Latest Updates
-
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
வழக்கத்திற்கு மாறாக வீட்டை அலங்கரிக்க சில ஐடியாக்கள்...
பண்டிகைகள் என்றாலே வீட்டை சுத்தம் செய்தல், வண்ணம் தீட்டுதல், அலங்கரித்தல் ஆகியவை தான் முதன்மையாக கருதப்படும். அதிலும், பண்டிகை நாளன்று நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை கவர்வதற்கு நமது வீட்டை தயார் படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவோம். தற்போது பலர் தனது வீட்டை தனித்தன்மை வாய்ந்ததாக அலங்கரிக்க பெரிதும் செலவு செய்து வருகின்றனர். இதனை தவிர்த்து எளிமையாகவும், அழகாகவும் வீட்டை மறுசீரமைக்க சில வழிகளை படிக்கலாம்.
ஒரு சிலர் தனது வீட்டை அழகாக வைக்க ஆசைப்படுவார்கள். ஆனால், ஒரு சிலருக்கோ வீட்டை அலங்கரிப்பது என்பது முக்கியமான விருப்பமாக இருக்கக்கூடும். வீட்டை அலங்கரிக்கும் விருப்பம் நமது எண்ணங்களில் சில சமயங்களில் தான் வரும். முக்கியமாக நாம் அதை பற்றி நினைக்காத போது தான் தோன்றும். இந்த ஐடியாக்கள் வழக்கத்திற்கு மாறானவை தான். இருந்தாலும் செய்வதற்கு விளையாட்டாக இருக்கும். அதனால் உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட நேரம் இதோ வந்துவிட்டது. இதனை தொடங்குவதற்கான சில ஐடியாக்கள்.

அமைப்பு தன்மை பேசும்
இல்லத்தை வழக்கத்திற்கு மாறாக மாற்றுவதற்கான மிகச் சுலபமான வழிகளில் ஒன்று சுவர்களை நீங்களே அழகுப்படுத்துவதுதான் என உள்கட்டமைப்பு வடிவமைப்பாளர் கெட்கி பாசி அவர்கள் உணர்கின்றார். மேலும் அவர் "நீங்களே முயற்சி செய்து, உங்கள் சுவர்களுக்கு வண்ணம் தீட்டி அழகுப்படுத்தவும்." எனக் கூறுகின்றார்.
சிறிதளவு உறுதியான அமைப்பு
பூந்தொட்டிகளுக்கு சற்று உறுதியான பைப்பை உபயோகிக்கலாம். அதனை இல்லத்திலோ அல்லது ஜன்னலிலோ வைக்கலாம். இந்த அதிசய பூந்தொட்டி அனைவரையும் கவரும். மேலும் கெட்கி அவர்கள், "போன்சாய் மரங்களை அறைகளின் மூலைகளில் வைக்கலாம் அல்லது நுழைவாயிலில் வைத்து இல்லத்திற்கு புத்துயிர் அளிக்கலாம்" என்று சொல்கின்றார்.
கிளிஞ்சல்கள்
மெழுகுவர்த்தி ஹோல்டர்களில் கடற்கரையில் சேமித்த கிளிஞ்சல்களை வைக்கலாம். ஹோல்டரில் உள்ள மெட்டல் பகுதியை நீக்கி கிளிஞ்சல் மீது வைத்து, பின் அதில் உருக்கிய மெழுகை நிரப்பி, அதனை காய வைத்து உபயோகிப்பதன் மூலம், நீங்கள் கிளிஞ்சல்களை சேமித்த நினைவுகளை திரும்பி பெறலாம். உள்கட்டமைப்பு வடிவமைப்பாளர் மோஹித் ஜி நிஷார் அவர்கள் கூறுகையில் "இதனால் எல்லா வகை வடிவங்களிலும், எல்லா வகை வாசனைகளிலும், எல்லா வண்ணங்களிலும் மெழுகுவர்த்திகளைப் பெறலாம்." என கூறுகின்றார்.
தீப ஒளி
பெரிய செடிவிளக்கு ஒன்றை சாப்பாட்டு மேஜை மேலே தொங்கவிடவும். இது விருந்தினர்களுக்கு சாப்பிடும் போது, போதுமான வெளிச்சத்தை தருவது மட்டுமல்லாது, தேவையற்ற ஒளியை நீக்கவும் செய்யும். இதனால் இது உங்கள் சாப்பாட்டு அறையின் மேஜைக்கு, வழக்கத்திற்கு மாறான தோற்றத்தை அளிக்கும்.
மேஜையை அலங்கரித்தல்
சாப்பாட்டு மேஜையில் உணவு பரிமாறுவதற்கு முன்பு, அதனை அழகுப்படுத்த ஒவ்வொருவரின் இடத்திற்கு பக்கத்திலும் ஒரு சிறிய கிண்ணத்தில் வாசனை செடிகளை வைக்கவும்.
கண்ணாடி கைவினைப் பொருட்கள்
தொல்பொருள் கண்ணாடி கோப்பைகளை ஜன்னல்களில் வைத்தால், வெளியில் இருந்து வரும் ஒளியை மேலும் அழகுறச் செய்யும். மேலும் இது மங்கிய சுவர்களுக்கு புது வடிவம் தரும்.
மேஜை சட்டகம்
சிறிய மேஜை சட்டகத்தை பயன்படுத்தி, இரவு உணவு நேரத்தை அழகாக்கலாம். மேலும் மோஹித் அவர்கள், "இந்த சட்டகத்திற்கு பலவகை வடிவங்களில் வரும் கண்ணாடிகளை கொண்டு அலங்கரிக்கலாம்" எனக் கூறுகின்றார்.
சுவற்றில் ஏணி
மர ஏணியை குளியலறையில் வைத்து அதில் டவல்களை தொங்கவிடுங்கள். எப்பொழும் இருக்கும் டவல் ராக்கை விட இது அதிக அழகாக தெரியும்.
ட்ரன்க் பெட்டிகள்
பழைய சூட்கேஸ் அல்லது ட்ரன்க் பெட்டியை காபி மேசையாக மாற்றுங்கள்.



Click it and Unblock the Notifications