Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
உங்க வீட்டில் செல்வம் அதிகம் சேர வேண்டுமா? அப்ப இந்த பொருட்களை வாங்கி வீட்டுல வையுங்க...
வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்க ஒருசில பொருட்கள் உதவி புரியும். அந்த பொருட்களை வாங்கி வீட்டினுள் வைத்தால், வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிப்பதோடு, லட்சுமி தேவியும் மகிழ்ச்சியடைந்து, வீட்டில் செல்வம் சேரச் செய்வார்.
ஒருவரது வாழ்வில் வாஸ்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒருவர் குடியிருக்கும் வீடு வாஸ்துப்படி இல்லாவிட்டால், அந்த வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்காது மற்றும் வீட்டில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முக்கியமாக அந்த வீட்டில் பணம் சேராது, வறுமை அதிகரிக்கும். மேலும் வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகம் நிரம்பியிருக்கும்.

ஆனால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்க ஒருசில பொருட்கள் உதவி புரியும். அந்த பொருட்களை வாங்கி வீட்டினுள் வைத்தால், வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிப்பதோடு, லட்சுமி தேவியும் மகிழ்ச்சியடைந்து, வீட்டில் செல்வம் சேரச் செய்வார். இப்போது வாஸ்துப்படி வீட்டில் எந்த பொருட்களை வைத்தால் செல்வம் பெருகும் என்பதைக் காண்போம்.

உலோக யானை
வாஸ்துப்படி, பித்தளை அல்லது வெள்ளை யானையை வீட்டில் வைத்திருப்பது நல்லது. இந்து மதத்தில் யானை விநாயகராக வணங்கப்படுகிறது. மேலும் யானை செழிப்பின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. எனவே வீட்டில் செல்வம் பெருக வேண்டுமானால், உலோகத்தால் ஆன யானை சிலையை வாங்கி வையுங்கள்.

உலோக ஆமை
லட்சுமி தேவி ஆமையில் வசிப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. அதனால் தான் உலோக ஆமைகளை வீட்டில் வைப்பது நல்லது. அதுவும் அந்த ஆமையானது வீட்டினுள் நுழைவது போன்று இருக்க வேண்டும். இப்படி வைப்பதன் மூலம் வீட்டினுள் நேர்மறை ஆற்றல் அதிகம் நுழைவ்தோடு, வீட்டின் செல்வ நிலையும் மேம்படும்.

குதிரை லாடம்
குதிரை லாடத்தை வீட்டில் வைத்திருப்பது எதிர்மறை ஆற்றலை வெளியேற்றும். அதனால் தான் குதிரை லாடத்தை வீட்டின் முன் வைக்க வேண்டுமென்று சொல்கிறார்கள். மேலும் இந்த குதிரை காலணியை பணம் வைக்கும் இடத்திலும் வைக்கலாம்.

சிரிக்கும் புத்தர்
வாஸ்துப்படி, சிரிக்கும் புத்தரை வீட்டில் வைத்திருப்பது நல்லதாக கருதப்படுகிறது. அதுவும் வடகிழக்கு திசையை நோக்கி வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இப்படி வைப்பதன் மூலம் வீட்டில் செல்வத்திற்கும், தானியத்திற்கும் பஞ்சம் ஏற்படாது. இந்த சிரிக்கும் புத்தரை ஒருவருக்கு பரிசாகவும் வழங்கலாம். இப்படி செய்வதன் மூலம் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிரம்பியிருக்கும்.

வலம்புரி சங்கு
வாஸ்துப்படி, வலம்புரி சங்கு லட்சுமி தேவியுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. அதுவும் இந்த சங்கை புதன்கிழமைகளில் வீட்டில் பூஜை செய்து பணம் வைக்கும் பெட்டியில் வைக்க வேண்டும். இதனால் அந்த வீட்டின் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும், வாழ்வில் மகிழ்ச்சி பெருகும் மற்றும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் கிடைத்து, அந்த வீடு செல்வ செழிப்போடு இருக்கும்.



Click it and Unblock the Notifications