Just In
- 5 hrs ago
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- 6 hrs ago
தலைசுற்ற வைக்கும் உலகின் கொடூரமான பாலியல் ஆசைகள்... இப்படிலாம் கூடவா ஆசைப்படுவாங்க...!
- 10 hrs ago
இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் பணப் பிரச்சனையை சந்திப்பாங்களாம்...
- 11 hrs ago
இன்றைய ராசிப்பலன் (24.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வாகனங்களை மிகவும் கவனமாக ஓட்டணும்…
Don't Miss
- News
'உலகத் தலைவர்' மோடி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இப்படி அழைத்தது உண்மையா?
- Finance
செம சரிவில் தங்கம் விலை.. தங்கத்தை அள்ள இது சரியான நேரமா? இன்னும் குறையுமா?
- Movies
அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ!
- Sports
என்ன ஆட்டமா காட்டுறீங்க? வீரர்களுக்காக களமிறங்கிய ரவி சாஸ்திரி.. கதறிய ஆஸி. வெளியான ரகசியம்!
- Automobiles
ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் உடன் பிரபலமான கியா செல்டோஸ் கார் எப்படி இருக்கும்?! க்ரெட்டாவின் ஆதிக்கத்தை உடைக்குமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த காலத்திற்கேற்ப எப்படி மாடர்னாக வீட்டை அலங்காரம் செய்வது?
நவீன உட்புற நிறங்கள் மற்றும் வடிவமைப்பு போக்குகள் மக்களின் கலாச்சார உத்வேகத்தை பிரதிபலிக்கின்றன, இந்த நவீன உட்புற அலங்காரங்கள், ஒருவருக்கொருவர் ஆதரவாகவும், பூமியைப் பாதுகாப்பதற்கும், தங்களை சமூகத்தில் இணைத்துக் கொள்வதற்கும் ஏற்படுத்தப்படுகின்றன.
இதற்காக செலவு செய்யப்படும் பணம் அழியகூடியதாக இல்லாமல், மனிதனுக்கு ஆயுளை நீடிக்கும் ஒரு வரமாகவே கருத்தப்படுகிறது. விசித்திரமான, தைரியமான , பலமுறை மாற்றி கொண்டே இருக்கும் விலையுயர்ந்த செலவுகள் இன்று காணமல் போய்விட்டன. நியாயமான முறையில், நடைமுறை, சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத, மற்றும் வசதியான, செயல்திறன் மிக்க, இனிமையான மற்றும் நவீன உட்புறங்களை உருவாக்குவதற்கான வடிவமைப்பு போக்குகள் இப்போது நடைமுறையில் உள்ளன.
இவையே இந்த 2018ம் ஆண்டின் ட்ரென்ட் ஆகும். இத்தகைய அறிவார்ந்த அலங்கரிப்பு மற்றும் வடிவமைப்பு பற்றிய விளக்கங்களை தர வந்துள்ளது.
குடும்பத்தின் மீது அக்கறை, அன்பு, வேலை மற்றும் உறவுகளிடம் வெற்றி, ஆகியவை மக்களிடையே தொடர்பிற்கான தரத்தை அதிகப்படுத்துகிறது. நவீன உட்புற அலங்காரம், இந்த தொடர்பை அதிகப்படுத்த உதவுகிறது.
பணத்தையும் நேரத்தையும் மிச்சபடுத்தி அதே சமயம், அழகான முறையில் அலங்கரிக்கப்பட்ட அறைகள் மற்றும் வீடுகளினால், சந்தோஷமாக உறவுகளிடம் கலந்து பேசும் சூழலை உருவாக்குகிறது. அதிக பணம் செலவு செய்து புதியவற்றை உருவாக் குவதை விட , நம் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு அழகாக எப்படி வீட்டை காண்பிப்பது என்பதை இந்த நவீன உட்கட்டமைப்பு 2018 நமக்கு விளக்குகிறது.

வசதி:
ஒரு அறை எந்த அளவிற்கு நமக்கு வசதியாக பிரிக்கப்படுகிறதோ அந்த அளவிற்கு நமக்கு வசதியை தருகிறது . அறையில் ஒளி ஊடுருவும் பகுதி, படிக்கும் வசதி, ஒவ்வொரு வேலை செய்வதற்கான தனி இடம், ஆகியவற்றை சமீபத்திய மக்கள் ஒரு அறையில் விரும்புகின்றனர்.
வெளிப்டும் இடமாக, நம்மை ரிலாக்ஸ் செய்து கொள்ள ஒரு வசதியான இடம் ஒரு அறைக்கு மிகவும் அவசியம். நவீன உட்புற கட்டமைப்புகளில், இத்தகைய அழகான மற்றும் வசதியான இடங்கள் வெகுவாக இடம்பிடிகின்றன.
அறையின் சிறிய பகுதியையும் அழகாக அலங்கரிக்கும்போது, வீடு அல்லது அலுவலகம் மிகவும் அழகாக மற்றும் வசதியாக உணரப்படுகிறது.

வண்ண வண்ண பலேட் :
பச்சை நிறமும், பழுப்பு நிறமும் கலந்த நிறங்கள் 2018ம் ஆண்டில் அதிகம் பேரால் தேர்வு செய்யப்படும் அறை அலங்கார நிறங்களாக உள்ளன. இவற்றுடன் இணைந்து நீலம், வெள்ளை, கருப்பு , அடர் சிவப்பு, மென்மையான ஆரஞ்சு , மஞ்சள் போன்ற நிறங்கள் சேர்க்கப்படுகின்றன.
இத்தகைய நிறங்கள் கொண்ட அறைகள் வெதுவெதுப்பாக மற்றும் வசதியாக உணரப்படுகின்றன. இந்த நிறங்களில், மின்னும் துகள்களாக கிரே அல்லது தங்க நிறத்தை சேர்க்கும்போது, மிகவும் அழகான அறைகள் நமக்கு கிடைக்கின்றன.
இவை, நவீன நிற திட்டத்தை சமன் செய்வதாக உள்ளன. நவீன உட்புற அலங்காரங்களுக்கு, தாமிரம் மற்றும் வெண்கலம் மேலும் அழகு சேர்க்கின்றன. வெண்மை நிறம், கிரே, டெர்ர கோட்டா, சிவப்பு, போன்ற நிறங்கள் அலங்காரங்களுக்கு உகந்தவையாக உள்ளன.

விளக்குகள் :
சிறிய இடங்களுக்கு, மிதமான் பழுப்பு நிறம் கொண்ட இயற்கை மரம் கொண்ட நிறங்கள் அழகாக தோன்றும். அடர் பழுப்பு நிறம், கட்டிடத்திற்கு ஒரு வசதியான தோற்றத்தை கொடுக்கிறது. கார்க் பயன்படுத்துவதால், தரை மட்டும் அழகாக தோற்றமளிப்பது இல்லை, கதவுகளுக்கும், சுவர்களுக்கும் கூட இவற்றை பயன்படுத்தலாம்.
அழகான மர வேலைக்கு பிறகு, அறைக்கு அழகான வெளிச்சம் தேவைப்படுகிறது. அழகான வண்ண விளக்குகள் அமைத்தவுடன், அந்த ஒளியில் அறை விசாலமானதாக , அழகாக மற்றும் வசதியாக காட்சியளிக்கும்.

எளிய வடிவங்கள் :
எளிமையான கோடுகள் மற்றும் வடிவங்கள் கூட ஒரு வகை ட்ரென்ட் தான். நவீன உட்புற அலங்காரத்தில், வடிவியல் சார்ந்த, சுத்தமான, சிறிய வளைவுகள் கொண்ட வடிவத்திற்கு அதிக மதிப்பு உண்டு. மினிமலிஸ்ட், ஸ்காண்டிநேவிய மற்றும் உயர் தொழில்நுட்ப பாணிகள், அதேபோல் ரெட்ரோ-நவீன வடிவமைப்புகளின் செல்வாக்கு ஆகியவை 2018 இல் உள்துறை வடிவமைப்பிற்கான ஸ்டைலான விருப்பங்கள் ஆகும்.

மறுசுழற்சி :
வியக்கத்தக்க திறமைகளை நிரூபிப்பதற்கு கூடுதலாக, மறுசுழற்சி திட்டங்களை கவர்ச்சிகரமான, தனிப்பட்ட அலங்காரம் மற்றும் கலைப்படைப்புகளாக உருவாக்க வேண்டியது அவசியம், இத்தகைய படைப்புகள், அறை அலங்கரித்தல், சமநிலைப்படுத்தும் வண்ண திட்டங்கள் போன்றவற்றோடு இணைந்து இருத்தல் அவசியம்.

குறைந்த பட்ஜெட் :
தற்போதுள்ள அலங்கார ஆபரணங்களுடன் கூடிய புதிய வண்ண கலவையை கண்டுபிடித்து, ஆக்கப்பூர்வமாகவும் கவர்ச்சியுடனான கலப்பு கலவையுடனும், புதிய கருப்பொருள்கள் பயன்படுத்தி, மறுசுழற்சி செய்வதற்கும், வீட்டை அலங்கரிக்கும் வகையில் மலிவான திட்டங்களால் ஒருங்கிணைப்பதற்கும் இந்த கட்டமைப்புகள் பயன்படுகின்றன.

கார்பென்ட்ரி :
மர வேலை திட்டங்கள் உள்துறை வடிவமைப்பு யோசனைகளை அதிகரிக்கிறது, இவை அறையை வசதியாக மற்றும் விசாலமாக மாற்ற வைக்கிறது. மட்பாண்டம், உலோகம், கண்ணாடி போன்றவற்றை மாற சாமான்களோடு இணைந்து பயன்படுத்தி மேலும் அழகிய ரசனையை உருவாக்கலாம்.
டெர்ரா கோட்டா டைல்ஸ் , பீங்கான் குடுவைகள், வீட்டு பொருட்கள், ஓவியம் போன்றவை நவீன் அழகை பிரதிபலிகின்றன. பளபளப்பான ஓடு வடிவமைப்புகள், கண்ணாடி, மற்றும் உலோக கூறுகள் 2018 ஆம் ஆண்டில் நவீன உட்புறங்களில் நேர்த்தியான பிரகாசம் கொண்டு வருகின்றன.
மெட்டல் தளபாடங்கள், படம் பிரேம்கள், லைட்டிங் சாதனங்கள், சுவர் பேனல்கள் மற்றும் வன்பொருள்கள் ஸ்டைலான, பிரத்தியேக மற்றும் பிரகாசமான நிறங்களைக் காணலாம்.