போகுதாம் - உங்க ராசி என்ன? -
இந்த அறிகுறிகளில் ஒன்று உங்கள் வீட்டில் இருந்தாலும் நீங்க பணக்கஷ்டத்தில் சிக்க போறீங்களாம் - சாணக்கிய தந்திரம் -
சேமியா உப்புமாவும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஜூலை 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்குமாம்
தீபாவளி அன்று இந்த பொருட்களை வாங்கி பூஜை அறையில் வெச்சா... ஆண்டு முழுவதும் பணம் பெருகும்.. தெரியுமா?
Diwali 2023: இந்தியாவில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை தான் தீபாவளி. இந்த தீபாவளி பண்டிகையன்று மக்கள் வெறும் பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவதைத் தவிர, ஆண்டு முழுவதும் வீடு செல்வ செழிப்போடு இருக்க சில சிறப்பான நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்கள்.
தமிழ்நாட்டில் தான் இப்பண்டிகை ஒரு நாள் கொண்டாடப்படுகிறது. ஆனால் வட இந்தியாவில் 5 நாட்கள் தீபாவளி கொண்டாடப்படுகிறது. மேலும் தீபாவளி பண்டிகையன்று, வீட்டில் செல்வம் பெருக வாஸ்து மற்றும் ஜோதிடத்தில் ஒருசில நடவடிக்கைகள் மேற்கொள்ள கூறப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, அது வீட்டிற்கு செல்வத்தைக் கொண்டு வருவதோடு, வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை வெளியேற்றும். நீங்களும் உங்கள் வீட்டில் செல்வம் பெருக வேண்டுமென விரும்புகிறீர்களா? அப்படியானால் தீபாவளி நாளில் உங்கள் வீட்டின் பூஜை அறையில் ஒருசில பொருட்களை வாங்கி வையுங்கள். இப்போது அப்படிப்பட்ட பொருட்கள் என்னவென்பதைக் காண்போம்.
வெள்ளி நாணயம் (Silver Coin)
வெள்ளி உலோகமானது சந்திரனின் காரணியாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட வெள்ளி நாணயத்தை தீபாவளி நாளன்று வாங்கி வீட்டின் பூஜை அறையில் வைத்தால், அது வீட்டிற்கு செழிப்பை கொண்டு வருதோடு, மன அமைதியைத் தரும்.
மேலும் வெள்ளி உலோகமானது லட்சுமி தேவியின் விருப்பமான உலோகமாக கருதப்படுகிறது. இந்த வெள்ளி நாணயத்தை எப்போதும் வீட்டின் பூஜை அறையில் வைத்திருந்தால், அது லட்சுமி தேவியை ஈர்த்து வீட்டில் நிலைத்திருக்கச் செய்வதோடு, லட்சுமி தேவியின் ஆசியைப் பெற வைக்கும்.
லட்சுமி தேவியின் பாதங்கள் (Feet of Goddess Lakshmi)
வீட்டின் பூஜை அறையில் லட்சுமி தேவியின் பாதங்களை வைத்தால், அது வீட்டிற்கு சந்தோஷத்தைக் கொண்டு வரும். ஏனெனில் லட்சுமி தேவியின் பாதங்கள் நேர்மறை ஆற்றலை பரப்பும். இப்படிப்பட்ட செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியின் பாதங்களை தீபாவளி நாளன்று வாங்கி வீட்டின் பூஜை அறையில் வையுங்கள். இதனால் ஆண்டு முழுவதும் வீட்டில் செல்வம் பெருகும். லட்சுமி தேவியின் பாதங்களை மட்டுமின்றி, லட்சுமி தேவியின் சிலை அல்லது போட்டோவைக் கூட வாங்கி பூஜை அறையில் வைக்கலாம்.
ஸ்ரீ யந்திரம் (Shree Yantra)
ஸ்ரீ யந்திரம் நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் ஒரு சக்தி வாய்ந்த யந்திரமாக கருதப்படுகிறது. முக்கியமாக இந்த யந்திரத்தை வீட்டில் வைத்தால், அது வீட்டை செல்வ செழிப்போடு வைத்திருக்கும். அதுவும் இந்த ஸ்ரீ யந்திரத்தை தீபாவளி நாளில் வீட்டின் பூஜை அறையில் வைத்தால், அது வீட்டில் பண வரவை அதிகரித்து, வீட்டை எப்போதும் செழிப்பாக வைத்திருக்கும்.
ரங்கோலி (Rangoli)
பொதுவாக பண்டிகை நாட்களில் வீட்டிற்கு முன் அழகான கலர் கோலம் போட்டு, வீட்டு வாசலை அலங்கரிப்போம். இப்படி வீட்டின் வாசல் அழகாக இருந்தால், அது வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரிக்கும். அதுவும் தீபாவளி நாளில் நல்ல பெரிய அளவிலான ரங்கோலி கோலத்தை போட்டு கண்ணைக் கவரும் நிறங்களால் வண்ணமிட்டால், அது ஆண்டு முழுவதும் வீட்டிற்கு செல்வ செழிப்பைக் கொண்டு வரும்.
தாமரை மலர் (Lotus Flower)
தாமரை மலர் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியின் மிகவும் விருப்பமான மலராகும். இந்த தாமரை பூவை பொதுவாக வீட்டின் பூஜை அறையில் வைத்திருந்தால், வீட்டில் பணப்பிரச்சனையே வராது. அதுவும் தீபாவளிக்கு நீங்கள் பூஜை செய்பவராக இருந்தால், தாமரைப் பூவை வாங்கி வையுங்கள். இதனால் உங்கள் வீட்டில் லட்சுமி தேவி குடியேறி, வீட்டில் செல்வம் பெருக வழிவகை செய்வார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications