நீங்களே செய்யக்கூடிய டாய்லெட் கிளீனர்கள்!

Posted By: Super Admin
Subscribe to Boldsky

ரசாயன டாய்லெட் க்ளீனரின் லேபிளை எப்போதாவது நீங்கள் படித்து பார்த்துள்ளீர்களா? அதன் மூலப்பொருட்களை நீங்கள் பார்த்திருந்தால், அவை உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பாக, உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில், இத்தகைய ஆபத்தான பொருட்கள் அவர்களிடம் இருந்து தள்ளி இருக்கிறதா என்பதை ஒரு முறைக்கு இருமுறை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அதனால் தான் எப்போதுமே வீட்டில் தயார் செய்யும் மூலப்பொருட்களை பயன்படுத்துவது சிறப்பாகும். அவை அதிக பாதுகாப்பை அளிப்பதோடு குறைந்த விலையிலும் கிடைக்கும். சில எளிய மூலப்பொருட்களுடன் உங்கள் வீட்டிற்கான டாய்லெட் க்ளீனர்களை நீங்களே தயார் செய்து கொள்ளலாம்.

இதன் மூலம் உங்கள் கழிவறைகளை சுத்தமாகவும் நற்பதமாகவும் வைத்துக் கொள்ளலாம். நீங்களே தயார் செய்து கொள்ளும் டாய்லெட் க்ளீனர்களால் கிடைக்கும் முக்கியமான பயன்களில் மற்றொன்று என்னவென்றால், ஆபத்தான நச்சுக்கள் மற்றும் ரசாயனங்களிடம் இருந்து நீங்கள் விலகியே இருக்கலாம்.

சந்தையில் கிடைக்கும் டாய்லெட் க்ளீனர்களில் உள்ள ஹைட்ரோக்ளோரிக் அமிலமானது செல்லப்பிராணிகள், குழந்தைகள் மற்றும் கழிவறையை கழுவும் நபர் ஆகிய அனைவருக்கும் மிகுந்த ஆபத்தை உண்டாக்கும்.

உங்கள் நாசி பாதை, தொண்டை மற்றும் கண்களுக்கு மிகவும் ஆபத்தானது இந்த அமில ஆவி. நீங்கள் எப்படி தான் முகத்திற் மூடிக்கொண்டாலும் கூட உங்கள் கண்கள் திறந்த வண்ணம் தான் இருக்கும். இத்தகைய அமில ஆவி நம் சருமத்தையும் கண்களையும் அரிக்கும்.

இவ்வளவு இந்த எதிர்மறை அம்சங்களை கொண்டுள்ளதால், இயற்கையான மூலப்பொருட்கள் சிறந்த தேர்வாக இருக்கும் என உங்களுக்கு தோன்றுகிறது தானே? நீங்களே தயார் செய்யும் டாய்லெட் க்ளீனர்களுக்கான மூலப்பொருட்கள் உங்கள் சமையலறையிலேயே கிடைக்கும்.

அதனால் நாங்கள் கூறப்போகும் சில நீங்களே தயார் செய்யக்கூடிய டாய்லெட் க்ளீனர்களை பற்றி நன்றாக தெரிந்து கொண்டு அவற்றை சீராக பயன்படுத்தி வரவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. வெள்ளை வினிகர்:

1. வெள்ளை வினிகர்:

இது நாள் வரை இது கோழியை ஊற வைக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது என நீங்கள் நினைத்திருக்கலாம். இருப்பினும், இவை உங்கள் கழிவறையையும் சுத்தமாக வைத்திருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா? வினிகரில் உள்ள அமிலத்தன்மை கறையை நீக்கும். இது விஷக்கிருமிகளை நீக்கி, கெட்ட வாடையை நீக்கும். பயன்படுத்துவதற்கும் இது மிகவும் பாதுகாப்பானது.

2. டீ ட்ரீ எண்ணெய்:

2. டீ ட்ரீ எண்ணெய்:

இயற்கையான டாய்லெட் க்ளீனரில் டீ ட்ரீ எண்ணெய்யும் அடங்கும். ½ கப் பேக்கிங் சோடா மற்றும் டீ ட்ரீ எண்ணெய்யுடன் 1 கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இந்த கரைசலை கழிவறை கோப்பை மீது ஊற்றி விட்டு, சிறிது நேரம் காத்திருக்கவும். பின் தண்ணீரை கொண்டு கழுவிய பின் நிகழும் அதிசயத்தை பாருங்கள்!

3. போராக்ஸ் (வெண்காரம்) கரைசல்:

3. போராக்ஸ் (வெண்காரம்) கரைசல்:

தேவையானது ¾ கப் போராக்ஸ் போடி, சில துளி எலுமிச்சம் அதிமுக்கிய எண்ணெய், 1 கப் வெள்ளை வினிகர் மற்றும் சில துளி லாவெண்டர் எண்ணெய். இப்போது கழிவறை கோப்பையை கரடுமுரடான பிரஷை கொண்டு நன்றாக தேய்த்த பின், இந்த கரைசலை அதன் மீது தெளிக்கவும். இரவு அப்படியே விட்டு விட்டு, மறுநாள் காலையில் கழுவவும்.

4. வினிகரும் பேக்கிங் சோடாவும்:

4. வினிகரும் பேக்கிங் சோடாவும்:

பளிச்சென மின்னிடும் கழிவறை கோப்பை வேண்டுமா? பேக்கிங் சோடாவுடன் கொஞ்சம் வெள்ளை வினிகரை சேர்த்து கரைசல் ஒன்றை தயார் செய்து கொள்ளவும். அதனை கழிவறை கோப்பையின் மீது தெளிக்கவும். கழிவறை தரையை சுத்தம் செய்யவும் இதனை பயன்படுத்தலாம். தெளித்த சிறிது நேரத்திற்கு பின், தண்ணீரை கொண்டு கழுவவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

DIY Toilet Cleaner Recipes

Read to know the best Diy toilet cleaner recipes. These are the natural cleaner recipes you should try for cleaner and neat toilet.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter